நள்ளிரவு அலறல்... போயஸ் கார்டனை கதிகலக்கும் ஆவி !

முன் குறிப்பு: இந்த செய்திக் கட்டுரை பல பரிசீலனைக்குப் பிறகே பதிவேற்றப் பட்டிருக்கிறது. செய்தியைப் படித்ததும் உங்கள் மனத்தில் தோன்றும் சந்தேகங்கள் எங்களுக்கும் தோன்றுகின்றன.
நள்ளிரவு அலறல்... போயஸ் கார்டனை கதிகலக்கும் ஆவி !
இருப்பினும், நடந்த தகவல் களை ஊர்ஜிதப் படுத்திய பின்னரே, இந்தச் செய்தியைப் பதிகிறோம். இக்கட்டுரை தொடர் பான தங்கள் கருத்து களை, கமெண்ட் பாக்ஸில் பதியலாம்!

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை முயற்சியும் அடுத் தடுத்து நடக்கும் உயிர்ப்ப லிகளும் ஆளும் கட்சியினர் மத்தியில் அதிர் வலைகளை உருவாக்கி யிருக்கி ன்றன. 

‘ஜெயலலிதா தொடர்பான விஷயங் களில் தலையிடு கின்றவர்கள் அனைவரும் கடுமை யாக பாதிக்கப் படுகின்றனர். 

போயஸ் கார்டனில் நள்ளிரவு கேட்கும் அலறல் களால் அங்குள்ள வர்கள் அச்சத்தில் உறைந் துள்ளனர்' என்கின்றனர் மன்னார்குடி குடும்ப உறவுகள்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து 150 நாள்கள் ஆகி விட்டன. அவரது மரணம் தொடர் பான மர்மம் இன்னும் விலக வில்லை. அதற்குள் அண்ணா தி.மு.க மூன்று துண்டு களாகச் சிதறி விட்டது. 

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கிறார் சசிகலா. லஞ்சப் புகாரில் திகார் சிறையில் அடை பட்டிருக் கிறார் தினகரன். 

கூடவே, கொடநாடு எஸ்டேட் கொலை மர்மம் என தினம் தினம் திகில் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக் கின்றன. 

'தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது?' என்றே தெரியாமல் நாள் களைக் கடத்தி வருகி ன்றனர் போயஸ் கார்டன் ஊழியர்கள். 

"ஜெயலலிதா சம்பந்தப் பட்ட விவகாரங் களில் தலையை நீட்டிய வர்கள் யாரும் நல்ல படியாக வாழ வில்லை. கார்டனைப் பொறுத்த வரையில், 'ஆண்களு க்கு ராசி யில்லாத வீடு' என்று சொல் வார்கள். 

ஜெயலலிதா பயன் படுத்திய அறையில் யார் வந்து தங்கி னாலும், அந்த இரவு அவர்கள் நிம்மதி யாக இருந்த தில்லை. கடந்த சில நாள்களாக ஏதேதோ சத்தம் கேட்கிறது. 

அதுவும் அலறல் தொனியில் இருக்கிறது!" எனக் குழப்ப த்தோடு விளக்க ஆரம்பி த்தார் கார்டன் ஊழியர் ஒருவர். தொடர்ந்து நம்மிடம் பேசியவர், "ஜெயலலிதா வுக்குக் குழந்தை கள் என்றால் மிகவும் பிடிக்கும். 

17 ஆதரவற்ற குழந்தை கள் கார்டனில் தங்க வைக்கப் பட்டிருக் கிறார்கள். ஜெயலலிதா சாப்பிட அமரும் போதெல்லாம், இதில் ஏதாவது ஒரு குழந்தை அருகில் இருக்க வேண்டும். 

சில நேரங் களில் அந்தக் குழந்தைக்கு அவர் ஊட்டி விடுவார். உற்சாக மாக இருக்கும் போது, குழந்தை களுக்குப் பரிசுப் பொருள் வாங்கிக் கொடுப்பார். 

இவர்களை கவனிக்க ராஜம்மாள் என்ற 75 வயது பணிப்பெண் இருக்கிறார். சென்னையைச் சேர்ந்த இவர், சந்தியா வின் காலத்தி லிருந்து வேலையில் இருக்கிறார்.

ஜெயலலிதா இறந்த பிறகு, சசிகலா வும் சிறைக்குச் சென்று விட்டார். அதன் பிறகு, துணைப் பொதுச் செயலா ளராகப் பதவி யேற்றார் டி.டி.வி. 

தினகரன். பதவிக்கு வந்த நாளி லிருந்து தொடர்ச்சி யாக நான்கு நாள்கள் போயஸ் கார்டனில் தங்கி யிருந்தார். 

அந்த நாள் களும் ஏதேதோ சத்தம் கேட்டிரு க்கிறது. இந்த சத்தத் தால் பயந்து போன அந்த 17 குழந்தை களும், ஒரே அறைக்குள் வந்து சுருண்டு படுத்து விட்டனர். 

தினகரனை நிம்மதி யாகத் தூங்க விடாமல் அலறல் சத்தம் அதிக மாகி யுள்ளது. மறுநாள் மனைவி, குழந்தை களை அழைத்துக் கொண்டு அவர் வெளியேறி விட்டார். 

ஒருநாள் திவாகரன் சம்பந்தப் பட்டவர் வந்து இரண்டு நாள்கள் தங்கியி ருக்கிறார். ஜெயலலிதா அறையில் அமர்ந்து அவர் பஞ்சாயத்து பேசி விட்டுச் சென்றிரு க்கிறார். 

அன்று இரவு வழக்கத் துக்கு மாறாக அலறல் போல சத்தம் கேட் டுள்ளது. தற்போது கார்டனில் ஆண்கள் யாரும் இல்லை. குழந்தை கள் மிகவும் பயந்து போய் உள்ளனர்.

ஐந்து நாள் களுக்கு முன்பு தி.நகரில் உள்ள இளவரசி மகன் விவேக் வீட்டுக்கு, கார்டனில் இருக்கும் நான்கு குழந்தை களின் பாது காவலர்கள் வந்து ள்ளனர். 

'குழந்தை கள் ரொம்பவும் பயந்து போய் உள்ளனர். சிறையில் இருக்கும் சின்னம்மா வுக்கும் அவர்கள் கடிதம் எழுதி யுள்ளனர். 

துணைக்கு யாரும் இல்லாத தால், நாங்கள் கூட்டிச் செல்கிறோம்' எனக் கூறி விட்டுச் சென்று ள்ளனர். இதனைக் கேட்டு கவலை யடைந்த விவேக், அன்று இரவு கார்டனில் வந்து தங்கினார். 

அன்று எந்த சத்தமும் கேட்க வில்லை. மறுநாள் அவரிடம் பேசிய குடும்ப உறுப்பி னர்கள், 'நீ கார்டனில் தங்கி விடு' எனச் சொல்ல, அவரின் மனைவியோ, 'தொடர்ச் சியாக பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. 

அங்கு தங்கிய வர்களுக்கு சிக்கல் மேல் சிக்கல் வருகிறது. உங்களு க்கு ஏதேனும் பிரச்னை வந்து விடப் போகிறது' எனச் சொல்ல, 'நான் நான்கு மாதங் களுக்கு மேல் அங்கு தங்கி யிருக் கிறேன். 

ஒன்றும் பிரச்னை இல்லை. ஜெயா டி.வி, ஜாஸ் சினிமாஸ் நிர்வாக த்தைக் கவனிக்க வேண்டி யிருப்பதால், 
நேரம் கிடைக்கும் போதெல்லாம் கார்டன் போகிறேன்' என சமாதானப் படுத்தியி ருக்கிறார். விரைவில் போயஸ் கார்டன் வீட்டில் குடியேறவும் திட்ட மிட்டிரு க்கிறார் விவேக்" என்றார் விரிவாக.

"போயஸ் கார்டனில் தான் அலறல் சத்தம் கேட்கிறது என்றால், ஜெயலலிதா சமாதியில் பாது காப்புக்கு நிற்கும் காவலர் களும் அடிக்கடி நோய் வாய்ப்படு கிறார்கள். 

அந்த சமாதியின் அருகில் போலீஸ் காரர்களால் நிற்க முடிய வில்லை. அந்தள வுக்கு அனல் காற்று வீசுகிறது. இது வரையில் 20 பேரை ஷிப்ட் முறை யில் மாற்றி விட்டார்கள். 

ஆவடி பட்டாலி யனில் இருந்தும் பாதுகாப்பு க்குப் போலீஸார் வரு கின்றனர். தினமும் யாராவது ஒருவர் காய்ச்ச லால் அவதிப் படுகிறார். 

இத்தனை க்கும் பீச்சுக்குப் பக்கத்தில் தான் இருக்கி றார்கள். 'இந்தள வுக்கு ஏன் அனல் காற்று வீசுகிறது?' என சந்தேக த்தோடு பார்க்கி றார்கள். 

இது குறித்து டி.ஜி.பி அலுவலக த்தில் தனி மீட்டிங்கே போட்டு விட்டார்கள். யாராலும் காரண த்தைக் கண்டறிய முடிய வில்லை. ஒன்றை மட்டும் தெளிவாக உணர முடிகிறது. 

ஜெயலலிதா பயன் படுத்திய பொருளில் இருந்து அவர் தொடர்பான விஷய த்தில் தலையிடு கின்றவர்கள் எல்லாம் ஏதேனும் ஒரு சிக்கலில் சிக்கித் தவிக்கி றார்கள்!’’ என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.
இவற்றை முற்றாக ஒதுக்கி விட முடியாத அளவுக்கு சம்பவங் களும் நடை பெறுகி ன்றன. எனவே, இவற்றை நம்புவதா, வேண்டாமா என்ற குழப்பத் துடனே இப்படி யான செய்தி களை கவனிக்க வேண்டியி ருக்கிறது... விகடன்.
Tags:
Privacy and cookie settings