வீட்டின் மீது விழுந்து நொருங்கிய விமானம் !

வெள்ளத் தினால் பாதிக்கப் பட்டவர்களை மீட்கும் மற்றும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா விமானப் படையின் எம்,ஐ-17 உலங்கு வானூர்தி 
வீட்டின் மீது விழுந்து நொருங்கிய விமானம் !
ஒன்று வீடு ஒன்றின் மீது மோதி விபத்துக் குள்ளாகியது. காலி மாவட்ட த்தில் உள்ள பத்தேகமவில் இடம் பெற்ற இந்தச் சம்பவ த்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை என்றும் 

எனினும் உலங்கு வானூர்தி முற்றாக சேதமடைந்து விட்டதாகவும் சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் கிகான் செனிவிரத்ன தெரிவித்தார். உலங்கு வானூர்தியில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக இருப்ப தாகவும் அவர் கூறினார்.

வெள்ளத் தினால் பாதிக்கப் பட்ட பத்தேகம வுக்குப் பொருட் களை எடுத்துச் சென்ற எம்,ஐ-17 உலங்கு வானூர்தி தரை யிறங்கும் போது, கட்டுப் பாட்டை இழந்து வீட்டின் மீது மோதிய தாகத் தெரிவிக்கப் படுகிறது.

விபத்தில் சிக்கிய உலங்கு வானூர்தி யில் 11 பேர் இருந்தனர் என்றும் அவ ர்களின் ஒருவருக்கு மாத்திரமே சிறிய காயம் ஏற்பட்ட தாகவும் தகவல்கள் தெரிவிக் கின்றன.
வீட்டின் மீது விழுந்து நொருங்கிய விமானம் !
தரையில் மோதி விபத்துக் குள்ளாகிய உலங்கு வானுர்தியின் விமானி யுடன் சிறிலங்கா அதிபர் தொலைபேசி மூலம் பேசிய தாகவும், அவரது அர்ப்பணிப் பான சேவைக்கு பாராட்டுத் தெரிவித்ததாகவும், அரசாங்கத் தகவ ல்கள் தெரிவிக் கின்றன.

கடந்த வெள்ளிக் கிழமையில் இருந்து சிறிலங்கா விமானப் படை எம்,ஐ-17 உலங்கு வானூர்திகள் – 07, பெல் -212 

உலங்கு வானூர்திகள் -03, பெல்-412 உலங்கு வானூர்தி ஒன்று ஆகிய வற்றை மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக் கைகளில் ஈடுபடுத்தி யுள்ளமை குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings