வாட்ஸ்ஆப் மூலம் பணம் அனுப்பும் முறை !

பிரதமர் நரேந்திர மோடி 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனப் அறிவித்து, ஐந்து மாதங்களுக்கு மேலாகி விட்டது.
வாட்ஸ்ஆப் மூலம் பணம் அனுப்பும் முறை !
இந்த ஐந்து மாதங்களில் ஆன்லைன் மூலம் பரிமாற்றம் செய்யப் பட்ட தொகை கணிசமாக அதிகரித் திருக்கிறது.

இணைய தளங்கள் மூலமாக பணத்தை அனுப்புவது ஒரு பக்க மிருக்க, மத்திய அரசாங்கம் அறிமுகப் படுத்திய ‘பீம்’ (Bharat Interface for Money) என்கிற ஆப்பின் மூலம் 

சாதாரண மக்களும் எளிதாகப் பணம் அனுப்பும் சூழ்நிலை உருவாகி யுள்ளது. ‘யுனைடெட் இன்டர்ஃபேஸ் ஆஃப் இந்தியா’ என்கிற பெயரில் சில ஆண்டு களுக்கு முன்பு அறிமுக மான 

இந்தத் தொழில் நுட்பத்தின் மறுஜென்மம் தான் யுபிஐ (Unified Payments Interface) தொழில் நுட்பம். 

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், இந்த யுபிஐ தொழில் நுட்பம் மூலமாக மட்டுமே சுமார் 5,530 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப் பட்டு இருக்கிறது. 

ஒரு நாளைக்கு சராசரியாக 80,000 பரிவர்த் தனைகள் நடந்திருக் கின்றன. ஒரு பரிவர்த் தனை மூலம் சராசரியாக ரூ.4,000 பணப் பரிவர்த்தனை ஆகியி ருக்கிறது.
யுபிஐ மூலம் இத்தனை மாற்றங்கள் நடந்தி ருந்தாலும், அந்தத் தொழில்நுட்ப வசதியானது இன்னும் பெரு வாரியான மக்களைச் சென்றடைய வில்லை என்பதே உண்மை. 

காரணம், இந்த யுபிஐ வசதியை 44 வங்கிகள் அளித்தாலும், அதைச் சாதாரண மக்களும் பயன் படுத்தும் அளவுக்கு எளிதான தாக இல்லை.

இந்த நிலை மாறு வதற்கான விடிவு காலம் இப்போது வாட்ஸ்அப் மூலம் கிடைத் திருப்பது மகிழ்ச்சி யான விஷயம். 

சமீபத்தில் ஒருநாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்த வாட்ஸ்அப் நிறுவன த்தின் நிறுவனர் களில் ஒருவரான பிரையன் ஆக்டன், மத்திய தகவல் தொழில் நுட்ப மற்றும் தொலை தொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை சந்தித்துப் பேசினார். 

அதன் பின் செய்தியாளர் களிடம் பேசிய அவர், “எங்கள் நிறுவன த்தைப் பொறுத்த வரை, இந்தியா மிக முக்கிய மான நாடு. 

சுமார் 20 கோடிக்கும் அதிகமான மக்கள், வாட்ஸ்அப் மூலமாகத் தங்கள் நண்பர்கள், குடும்பம் மற்றும் சமுதாய த்துடன் இணைந் திருப்பதைக் கண்டு நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். 
இந்தியா வின் டிஜிட்டல் வர்த்தக செயல் பாட்டுக்கு வலுச்சேர்க்கும் வகையில் வாட்ஸ்அப் பங்களிக்கும்” என்று தெரிவித் திருந்தார். 

இதன் தொடர்ச்சி யாக, தனது அப்ளிகேஷன் மூலம் பணமில்லாப் பரிவர்த் தனையை மேற்கொள்ளும் நடவடிக் கையில் வாட்ஸ் அப் நிறுவனம் இறங்கி இருப்பதாகச் சொல்லப் படுகிறது.

