மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை... முதல்வர் பழனிசாமி !

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர் களை விடுவிக்க உடனடியாக நடவடிக்க எடுக்க வேண்டும் என்று 
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை... முதல்வர் பழனிசாமி !
பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டு கோள் விடுத் துள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில், ''61 நாள் மீன்பிடி தடை காலம் முடி வடைந்த நிலையில், கடந்த 17-ந் தேதி மண்டபம் பகுதியைச் சேர்ந்த 

மீனவ ர்கள் 5 பேர் ஒரு இயந்திர மீன்பிடி படகில் தங்களின் பாரம் பரிய மீன்பிடி பகுதி யான பாக்ஜல சந்திக்கு மீன் பிடிக்கச் சென்று ள்ளனர். 

அவர்கள் 18-ந் தேதி அதிகாலை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு 

இலங்கையின் கரை நகருக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக த்தைச் சேர்ந்த அப்பாவி மீனவர்கள் இலங்கை கடற்படை யினரால் சிறை பிடிக்கப் படும் சம்பவ ங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது தொடர் பாகவும், 
இதனால் அவர் களின் வாழ் வாதாரம் பாதிக்கப் படுவது குறித்தும் எங்கள் தலைவர் ஜெயலலிதா தங்க ளுக்கு பல முறை கடிதங்கள் எழுதியி ருந்ததை தாங்கள் அறிவீர்கள்.

தமிழக மீனவர் கள் மீண்டும் கைது செய்யப் படுவதும் சிறைப் பிடிக்கப் படுவதும் தமிழக மீன வர்கள் மத்தியில் கடும் கொந்த ளிப்பை ஏற்படுத்து கிறது. 

இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழா வண்ணம் தடுக்க ராஜாங்க ரீதியில் உறுதியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசின் ஆதரவுடன் நடைமுறை சாத்தியமான தீர்வு காண எனது தலைமை யிலான அரசு உறுதி பூண்டுள்ளது. 
தமிழக மீனவர்கள் இது போன்று சிறை பிடிக்கப் படுவதை தவிர்க்கவும், மீனவர்களை விடுவித்து அவர்களின் மீன்பிடி படகுகளை பயன்படுத்தக் கூடிய நிலையில் மீட்கவும் 

இலங்கை அரசு நிர்வாகத்தின் உயர் அதிகார நிலை யில் தலையிட வேண்டியது மிகவும் அவசர அவசியமாகும் என்று அந்தக் கடிதத் தில் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings