இனி வரும் காலத்தில் டெலி மெடிசின் !

120 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் 20 சதவிகிதம் பேருக்குத் தான் சிறுநீரகம், இதயம், நுரையீரல் போன்ற சிறப்பு மருத்துவர் களின் சேவை கிடைக் கிறது. 

இனி வரும் காலத்தில் டெலி மெடிசின் !

மீதியுள்ள 80 சதவிகிதம் பேருக்குக் கிடைப்ப தில்லை. மருத்து வர்கள் பற்றாக் குறை, மருத்துவரை சந்திக்க முடியாத நிலைமை, 

போக்கு வரத்து சிரமங்கள் போன்ற காரணங் களால் மருத்துவ ருக்கும் நோயாளி க்கும் இடையில் உண்டாகும் 
இந்த இடைவெளியை ‘டெலிமெடிசின் சிகிச்சை முறை' மூலம் சமாளிக்க முடியும்’’ என்கிறார் நரம்பியல் சிறப்பு மருத்து வரான கணபதி. 

இது தொடர்பாக தான் மேற்கொண்ட ஆய்வு பற்றியும் விளக்குகிறார். இந்திய அளவில் 3,666 நரம்பியல் மருத்துவர்கள் இருக்கிறார்கள். 

இவர்களில் 30 சதவிகிதம் பேர் பெரு நகரங்களிலும், 30 சதவிகி தத்தினர் மாநிலங்களின் தலை நகரங்களிலும், 28 சதவிகிதம் பேர் வளர்ந்து வரும் நகரங் களிலும் இருக்கிறார்கள். 

சிறுநகரங் களில் வெறும் 3 சதவிகிதம் பேர் மட்டுமே இருக் கிறார்கள். இது ஒரு தோராய மான உதாரணம் தான்.
இந்தப் பிரச்னையைத் தீர்க்க எதிர் காலத்தில் நமக்கு ஆயிரக் கணக்கான மருத்துவ மனைகள் தேவைப்படும். 

பெரிய மருத்துவ மனைகள் இல்லாத பட்சத்தில் சிறப்பு மருத்து வர்கள் இருக்கவும் வாய்ப் பில்லை. 

காஞ்சிபுரம், கடலூர், திருநெல்வேலி போன்ற மாவட்டத் தலை நகரங் களிலேயே இது தான் நிலைமை.

சிறப்பு மருத்து வரைப் பார்ப்ப தற்காக நூற்றுக் கணக்கான கிலோ மீட்டர் பயணம் செய்வது சிரமமானது.
சில நேரங்களில் அங்கேயே தங்க வேண்டி யிருக்கும். டெலிமெடிசின் சிகிச்சையின் மூலம் இந்த சிரமங்கள் இல்லா மலேயே சிகிச்சை பெறமுடியும். நோயாளி எங்கே இருக்கிறாரோ 

அங்கேயே மருத்துவர் தொழில் நுட்ப உதவியுடன், கணிப்பொறி யின் மூலம் செல்ல முடியும். இதற்கு ‘Virtual visit' என்று பெயர். இந்த வீடியோ கான்ஃப்ரன்ஸ் சிகிச்சையைத் தான் ‘டெலி மெடிசின்' என்கிறோம்.

நம் உடல் சூடாக காரணம் என்ன?

இணைய தள இணைப் புடன் லேப்டாப், கம்ப்யூட்டர் வசதி இருந்தால் போதும். ஸ்மார்ட் போன்கள் அதிகரித் திருப்பதால் டெலி மெடிசினின் சாத்தியம் இன்னும் அதிகமாகி இருக்கிறது.

இதற்கான மென் பொருளில் நோயாளியைப் பற்றிய விவரங்களை மருத்துவர் பதிந்து வைத்துக் கொள்வார்.
இனி வரும் காலத்தில் டெலி மெடிசின் !

எக்ஸ்ரே, அல்ட்ராச வுண்ட் பரிசோதனை களின் ரிப்போர்ட் களை மருத்து வருக்கு அனுப்பு வதற்கு இந்த மென்பொருள் உதவுகிறது.

மொபைல் போனில் படம் எடுத்தோ, ஸ்கேன் செய்தோ இணையத்தின் வழியாகவும் அனுப்பலாம்.

கோதுமையில் உள்ள சத்துக்கள் !

நேரில் பார்ப்பது போலவே, கம்ப்யூட்டர் மென்பொருள் மூலம் மருத்து வரால் தெளிவாகப் பார்க்க முடியும். 

நேரடியாக மருத்து வரிடம் ஆலோசனை பெறுவ தற்கும் இந்த சிகிச்சை க்கும் அதிக வித்தியாசம் கிடையாது!’
Tags: