கொழுப்பு ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும்.... தெரிந்து கொள்ளுங்கள் !

கொழுப்பு (கொலஸ்ட்ரால்) என்பது ஒட்டும் தன்மை கொண்ட வலுவலுப்பான‌ பொருள். நம் உடலில் கொல்ஸ்ட்ராலின் பங்கு மிக முக்கியமான ஒன்று. 
கொழுப்பு ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும்.... தெரிந்து கொள்ளுங்கள் !
ஹார்மோன் உற்பத்தி, விட்டமின் டி உற்பத்தி, உணவு செரிமானம் போன்ற உடலியல் செயல்பாடுகளில் கொலஸ்ட்ரால் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இது ஆண் பெண் இருபாலருக்கும் உடலில் பிரச்சனை தரக்கூடிய ஒன்று தான். பெண்களின் உடலில் பிட்டத்திலும் தொடைகளிலும் தோலுக்குச் சற்றுக் கீழே மட்டுமே கொழுப்பு திரளும்.

ஆனால் ஆண்களின் அடி வயிற்றுப் புழையிலும், சிறுகுடல் பகுதியிலும் கொழுப்பு திரளும். ஆண்களுக்கு கொழுப்பு அதிக பட்சமாக 0.85 முதல் 0.9 வரை இருக்கலாம். 

பெண்க ளுக்கு அதிக பட்சமாக 0.75 முதல் 0.8 வரை இருக்கலாம். இந்த உச்ச வரம்புகளை விடக் குறைவாயிருப்பதே நல்லது.
பல பெண்களுக்கு எவ்வளவு முயன்றாலும் பிட்டங்களும், தொடைகளும் குறையாது. ஏனெனில் அந்த இடங்களில் உள்ள கொழுப்பு செல்கள் விடாப்பிடியானவை. 
வாகன இன்சூரன்ஸினை புதுபிக்கவில்லை எனில் ஒரு ஹேப்பி நியூஸ் !
தாய்மையுற்றுச் சிசுவுக்குப் பாலூட்டும் போது மட்டுமே பால் உற்பத்திக் காகத் தமது கொழுப்பு அமிலங்களைத் தந்து உதவும்.

ஊட்டப் பற்றாக் குறை காரண மாகத் தாயின் உடலில் கொழுப்பு இருப்பு குறைந்து, பாலிலும் சத்து குறைகிற நிலை ஏற்படுமானால்,
பிட்டங்களிலும் தொடைகளிலுமுள்ள செல்களிலிருந்து கொழுப்பு அமிலங்கள் விடுவிக்கப் பட்டுச் சத்துக் குறைபாட்டை ஈடு செய் கிறது.

எனவே, பெண்களைப் பொறுத்த வரை கொழுப்பு என்பது மிகப் பெரிய சிக்கல்களை ஏற்படுத்துவதில்லை.
ஆனால், ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும். இதயம், நீரிழிவு சார்ந்த நோய்கள் அவர்களை அதிகம் தாக்க வாய்ப்புள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
Tags: