விவசாயக் கடனுக்கு மானியம்... மத்திய அமைச்சரவை !

வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அமைச்சரவை விவசாயக் கடன் வட்டிக்கு மானியம் வழங்க முடிவு செய்துள்ளது. 
விவசாயக் கடனுக்கு மானியம்... மத்திய அமைச்சரவை !
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச் சரவைக் கூட்டத்தில் வட்டி மானியம் 5 சதவீதம் அளிக்க ஒப்புதல் அளிக்கப் பட்டது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், 2017-18-ம் ஆண்டில் விவசாயி களுக்கான வட்டி மானியத் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப் பட்டது. 

இதன் மூலம், ஓராண்டு க்குள் திருப்பிச் செலுத்தும் வகையில், ரூ.3 லட்சம் வரை குறுகிய காலக் கடன் பெறும் விவசாயிகள், ஆண்டுக்கு 4% வீதம் மட்டுமே வட்டி செலுத் தினால் போதும். 

இந்தத் திட்டத்துக் காக ரூ.20,339 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும். தங்களது சொந்த நிதியைப் பயன் படுத்தும் பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள் 
ஆகிய வற்றுக்கு வட்டி மானியம் வழங்கப் படும். மண்டல ஊரக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கி களுக்கு மறு நிதியளிப் பதற்காக நபார்டு- க்கும் வட்டி மானியம் வழங்கப் படும்.

வட்டி மானியத் திட்டம், ஓராண்டு காலத்துக்கு நடைமுறையில் இருக்கும். இதனை நபார்டு மற்றும் ரிசர்வ் வங்கி செயல்படுத்தும்.

நாட்டில் வேளாண் உற்பத்தியை ஊக்கு விப்பதற்காக ஏற்றுக் கொள்ளக் கூடிய வட்டியில், விவசாயிகளுக்கு குறுகிய கால பயிர்க்கடனை வழங்குவ தற்கான நிதி கீழ் நிலையில் இருப்பதை உறுதிப் படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தத் திட்டத் தின் சிறப்பம் சங்கள்:

* 2017-18-ம் ஆண்டில் ஓராண்டு காலத் துக்கு ரூ.3 லட்சம் வரை, குறுகிய கால விவசாயக் கடனைப் பெற்று உரிய முறையில் திரும்பச் செலுத்தும் விவசாயி களுக்கு 5 சதவீதம் வட்டி மானியத்தை மத்திய அரசு வழங்கும். 

இதன் மூலம், விவசா யிகள் 4% மட்டும் வட்டி செலுத்தி னால் போதும். குறுகிய காலப் பயிர்க் கடனை உரிய நேரத்தில் செலுத்தாத விவசா யிகள், 
மேற் குறிப்பிட்ட 5% வட்டி மானியத் துக்குப் பதிலாக, 2% மட்டுமே வட்டி மானியம் பெறத் தகுதியு டையவர்கள்.

* 2017-18-ம் ஆண்டில் வட்டி மானியத்து க்காக தோராய மாக ரூ.20,339 கோடியை மத்திய அரசு வழங்கும்.

* அறுவடை க்குப் பிறகு, தங்களது விளை பொருட் களை சேமித்து வைப்பதற் காக 9% வட்டியில் கடன் பெறும் சிறிய மற்றும் நடுத்தர விவசாயி களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், 


அவர்க ளுக்கு 2% வட்டி மானியத்தை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து ள்ளது. அதாவது, 6 மாதங்கள் வரை, 7% வட்டியில் கடன் பெற முடியும்.
விவசாயக் கடனுக்கு மானியம்... மத்திய அமைச்சரவை !
* இயற்கைச் சீற்றங் களால் பாதிக்கப் படும் விவசாயி களுக்கு நிவாரணம் அளிப்பதற் காக, கடன் தொகையை மறு கட்டமைப்பு செய்வத ற்காக வங்கி களுக்கு முதல் ஆண்டில், 2% வட்டி மானியம் வழங்கப் படும்.

* குறுகிய கால பயிர்க் கடனை விவசா யிகள் உரிய நேரத்தில் செலுத்தா விட்டால், அவர்கள் மேற்கூறிய தொகைக்கு மாறாக, 2% வட்டி மானியம் பெறு வதற்கு மட்டுமே தகுதியு டையவர்கள்.

இந்தத் திட்டத்தால் ஏற்படும் மாற்றங்கள்

* வேளாண் துறையில் ஒட்டு மொத்த உற்பத்தி யையும், அதிக உற்பத்தித் திறனையும் எட்டுவதற்கு கடன் மிகவும் முக்கிய மானதாகும். 

நாட்டில் உள்ள விவசாயிகளின் முக்கியத் தேவையான, குறுகிய காலக் கடன்கள், அறுவடைக்குப் பின்பு, விவசாய விளை பொருட் களை சேமித்து வைப்பதற்காக வழங்கப்படும் கடன்கள் ஆகிய வற்றுக்கு வட்டி மானியம் வழங்கு வதால், 
ஏற்படும் பிரச்சினை களை சமாளிக்க ரூ.20,339 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச் சரவை ஒப்புதல் அளித் துள்ளது. 

இதன் மூலம், அமைப்பு சாராத நிறுவனங்களிடம் அதிக தொகைக்கு கடன் பெற வேண்டிய கட்டாயத் திலிருந்து விவசாயிகளை மீட்பதற்கு இந்த அமைப்பு சார்ந்த கடன் உதவும்.

* பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத் தின் கீழ் பெறப்படும், பயிர்க் காப்பீடு, கிடைக்கும் பயிர்க் கடனுடன் இணைக்கப் படுகிறது. 

எனவே, விவசாயிகள், பயிர்க் கடனைப் பெற்று, விவசாயி களின் நலனுக்காக அரசு மேற்கொண்டு வரும் அனைத்து முயற்சிகளின் பலன்களையும் பெற வேண்டும்.

* மத்திய அரசின் மிகவும் முக்கிய நடவடிக்கை என்பது, விவசாயிகளுக்கு, தங்களது விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதிப் படுத்தும் நோக்கில், கொண்டு வந்த சந்தை சீர்திருத்தம் தான். 

மின்னணு தேசிய வேளாண் சந்தையை ஏப்ரல் 2016-ல் மத்திய அரசு தொடங்கி வைத்தது. 
வேளாண் உற்பத்திப் பொருட்களின் சந்தைக் குழுக்களை மின்னணு முறையில், ஒருங்கிணைத்து, போட்டி முறையில் விளை பொருட்களுக்கு விலை கிடைக்கச் செய்து, விவசாயிகள் பயனடைய வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

* ஆன்லைன் வர்த்த கத்தை மேற்கொள்ள விவசாயி களுக்கு அறிவுரை வழங்கப் படுகிறது. இதன் மூலம், விவசா யிகள் தங்களது 

விளை பொருட்களை அங்கீகரிக்கப் பட்ட சேமிப்புக் கிடங்குகளில் சேமித்து வைப்பதற்காக கடன் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இது போன்று 6 மாதங்கள் வரை, பொருட்களை சேமித்து வைப்பதற்கு, விவசா யிகள் கடன் அட்டை வைத்துள்ள சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு 2% வட்டி மானியத்தில் கடன் வழங்கப் படுகிறது. 

இதன் மூலம், சந்தையில் பொருட் களை விற்பதற்கு சரியான நேரம் என்று கருதும் நேரத்தில், பொருட் களை விவசா யிகள் விற்க முடியும். 
கட்டாயப் படுத்தி விற்க வேண்டிய நிலை இருக்காது. எனவே சிறு மற்றும் நடுத்தர விவசா யிகள், தங்களது விவசா யிகள் கடன் அட்டையை செயல் பாட்டில் வைத்தி ருக்க வேண்டும்.

* விவசாயி களின் வருமான த்தை அதிகரிக்கச் செய்ய மத்திய அரசு தீவிர முயற்சி மேற் கொண்டு வருகிறது. 

இதில், விவசாயி களுக்கு விதை வாங்கு வது முதல் விளை பொருட் களை சந்தைப் படுத்துவது வரை பல்வேறு நடவடி க்கை களையும் மேற்கொள் வதற்கு பல்வேறு புதிய திட்டங் களை தொடங்கி யுள்ளது. 

அரசின் மண் வள அட்டை, உள்ளீடு மேலாண்மை, பிரதமரின் விவசா யிகள் நீர்ப் பாசனத் திட்டத் தின் ஒவ்வொரு சொட்டு நீருக்கும் கூடுதல் விளை ச்சல், 

பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம், மின்னணு தேசிய வேளாண் சந்தை போன்ற அரசின் அனைத்து முயற்சி களுக்கும் அமைப்பு சார்ந்த கடன் ஆதார ங்கள் பயனளிக் கின்றன.

பின்னணி
இந்தத் திட்டம் 2006-07-ம் ஆண்டு முதலே செயல் படுத்தப் படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், விவசா யிகள் ரூ.3 லட்சம் வரையி லான பயிர்க் கடனை 7% வட்டியில் பெற முடியும். 

இதில் கூடுதலாக 3% வட்டி மானியம் வழங்கப் படுகிறது. இதன் மூலம், கடனைப் பெறும் நாளிலிருந்து ஓராண்டுக்குள் கடனை உரிய முறையில் திருப்பிச் செலுத்த முடிகிறது. 

நெருக்கடி யான காலத்தில் கட்டாயப் படுத்தி விற்பனை செய்யப் படுவதைத் தடுக்க, விவசாயக் கடன் அட்டை வைத்துள்ள சிறு, 

குறு விவசாயிகளுக்கு மாற்று முறை சேமிப்புக் கிடங்கு ரசீது மூலம், விளை பொருட்களை அறுவடை க்குப் பிறகு, 
விவசாயக் கடனுக்கு மானியம்... மத்திய அமைச்சரவை !
அங்கீகரிக் கப்பட்ட சேமிப்புக் கிடங்கு களில் 6 மாதங்கள் வரை சேமித்து வைப்பதற் காக கடன் வழங்கப் படுகிறது.

2016-17-ம் ஆண்டில், வழங்கப் பட்ட குறுகிய கால பயிர்க் கடன் அளவு, நிர்ணயிக் கப்பட்ட இலக்கான ரூ.6,15,000 கோடியைத் தாண்டி, ரூ.6,22,685 கோடியாக இருந்தது'' என்று தெரிவிக் கப்பட்டு ள்ளது.
Tags:
Privacy and cookie settings