ஜாலியான எக்சர்சைஸ் ஏரோபிக்ஸ் !

சாதாரண உடற்பயிற்சிகளை விட ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி சற்று வித்தியாசமானது. இதயத் துடிப்பையும், சுவாசத்தையும் தூண்டி இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதால் 
ஜாலியான எக்சர்சைஸ் ஏரோபிக்ஸ் !
இதனை கார்டியோ எக்சர்ைசஸ் என்றும் சொல்லலாம்’ என்கிறார் ஃபிட்னஸ் டிரெயினரான மீனாட்சி அருணாசலம். 

யோகா, ஏரோபிக்ஸ், பிஸியோ தெரபி என பல்வேறு உடற் பயிற்சி களில் 30 வருடம் அனுபவம் மிக்க மீனாட்சி அருணாசலம், தமிழ் சினிமா முன்னணி நட்சத்தி ரங்களின் ஃபிட்னஸ் டிரெயினர் என்பது 

ஸ்பெஷல் தகவல்.‘‘ஏரோபிக்ஸ் (Aerobics) எக்சர்சைஸ் செய்வதால் எலும்பு, தசைகள் வலுவடை வதைப் போலவே இதயம், நுரையீரலும் வலுவாகும். 
உடலின் கெட்ட கொழுப்பு கரையும்; டைப் 2 நீரிழிவும் கட்டுக்குள் வரும். தொடர்ந்து ஏரோபிக்ஸ் செய்வதன் மூலம் உடலில் உள்ள அதிகப் படியான சதையை விரைவில் கரைக்கலாம். 

தோல் சுருக்க மடைவதை தடுப்பதால் வயதான தோற்றத்தி லிருந்தும் விடுபடலாம். இருந்த இடத்திலேயே Jogging excercise செய்வ தால் கால்கள் நன்கு வலுவடை கின்றன.

கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி செய்யும் Hand excercise கைகளில் உள்ள தளர் வடைந்த தசைகளை இறுக்க மடையச் செய்யும்.
குழந்தை பிறப்புக்குப் பிறகு இளம் தாய்மார் களுக்கு இடுப்பு மடிப்புகளில் சதை போட்டு விடும். 

இவர்கள் கைகள் இரண்டையும் இடுப்பில் வைத்துக் கொண்டு இரண்டு புறமும் பக்க வாட்டில் திரும்பி வேகமாக இடுப்புக்கான பயிற்சியை செய்தால் ஸ்லிம் இடுப்பழகு கிடைத்து விடும்.

வலது கையால் இடது காலையும், இடதுகையால் வலது காலையும் மாற்றி, மாற்றி டான்ஸ் ஆடுவது போல வேகமாக செய்தால் அடிவயிற்று பகுதியில் இருக்கும் சதை குறையும். 

தற்போது அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர் களுக்கு மணிக்கட்டு, தோள் பட்டைகளில் வலி ஏற்படுகிறது. 
கால்சியம் குறை பாட்டினால் வரக்கூடிய வலிகள் !
மேலும், இருசக்கர வாகனங் களில் நெடுந் தொலைவு பயணம் செய்பவர் களுக்கும் இடுப்பு, தோள் பட்டை வலி வருகிறது.

இதற் கெல்லாம் தனியாக பயிற்சிகள் இருக்கிறது’’ என்கிற மீனாட்சி இது போன்ற பயிற்சி களை தொலைக் காட்சியிலும், 
வீடியோக் களையும் பார்த்து செய்வதை விட பயிற்சியாளர் களிடம் முறையாகக் கற்றுக் கொண்டு செய்ய வேண்டும் என்பது முக்கியம் என்கிறார். 

ஏனெனில், ஒவ்வொரு வரின் உடல் செயல்பாடும் (Metabolism) வேறு வேறு. அதற்குத் தகுந்தவாறு பயிற்சி யாளர் கற்றுக் கொடுப்பார் என்பதே அவர் சொல்லும் காரணம்.
ஜாலியான எக்சர்சைஸ் ஏரோபிக்ஸ் !
இவற்றுடன் ஏரோபிக் ஸில் முக்கியமான ஒரு ப்ளஸ்.... வழக்க மான உடற் பயிற்சிகளை மேற்கொள்ளும் போது சலிப்பு ஏற்பட்டு விடும் வாய்ப்பு உண்டு. 

அதனாலேயே தொடர முடியாமல் கொஞ்ச காலத்தில் விட்டு விடுவோம்.  

ஆனால், ஏரோபிக்ஸ் பயிற்சிகள் கற்றுக் கொள்வ தற்கும், பயிற்சி செய்வ தற்கும் சந்தோஷ மாகவும், ஆர்வ த்தைத் தூண்டும் வகையி லும் இருக்கும் 
ஆலிவ் குடைமிளகாய் சாலட் செய்வது !
என்பதால் தொடர்ந்து மிஸ் பண்ணவே மாட்டோம். ஏரோபிக்ஸில் இது முக்கிய மான விஷயம்’ என்கிறார். - இந்துமதி
Tags:
Privacy and cookie settings