ரகசியம் புலப்படாத ரத்த அருவி !

இந்தப் பூமியைப் பற்றி உங்களு க்கு என்ன தெரியும்? நாம் வாழ்ந்து வரும் அல்லது தினமும் பார்த்து வரும் நிகழ்வு களைப் பட்டியி லிடுவது மட்டும் இந்தப் பூமியல்ல.

ரகசியம் புலப்படாத ரத்த அருவி !
‘அரோரா’ வெளிச்ச மாகட்டும் அல்லது பாறை களை நகர்த்தும் பாலைவன மாகட்டும்… நம் கற்பனை க்கும் எட்டாத பல வினோத சக்திகள், 
மர்மமான மற்றும் உயிருக்கு ஆபத்தான இடங்க ளால் நிறைந் திருப்பதே இந்தப் பூமி. அவ்வளவு ஏன் ‘புவி ஈர்ப்பு சக்தியே’ இல்லாத இடமும் இப்பூமி யில் உண்டு.

இதில், சில மர்மங்க ளுக்கு மட்டுமே காரணம் கண்டி பிடித்திரு க்கிறோம். ஆனால், பல மர்மங் களுக்குக் காரணமே கண்டு பிடிக்க முடிய வில்லை.

அப்படி ஒரு விசித்திர இடம் தான் ‘ரத்த அருவி’. நூறு ஆண்டுக ளுக்கும் மேலாக ரத்த அருவி உருவாவ தற்கான காரணம் என்ன வென்று ஆராய்ச்சி யாளர்கள் 

தலையைப் பிய்த்துக் கொண்டு ஆராய்ச்சி செய்து வந்ததன் பலனாகத் தற்போது ரத்த அருவி எப்படி உருவாகி யுள்ளது என்று கண்டறிந் துள்ளனர்.
அண்டார்டிகா வில் ‘மெக் மெர்டோ’ என்ற பள்ளத் தாக்கில் ‘டாய்லர் ஃகிளாஸியோ’ என்னும் அருவி உள்ளது. 

1911-ம் ஆண்டு ஹிரிஃபித் டாய்லர் என்ற ஆஸ்திரேலி யாவைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சி யாளர் இந்த அருவியைக் கண்டறிந் ததால் இதற்கு அந்தப் பெயர் வந்தது.

இந்த டாய்லர் ஃகிளாஸியோ அருவியில் இருந்து பாய்ந்து வரும் தண்ணீ ரானது, அடர் சிவப்பு நிறத்தில் பார்ப்பதற்கு ரத்தம் பீறிட்டு வருவது போல இருக்கும்.

அதனால் இந்த அருவியை ஆராய்ச்சி யாளர்கள் ‘ரத்த அருவி’ என்று அழைத்து வருகின்றனர். அண்டார்டிகா பகுதி களில் வேறு எங்கும் இதுபோல இல்லை.

அப்படி இருக்க, இந்த அருவியில் மட்டும் ஏன் தண்ணீர் ரத்தம்போல வருகிறது என்று கண்டறிய ஆராய்ச்சி யாளார்கள் படையே அங்கு முகாமிடத் தொடங் கியது. 
இந்த ஆராய்ச்சிப் பயணம் நூறு ஆண்டு களுக்கும் மேலாகத் தொடர்ந்து வந்த நிலையில் தற்போது அதற்கான காரணம் கண்ட றியப்பட் டுள்ளது.

ஆரம்பத்தில்… ”அதிக அளவு பாசிகள் இருப்பதால் தான் இப்படி அடர் சிவப்பு வண்ண த்தில் தண்ணீர் வருகிறது” என்று காரணம் கூறி னார்கள்.
ஆனால், அது உணமை யான காரண மல்ல என்று வேறு சில ஆராய்ச்சி யாளர்கள் மறுத்து வந்தனர். 

இந்த நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு ஜில் மிக்கூக்கி என்ற ஆராய்ச்சி யாளர், அப்பகுதியை ஆராய்ச்சி செய்து ஒரு கட்டுரையை வெளி யிட்டார்.

அதில், ”இந்த நீரில் ஆக்சிஜன் மூலக்கூறு மிகமிகக் குறைவு. இதில் உயிரிகள் வாழ்வதற் கான மூலக் கூறுகள் கிடையாது. 

அப்படி இருந்தும் இந்த நீரில் 17 வகை யான நுண்ணு யிரிகள் வாழ்ந்து வருகின்றன. இது ஆச்சர்யமான ஒரு நிகழ்வாகும்.

அதோடு மட்டு மில்லாமல் இப்பகுதி முழுவதும் இரும்புத் தாதுக்கள் அதிக அளவில் இருக் கின்றன. 

நுண்ணு யிரிகளி லிருந்து வெளிவரும் சல்ஃபர் இரும்புத் தாதுவுடன் வினை புரிந்து சிவப்பு நிற நீரை உண்டாக் குகிறது” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இது ஆராய்ச்சி யாளர்க ளுக்கு ஒருவித தன்னம் பிக்கையைத் தர, மேலும் அப்பகுதியைப் படை யெடுக்க ஆரம்பி த்தனர்.
அதன் பின்னர் ஆராய்ச்சி மேற் கொண்ட ஆராய்ச்சி யாளர்கள் ‘லைஃப் ஆன் மார்ஸ்’ என்று இப்பகுதியை வரையறை செய்தனர்.
அதாவது, ”ஆக்சிஜன் இல்லாத நிலையில் நுண்ணு யிரிகள் வாழ்வது சாதாரண விஷயம் அல்ல… 

ரத்த அருவி யின் தன்மையை ஆராய்ச்சி செய்கை யில் இப்பகுதி முழுவதும் செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் சூழ்நிலை யைக் கொண்டி ருக்கிறது.

இப்பகுதியை நன்கு ஆராய்ச்சி செய்தால், செவ்வாய்க் கிரகத்தின் தன்மையைத் துல்லிய மாகக் கண்டறி யலாம். 

மேலும், இந்த அருவி சுமார் இரண்டு மில்லியன் வருடத்துக்கு முன் தோன்றியது” என்று கூறி யுள்ளனர்.

தற்போது. இந்த ரத்த அருவியின் தண்ணீர் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறது என்று மட்டுமே கண்டறிந் துள்ளனர். 

ஆனால், இந்த அருவி எங்கு உருவா கிறது… எங்கு முடிகிறது என்று கண்டு பிடிக்க முடிய வில்லை.

அதற்கான ஆராய்ச் சியும் நடை பெற்று கொண்டிரு க்கிறது. விரைவில் இந்த ‘ரத்த அருவி’ எங்கு உருவாகிறது, எங்கு முடிகிறது என்று கண்டு பிடித்து விடுவார்க ளாம்.

ரகசியம் புலப்படாத ரத்த அருவி !
இந்த அருவியைப் பற்றிய கதை களையும் மக்கள் சொல்லி வருகின்றனர். அப்பகுதி யில் வாழ்ந்து வந்த பூர்வ குடிகளை எதிரிகள் கொன்று விட்டனர்.
அதனால், அவர் களின் ரத்தம் தான் இப்படி அருவியாகப் பெருகி ஓடுகிறது. இது ஒரு புனித அருவி என்ற செவிவழிச் சோகக் கதைகளும் இந்த அருவி யின் பின்னணி யில் இருக்கத் தான் செய்கிறது.

‘ரத்த அருவியை’ பற்றிய அனைத்துக் கேள்வி களுக்கும் ஆராய்ச்சி யாளர்க ளால் விரைவில் பதில் தெரிந்து விடும். 

ஆனால் விடை தெரியாத மற்றும் விடை கண்டு பிடிக்க முடியாத பல மர்மங்கள் இப்பூமியில் இருந்துக் கொண்டே தான் இருக்கிறது.
Tags:
Privacy and cookie settings