சசிகலா அங்கே தினகரன் இங்கே.... அடுத்தது என்ன?

ஜெயலலிதா உயிரோடு இருந்த வரையில் சட்ட சபையிலும், பொது வெளி யிலும் தி.மு.க.வை வறுத்தெடுத்த அ.தி.மு.க., ஜெயலலிதா மறைவுக்குப் பின் அந்தப் போக்கைக் குறைத்துக் கொண்டது. 
சசிகலா அங்கே தினகரன் இங்கே.... அடுத்தது என்ன?
முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வமும், தி.மு.க.வின் செயல் தலைவரான மு.க. ஸ்டாலினும் சட்ட சபையில் சிரித்துப் பேச பழகிக் கொண்டனர்.

ஓ.பி.எஸ். கையில் இருந்த முதல்வர் பதவியை பிடுங்கும் வரையில் இந்த 'சிரிப்பு' குறித்து சசிகலா ஏதும் பேச வில்லை. 

சமாதி தியான த்தை ஓ.பி.எஸ். மேற்கொண்ட போது தான் ஸ்டாலின் - ஓ.பி.எஸ். சேர்ந்து சிரித்ததை சசிகலா விமர்சித்தார்.

நள்ளிரவுப் பேட்டியில், என்ன செய்கிறார் அந்த ஓ.பி.எஸ்.? ஸ்டாலி னுடன் சிரித்துக் கொண்டும், பேசிக் கொண்டும்... என்று அனல் கக்கினார். 

மனித இனத்துக்குத் தான் சிரிக்கத் தெரியும் என்று ஓ.பி.எஸ். பதிலடி கொடுத்தார். அம்மா உயிரோடு இருக்கும் போது அப்படி சிரித்திரு க்கலாமே, ஓ.பி.எஸ். 

அப்போது மட்டும் நீங்கள் மிருகமாக இருந்தீர்களா? என்று அ.தி.மு.க. இணைய தளத்தில் கேள்வி எழுப்பினர். ஜெயலலிதா இருந்த போது தி.மு.க.வை ஜென்ம விரோதியாகவே கருதினார், 
அதே நிலையை இப்போதும் தொடர்ந்தால் தான் கட்சி நிலைக்கும், அதைத் தான் அடி மட்டத் தொண்டனும் விரும்புவான்' என்பதே சசிகலா வின் நிலைப்பாடு. 

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின் போது டி.டி.வி. தினகரனும், "தி.மு.க. தான் எங்கள் எதிர்க்கட்சி, கருணாநிதி தான் எங்கள் ஜென்ம எதிரி" என்றார்.

ஆக, தி.மு.க.வை எதிர்த்துப் பேசினால் தான் கட்சி நிலைக்கும் என்ற முடிவில் சசிகலாவும், தினகரனும் உறுதி காட்டு கின்றனர். 

தொண்டர் களை சந்தித்து நியாயம் கேட்கப் போவதாக ஓ.பி.எஸ். கிளம்பி யுள்ள வேளையில், முதல்வர் பழனிசாமியும் , அறிக்கை மூலம் களமிறங்கி விட்டார்.
"நேர்மை, ஒழுக்கம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற வற்றை, ஆட்சி யிலும் கருணாநிதி கடைப் பிடிக்க வேண்டும் என, எம்.ஜி.ஆர்., வலியுறுத்தி உள்ளார் " 

என்ற அவர் அறிக்கை, அரசு இணைய தளத்தில், 'ஹைலைட்' செய்யப் பட்டுள்ளது. எதிர் பார்த்தது போலவே தி.மு.க., இந்த அறிக்கை க்கு கொதிக்க ஆரம்பித் திருக்கிறது.

ஆட்சியில் உள்ள சசிகலா ஆதரவு அ.தி.மு.க. தான் தி.மு.க.வை ஜெ.போலவே எதிர்க் கிறது என்று காட்டும் வேலை களில் இதுவும் ஒன்று... 

ஏற்கெனவே ஓ.பி.எஸ். - ஸ்டாலினுடன் கூட்டு என்று கொளுத்திப் போட்டதும் இதன் ஒரு நிலைதான். 

மொத்த த்தில் ஓ.பன்னீர் செல்வத்தை தனிமைப் படுத்த காயை சிறையில் இருந்த படியே நகர்த்தத் தொடங்கி யுள்ளனர் சசிகலாவும், தினகரனும் ! 
அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற திக் திக் மன நிலையில் இருப்பது மட்டும் தொண்ட ர்களே !
Tags:
Privacy and cookie settings