கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது !

இந்தியாவின் முதல் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. புனேவிலுள்ள கேலக்ஸி கேர் மருத்துவ மனையில் தான் இந்தியாவின் முதல் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றி கரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது !
மிகச் சிக்கலான இந்த அறுவைச் சிகிச்சையை 12 மருந்து வர்கள் கொண்ட குழு வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். 

சோலப் பூரைச் சேர்ந்த 26 வயதான பெண் பிறவியிலேயே கருப்பை இல்லாத த்தால் அவரது தாயாரின் கருப்பை அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு பொருத்தப் பட்டது. 

இந்த அறுவைச் சிகிச்சையின் மூலம் அப்பெண் கருத்தரிக்க முடியும் என்றும் மருத்து வர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட மருத்து வர்களில் ஒருவரான சஞ்சீவ் ஜாதவ் கூறும் போது, 'இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த அறுவை சிகிச்சை க்கு நாங்கள் 8 மணி நேரம் திட்ட மிட்டிருந்தோம், 
ஆனால் அறுவை சிகிச்சை 12 மணி நேரம் வரை நீடிக்கப் பட்டது. அறுவை சிகிச்சை வெற்றி கரமகாக முடிக்கப் பட்டது. 

தானம் வழங்கியவர் நலமாக இருக்கிறார். கருப்பை தானம் பெற்ற பெண் 24 மணி நேரம் மருத்துவக் கண் காணிப்பில் இருக்க வேண்டும்' என்றார்.

முன்ன தாக இது வரை சவுதி அரேபியா, அமெரிக்கா, துருக்கி, ஸ்விடன் ஆகிய நாடுகள் கருப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. அவற்றில் சில மட்டுமே வெற்றிகர மாக நடத்தி முடிக்கப் பட்டது. 

மேலும் முதன் முதலாக 2014-ம் ஆண்டு ஸ்வீடனை சேர்ந்த பெண் ஒருவருக்கு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை நடத்தப் பட்டது. 
இந்த சிகிச்சையின் மூலம் ஆரோக்கியமான குழந்தையும் அப்பெண் பிரசவித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags: