குப்பை அகற்றி முனைவர் பட்டம் பெற்ற மூதாட்டி !

இந்த லெபனான் கிராமத்தி லிருக்கும் பெண்மணிக்கு வயது 81. அவரைப் பார்க்க சாரி சாரியாக வருபவர் களிடமிருந்து வருவது ஒரே கேள்வி தான். 
குப்பை அகற்றி முனைவர் பட்டம்  பெற்ற மூதாட்டி !
எப்படி குப்பையை அகற்ற பெண்கள் தன்னார்வக் குழு ஒன்றை உருவாக் கினீர்கள் என்பது தான் அது. 2015 மற்றும் 2016ம் ஆண்டு களில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெருக் களில் குப்பைகள் தேங்கி கிடந்தன. 

தற்போதும் கூட, தேவையான அளவு குப்பை கொட்டும் இடங்கள் இல்லாததால், நகரத்தின் குப்பைகளில் ஒரு பகுதி கடலில் தான் கொட்டப் படுகின்றது.

அரசாங்கம் ஒரு விஷய த்தில் தோல்வி அடைந்தால், மக்கள் எவ்வாறு அவர்க ளாகவே முன்னெடு க்கும் முயற்சிகள் வாயிலாக வேலை களை செய்ய முடியும் என்று ஜீனாப் மோக்காலெத் காட்டி யுள்ளார்.

''முன்பு இங்கு எல்லா இடங் களிலும் குப்பை கிடைக்கும். குழந்தைகள் அழுக்காக இருப் பார்கள்,'' என்றார் ஜீனாப் மோக்காலெத்.

லெபனானின் தென் பகுதியின் ஒரு பகுதி , 1980 மற்றும் 1990களில், 15 ஆண்டுகள் இஸ்ரேலால் ஆக்கி ரமிக்கப் பட்டதை நினைவு கூர்ந்த அவர், 

அப்போது தன்னுடைய அராப்சலீம் கிராமத்தில் குப்பை களை அகற்றும் பணி முழுவது மாக கைவிடப் பட்டது என்றார். ஆண்டுகள் செல்லச் செல்ல, குப்பை குவிந்தது.
பிராந்திய ஆளுநரிடம் உதவி கேட்டார் ஜீனாப் மோக்காலெட். நீங்கள் ஏன் இதை பற்றி கவலைப் படுகிறீர்கள்? நாம் பாரிசில் இல்லை, என்றாராம் அவர்.

அன்று தெரிந்து கொண்டேன், இந்த வேலையை நான் தான் செய்ய வேண்டும் என்று, என்றார் ஜீனாப் மோக்காலெட். கிராம த்தில் உள்ள பெண்களை அழைத்தார் ஜீனாப் மோக்காலெட். 

ஆண்களை அழைக்க வில்லை. ஏனெனில் பெண் களுக்கு அதிகாரம் தர வேண்டும் என்று அவர் விரும் பினார். 

மேலும் பெண்கள் தான் இந்த வேலையை சிறப்பாக செய்வார்கள் என்று ஜீனாப் மோக்காலெட் நம்பினார்.

அது மட்டு மல்லாது, ஒவ்வொரு வீட்டிலும் குப்பையைப் பிரித்து, தேவை யானவற்றை மறு பயன் பாட்டிற்கு தேவை என பிரிப்பது பெண்கள் கையில் தான் உள்ளது.

இதன் காரணமாக, அவருக்கு வேலை செய்ய தன்னார் வலர்கள் தேவைப் பட்டனர். வீடு வீடாக சென்று, 
இந்த விவரங் களை பெண் களிடம் எடுத்துச் சொல்லி புரிய வைக்கும் இந்த வேலைக்கு 1990களில் லெபனானில் இருந்த இஸ்லாமிய சமூக ஆண்கள் செய்வது என்பது பொருத்த மற்றதாக இருந்தது.

எந்த உபகரண ங்களும், கட்டுமான வசதியும் இல்லை. இவர் எவ்வாறு வேலையைத் தொடங்குவது ?

ஜீனாப் மோக்கா லெட்டின் தோழி கதிஜா பர்ஹாத் தன்னுடைய செலவில் ஒரு லாரியை வாங்கினார்.

மோக்காலெட் தனது வீட்டின் பின்புற தோட்டப் பகுதியை மறு சுழற்சி செய்ய வேண்டிய பொருட்களை சேமிக்கும் இடமாக மாற்றினார்.

தங்களது குப்பை களை யாரவது பெற்றுச் சென்றால் அதற்கு கட்டண த்தை செலுத்த கிராம த்தில் உள்ள 10,000 மக்களும் தயாராக இருப் பார்கள் 

என்று தோன்ற வில்லை. அவர்களு க்கான கட்டண ங்களை தன்னார் வலர்கள் செலுத்தினர்.

தற்போது 19 ஆண்டுகள் கழித்தும் கூட, இந்த வேலையைத் தொடரு வதற்காக, 46 உறுப்பினர்கள் ஆண்டுக்கு, சுமார் 40 அமெரிக்க டாலர்களை செலுத்துகிறார்கள். 
குப்பை அகற்றி முனைவர் பட்டம்  பெற்ற மூதாட்டி !
வீடுகளில் மறு சுழற்சி செய்வது தான் சிறந்தது, என்கிறார் 'கால் ஆஃப் எர்த்'(Call of the Earth) என்ற பெயரை இந்த குப்பை மறுசுழற்சி செய்யும் நிறுவன த்திற்கு வழங்கிய மோக்காலெட்.

தொடக்க த்தில் கண்ணாடி, காகிதம் மற்றும் பிளாஸ்டிக் பொருட் களை மட்டுமே மறு சுழற்சி செய்தனர். சமீபத்தில் மின்னணு கழிவுகளை (electronic waste) சேகரிக் கவும் தொடங்கி யுள்ளனர்.

தற்போது, தெற்கு லெபனானின் வெப்பம் மற்றும் வறட்சியான தட்ப வெப்ப நிலையில், கலப்பு உரம் தயாரிப் பதற்கான சிறந்த வழி என்ன என்று அறிய ஒரு ஆராய்ச்சி யாளரை பணியில் அமர்த்தி யுள்ளனர்.

மூன்று ஆண்டுகள் செய்த பணிக்காக , உள்ளூர் அதிகாரி களிடம் இருந்து கிடைத்த ஒரே உதவி 300 பிளாஸ்டிக் கூடைகள் மற்றும் குப்பை சேகரிப் பிற்காக ஒரு துண்டு நிலம்.
இதன் மூலம் ஜீனாப் மோக்காலெட் தன்னுடைய வீட்டின் தோட்ட பகுதியை திரும்ப பெற்றார். அதே சமய த்தில், பர்ஹா த்தின் லாரி மட்டு மல்லாது மற்றொரு லாரியை வாடகை க்கு எடுத்தனர்.

ஒரு ஆண் லாரி ஓட்டுநராக இருப்ப தால், பெண் களிடம் குப்பை சேகரிக்க அவர் அணுகும் போது, அவர் தனியே செல்லாமல், அவருடன் இந்தப் பெண்களும் சென்றனர்.

10 ஆண்டு களுக்கு பிறகு அவர்கள் ஒரு கிடங்கைக் கட்ட இத்தாலிய தூதரகத் திடமிருந்து, அவர்கள் ஒரு மானியம் பெற்றனர்.

இந்த இடத்தில் தான் தற்போது மோக்கா லெட்டை பார்க்க பலரும் வருகி றார்கள். 'கால் ஆஃப் எர்த்' (Call of the Earth) நிறுவனம் 

எவ்வாறு இயங்கு கிறது என்று தெரிந்து கொள்ள பள்ளிக்கூட குழந்தைகள், பிற மாண வர்கள் மற்றும் ஆர்வலர்கள் வருகி றார்கள்.

நகரின் கழிவு களை கொட்டு வதற்கு ஒரு புதிய இடத்தை கண்டு பிடிப்பதற் கான முயற் சிகள் விரைவாக கேலிக் கூத்தில் முடிந்தன.
லெபனான் நாட்டின் அனைத்து மதகுழு பிரிவுகளும் - கிறிஸ்துவர்கள், சுன்னி அல்லது ஷியா சமூகத்தினர்- 

என எல்லோரிடமும் 'என் வீட்டின் பின் பகுதியில் குப்பையை கொட்டா தீர்கள்' என்ற எண்ணம் தான் அதிகமாக இருந்தது. இதன் பிறகு, அரசாங்கம் குப்பையை ஏற்றுமதி செய்வதாக அறிவித்தது. 

ஆனால் சில மாதங்களில் அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றது. கழிவை எங்காவது கொட்ட வேண்டியிருந்தது. அதனால் அது விமான நிலைய த்திற்கு அருகில் கொட்டப்பட்டது.

இது சீகல் பறவைகளை ஈர்த்தது, இது விமானங்களுக்கு அபாயகர மாக மாறியது. சீ கல் பறவை களை சுடும் முயற்சிகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. 

இதன் காரணமாக அவற்றைப் பயமுறுத்தி வெளியேற்ற சத்தமான இசையை எழுப்ப இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.

தற்போது நீதி மன்றம் அந்த குப்பை கிடங்கை மூடுமாறு உத்தர விட்டுள்ளது. ஆனால் அங்கு சீ கல் பறவைகள் தொடர்ந்து வட்ட மிட்டபடி உள்ளன.
நீண்ட காலத் தில், அரசாங்கம், குப்பை களை எரித்து அதில் இருந்து மின்சார த்தை எடுக்க விரும்பு வதாகத் தெரிவித் துள்ளது.

ஆனால், இது குப்பை சரியாக இனம் பிரிக்கப் படாமல் போகலாம் என்று கூறும் விமர் சகர்கள், 

பிளாஸ்டிக் மற்றும் விஷ வாயுவை வெளியிட கூடிய பொருட்கள், சுத்தமான ரசாயனம் கலக்காத குப்பை யுடன் சேர்ந்து புதைக்கப்படும் என்று கூறு கின்றனர்.

இதன் காரண மாக ஜீனாப் மோக்கா லெட்டின் குப்பை சேகரிப்பு மாதிரி பிரபல மாகி வருவதில் எந்த ஆச்சரி யமும் இல்லை.

இதே போன்ற ஒரு திட்டத்தை, அருகில் உள்ள கஃபாரேமென் கிராம த்தைச் சேர்ந்த பெண்கள் தங்களாவே முன் வந்து தற்போது செயல் படுத்தி வருகின்றனர். 

ஆனால் அந்த திட்டம் தன்னார் வாளர்களின் பணத்தில் அல்லாமல் கிராம வாசிகள் பணத்தில் செயல் படுத்தப் படுகிறது.
''இவர் களைப் பார்க்கும் போது, 20 ஆண்டு களுக்கு முன் எங்களையே பார்ப்பது போல உள்ளது, '' என்றார் ஜீனாப் மோக்காலெட்.

தற்போது கபாரிமென் கிராம த்தில் குப்பை சேகரிப்பு பணியில் ஈடு பட்டுள்ள பெண்கள் சிறுமி களாக இருந்த போது அவர் களுக்கு அரபி இலக்கியம் கற்றுக் கொடுத்தார் ஜீனாப் மோக்காலெட்.

தற்போது சுற்றுச் சுழல் விவகார ங்களில் அவர் களுக்கு அவர் ஒரு வழி காட்டியாக உள்ளார். நீங்கள் பல சவால்களை எதிர் கொள்ள வேண்டி யிருக்கும். 

ஆனால் பொறுமை மற்றும் உறுதிப் பாடு அவசியம், என்று அந்த பெண் களிடம் கூறுகிறார் அவர். 

அவரது முன்னாள் மாணவிகளில் ஒருவரான வாஃபா, ஜீனாப் மோக்கா லெட்டின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு, இவர் எனக்கு ஒரு முன் மாதிரி. 
எப்போதும் அவர் முயற்சி களை கைவிட வில்லை, என்றார் வாஃபா. அரப்சலீம் கிராமம் தூய்மை யாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அதே சமயத்தில் ஜீனாப் மோக்காலெட், 

அரபி மொழியில் தனது முனைவர் பட்டத் திற்கான படிப்பையும் தொடர்ந்தார். தனது 70வது வயதில் முனைவர் பட்டத்தை அவர் பெற்றார்.

எது உங்களுக்குபெருமை?

நாம் வாழும் இந்த பூமியை நாம் கவனிக்க வேண்டும் என்பது நமது கடமை என்பதை உலகின் இந்த பகுதியில் இருப்ப வர்களின் மனதில் ஏற்படுத் துவது,
அதை அவர்கள் செய்வார்களா இல்லையா என்பது அவர்களை பொறுத்தது, ஆனால் அரசியல் வாதிகள் இதைச் செய்ய மாட்டார்கள் என்றார் அவர்.

அரப்சலீம் கிராமத்தில் உள்ள வர்கள் செய்வது போல அனை வரும் செயல் பட்டால், குப்பை பிரச்சனை லெபனானில் இருக்காது, என்றார்.
Tags:
Privacy and cookie settings