மத்திய அரசாங்கம் ஏற்கெனவே கொண்டு வந்திருக்கும் யுபிஐ பணப் பரிமாற்ற முறை பாதுகாப் பானது. இந்த அப்ளிகேஷன் களைப் பயன்படுத்தி மொபைல் மூலமாகவே மற்றவர் களுக்குப் பணம் அனுப்ப முடியும். 

நெட்பேங்கிங் முறையில், பணம் அனுப்ப வேண்டிய வரின் அக்கவுன்ட் நம்பர், வங்கிக் கிளையின் ஐ.எஃப்.எஸ்.சி விவரம் போன்றவை தேவை. 

ஆனால், யுபிஐ முறையில் பணம் அனுப்ப வேண்டி யவரின் அக்கவுன்ட் நம்பர் மட்டும் தெரிந்தால் போதும். மேலும், 24 மணி நேரமும் உடனுக் குடன் பணம் செலுத்தவும், பெறவும் முடியும். 

வாட்ஸ்அப், தனது அப்ளிகேஷனை யுபிஐ வசதி கொண்டதாக அப்டேட் செய்ய இருக்கிறது. 

இதற்காக மொபைல் அப்ளிகேஷன் மூலமாகப் பணம் அனுப்பும் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களை அந்த நிறுவனம் பணியில் அமர்த்தி வருகிறது.
ஃப்ரீ சார்ஜ் நிறுவன மானது ‘Chat and Pay’ என்ற பெயரில் வாட்ஸ்அப் மூலமாக பணம் அனுப்பும் வசதியை ஏற்கெனவே அறிமுகப் படுத்தி யிருந்தது. 

ஃப்ரீ சார்ஜ் அப்ளி கேஷனிலிருந்து பணம் அனுப்ப வேண்டிய வரை வாட்ஸ் அப்பில் செலக்ட் செய்து, 

அதன் பின் தொகையை என்டர் செய்வதன் மூலமே பணம் அனுப்ப முடியும். இதன் மூலம் எளி தாகவும் விரை வாகவும் பணம் அனுப்ப முடிவதால் இது பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்நிலை யில், வாட்ஸ்அப் நிறுவனம் நேரடியாகவே தனது அப்ளிகேஷனில் பணமில்லாப் பரிவர்த் தனையை அறிமுகப் படுத்த விருக்கிறது.

இந்த வசதியை வாட்ஸ்அப் முதல் முறை யாக இந்தியா வில் தான் அறிமுகப் படுத்த இருக்கிறது. ஆறு மாத காலத்து க்குள் இதை அந்த நிறுவனம் செயல் படுத்தும் எனத் தெரிகிறது. 

மொபைல் எண்ணை அடிப்படை யாகக் கொண்டு செயல் படுவதால் வாட்ஸ்அப் மூலமாகப் பணம் அனுப்புவது எளிதானதும், 
பாது காப்பானதும் கூட. பாதுகாப்பை மேலும் உறுதிப் படுத்தும் வகையில் ஆதார் எண் மூலம் பயனாளர் களைச் சரிபார்க்கவும் வாட்ஸ்அப் திட்ட மிட்டு வருகிறது.

வாட்ஸ்அப் பணமில்லாப் பரிவர்த் தனையை அறிமுகப் படுத்தும் பட்சத்தில், வங்கிக் கணக்கோடு இணைத் திருக்கும் மொபைல் எண்ணை வாட்ஸ்அப்பில் பயன் படுத்த வேண்டி யிருக்கலாம். 

இதன் மூலம் இனி தனி நபருக்கு நேரடியாகப் பணம் அனுப்புவது இன்னும் எளிதாகும். இனி வாட்ஸ்அப் மூலமாக செய்திகள் மட்டு மின்றி, பண த்தையும் அனுப் பலாம்.
Tags: