தந்தை... மகள் பாசமும்... ஸ்கோர்கார்டின் மரியாதையும் !

கிரிக்கெட் போட்டிகளில், விளையாடிக் கொண்டிருக்கும் போது ஒரு பேட்ஸ்மேனுக்கு காயம் ஏற்பட்டாலோ, உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ, அவர் ஓய்வு பெறுவது வழக்கம்.
தந்தை... மகள் பாசமும்... ஸ்கோர்கார்டின் மரியாதையும் !
அதை, மேட்ச்சின் ஸ்கோர் கார்டில் Retired Hurt என்று குறிப்பிடு வார்கள். காயம் சரியான உடனேயோ,அல்லது நிலைமை சீரான பிறகோ, அந்த ஆட்டக் காரர் மறு படியும் வந்து ஆடலாம். 

அப்படி ஆட வில்லை யென்றால், மேட்ச்சின் அதிகாரப் பூர்வ ஸ்கோர் கார்டில், அது Retired Hurt என்றே இருக்கும்.

1877ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் மேட்ச் போட்டிகள் நடந்து வருகின்றன. பல விந்தை யான, வியக்கத் தக்க சம்பவங்கள் இந்த 140 ஆண்டுகளில் நடந்து ள்ளன. 

ஆனால், சில பல ஆச்சரியத் தக்க விஷயங்கள் நம்மை வியக்க வைக்கத் தவறுவதே இல்லை. அப்படி ஒரு சம்பவம் ஏப்ரல் 30ம் தேதி நடந்தது. 

இதில் குறிப்பிடத் தக்க விஷயம் என்ன என்றால், 140 ஆண்டு களில், 2260 டெஸ்ட் மேட்ச் போட்டி களில், 

இது வரையில் ஒரே ஒரு முறை மட்டுமே நடந்துள்ள ஒரு விஷயம், சரியாக 34 ஆண்டு களுக்கு முன்பாக, நேற்றைய தேதியில் நடந்தது.

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் – 5ஆவது டெஸ்ட் மேட்ச்:
தந்தை... மகள் பாசமும்... ஸ்கோர்கார்டின் மரியாதையும் !
1983ஆம் ஆண்டு 28 ஏப்ரல் முதல், மே மூன்றாம் தேதி வரையில் நடந்த ஒரு டெஸ்ட் மேட்ச்சின் ஸ்கோர் கார்ட் இது. ‘நாட்களை கணக்கு பார்த்தால், 6 நாட்கள் வருகிறதே?’ என்று கேள்வி கேட்க வேண்டாம். 

ஏனென்றால், அப்போ தெல்லாம் டெஸ்ட் மேட்ச் போட்டி களில் ஒரு நாள் ரெஸ்ட் டே என்று ஓய்வு நாள் இருக்கும். அப்படி, இந்தப் போட்டியில், மே 2ஆம் தேதி ரெஸ்ட் டே ஆகும்.

இந்தியாவு க்கும் மேற் கிந்தியத் தீவுகளு க்கும் இடையே நடந்த 5ஆவது டெஸ்ட் மேட்ச் போட்டி இது. 

ஏற்கெனவே நடந்த 4 போட்டி களில், இரண்டை டிரா செய்து, மீதமிருந்த இரண்டில் இந்தியா தோற்றி ருந்தது.

இதில் மேற்கிந்தியத் தீவின் பேட்டிங் ஸ்கோர் கார்டைப் பார்த்தால், அதில் Gordon Greenidge (Retired, Not Out) 154 என்று இருக்கும். டெஸ்ட் மேட்ச் வரலாற்  றில், இது 956ஆவது போட்டி. 

அது வரையில் நடந்த 955 போட்டி களில் இப்படி ஒரு சிறப்பு குறியீடு கொண்ட ஸ்கோர் கார்ட் இருந்ததே இல்லை. 

என்ன, இது, மிகவும் ஆச்சரிய மான ஸ்கோர் கார்டாக இருக்கிறதே என்று பார்த்தால், அதன் பின்னர் ஒரு சோகமான விஷயம் இருக்கிறது.

மேட்ச் விவரம்: 

முதலில் பேட்டிங் செய்தது இந்திய அணி. முதல் நாள், டீ டைமுக்கு முன்பே வெளிச்சக் குறைவு காரணமாக ஆட்டம் முடி வடைந்தது. 

இரண்டாம் நாளும் தொடர்ந்து ஆடிய இந்திய அணி, 457 ரன்கள் குவித்து, ஆல அவுட் ஆனது. 

கவாஸ்கர், அமர்நாத் ஆகியோர் அரை சதம் அடிக்க, ரவி சாஸ்திரி 102 ரன்கள் குவித்தார். கேப்டன் கபில் தேவ் 98 ரன்களில் ஆட்ட மிழந்தார். பின்னர் மேற்கிந்திய அணி ஆட ஆரம்பித்தது.
தந்தை... மகள் பாசமும்... ஸ்கோர்கார்டின் மரியாதையும் !
கார்டன் கிரீனிட்ஜ் இந்தப் போட்டிக்கு முன்பாக, மேற் கிந்தியத் தீவின் துவக்க ஆட்டக் காரர்களான கோர்டன் கிரீனிட்ஜும், டெஸ்மாண்ட் ஹெய்ன்ஸ்சும் சதமடித்தே ஆக வேண்டு மென்ற அழுத்த த்தில் இருந்தார்கள். 

ஏனென் றால், கிரீனிட்ஜ் கடைசி யாக டெஸ்ட் மேட்ச் போட்டிகளில் சதமடித்தது, 1977ல். 

ஹெய்ன்ஸ்சும் சதமடித்து 4 ஆண்டுகள் ஆகி இருந்தது. இந்தியா வின் 457 ரன்கள் அவர்களின் முன்னே ஒரு மலை யாகக் காட்சி அளித்தி ருக்கலாம். 

ஆனால், டெஸ்ட் போட்டி களின் மிகச்சிறந்த துவக்க ஆட்டக் காரர்கள் என்று பெயர் எடுத் திருந்த இந்த இணை, தங்களது வழக்க மான பாணியில் ஆடத்து வங்கி னார்கள்.

இந்தியா வின் சிறந்த பந்து வீச்சாள ரான கேப்டன் கபில்தேவ், மூன்றாவது நாள் ஆட்டம் முழுவ திலுமே கழுத்துப் பிடிப்பு காரணமாக, 4 ஓவர்கள் மட்டுமே பந்து வீசியி ருந்தார். 

மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், அந்த அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 301 ரன்கள் எடுத்தி ருந்தது. இதில், முதல் விக்கெட்டிற்கு, ஹெய்ன்ஸ்சும் கிரீனிட்ஜும் 296 ரன்களைக் குவித்தி ருந்தனர். 

கிரீனிட்ஜ் 154 ரன்களுடன் ஆ டிக்கொண்டு இருந்தார். ஆறு ஆண்டு களில், அவர் அடித்த முதல் சதம் இது தான்.

ரெஸ்ட் டே: 
ஆனால், கிரீனிட்ஜின் 2 வயது மகளுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவ மனையில் சீரிய ஸான நிலையில் இருக்கிறார் என்ற தகவலும் அன்று தான் வந்து சேர்ந்தது. 

இந்தப் போட்டி நடந்த ஆன்ட்டீகாவில் இருந்து உடனடி யாகக் கிளம்பி, ஜமைக்கா சென்று சேர்ந்தார், கிரீனிட்ஜ். 

மருத்துவ மனையிலேயே அவரது மகளுடன் இருந்து, அவரது சிகிச்சையை அருகில் இருந்து கவனித்துக் கொண்டார். 

ஆனால், இரண்டு நாட்கள் கழித்து, அவரது 2 வயது மகள், சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். 

மே 2ஆம் தேதி, அதுதான் அந்த ஐந்தாவது டெஸ்ட் மேட்சின் ரெஸ்ட் டே. அன்று தான் கிரீனிட்ஜின் மகளும் நிரந்தர மாக ஓய்வெடு க்கச் சென்று விட்டார்.

அந்தப் போட்டி, ஐந்தாவது நாளின் முடிவில், இரு தரப்பிற்கும் வெற்றி தோல்வி யின்றி டிராவில் முடிந்தது. அந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக கிரீனிட்ஜ் தான் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
தந்தை... மகள் பாசமும்... ஸ்கோர்கார்டின் மரியாதையும் !
கிரீனிட்ஜின் உணர்வு களுக்கு மதிப்பு கொடுத்து, அது வரையில் (ஏன்.. இது வரையிலும்) நடக்காத ஒரு விஷயத்தைச் செய்தார்கள். 

அந்த டெஸ்ட் மேட்ச்சின் அதிகார பூர்வ ஸ்கோர் கார்டில் Retired Hurtஎன்று குறிப் பிடாமல், Retired Not Out என்று வெளி யிட்டார்கள். 

ஒவ்வொரு ஏப்ரல் 30ஆம் தேதியும் ஒரு தந்தையின் பாசத்தை நினைவு க்குக் கொண்டு வருகிறது இந்த ஸ்கோர் கார்ட்.
Tags:
Privacy and cookie settings