மதுகடைகளை மூட போராடுபவர்களை கைது செய்ய கூடாது... உயர்நீதிமன்றம் !

டாஸ்மாக் மதுக் கடைகளை மூடக் கோரி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராடும் மக்களை காவல் துறை கைது செய்வதற்கு சென்னை உயர் நீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித் துள்ளது. 

மதுகடைகளை மூட போராடுபவர்களை கைது செய்ய கூடாது... உயர்நீதிமன்றம் !

'நெடுஞ் சாலைகளில் 500 மீட்டருக்குள் மதுபானக் கடைகள் இருக்கக் கூடாது' என்று சில மாதங் களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது. இந்த அதிரடி உத்தரவால், தமிழக அளவில் 3,303 டாஸ்மாக் கடைகள் மூடப் பட்டன.


தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் துறைகளில் டாஸ்மாக்கும் ஒன்று. இதனால், டாஸ்மாக் கடைகளை மறு படியும் வேறு இடங்களில் கொண்டு வர தமிழக அரசு முயன்றது. 

இதற்கு ஏதுவாக பல்வேறு மாற்று இடங் களையும் டாஸ்மாக் நிர்வாகம் தேடியது. இதை யடுத்து, மூடப்பட்ட டாஸ்மாக் கடை களை மக்கள் அதிகம் கூடும் இடங் களில் தமிழக அரசு திறக்க முயன்றது.

தமிழக அரசின் இந்த செயலை எதிர்த்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில், குறிப்பாக கிராமப் புறங்களில் பொது மக்கள், டாஸ்மாக் கடை களுக்கு எதிராக பல்வேறு போராட்ட ங்களை அரங்கேற்றினர். 

இந்தப் போராட்ட ங்களில் பெருந் திரளான பெண்கள் பங்கேற்றனர் என்பது அனை வரையும் கவனிக்க வைத்தது. 


ஆனால், வழக்கம் போல இந்தப் போராட்ட ங்களில் ஈடுபட்ட வர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கியது காவல்துறை.

இந்தநிலை யில், திருமுல்லை வாயில் பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடிய மக்களை போலீஸார் கைது செய்தனர். 

அவர்களை விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற த்தில் மனுத் தாக்கல் செய்ய ப்பட்டது. 

இன்று விசார ணைக்கு வந்த அந்த வழக்கில் டாஸ்மாக் மதுக் கடைக்கு எதிராக போராடு வோரை கைது செய்வதற்கு கடும் கண்டனம்

தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், 'டாஸ்மாக் கடையின் விளம்பர பலகையை கிழிப்பது பெருங் குற்றமா?' என்று கேள்வி எழுப்பினார். 


மேலும், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடும் மக்களை கைது செய்யக் கூடாது என உத்தரவு நாளை பிறப்பிக்க உள்ள தாக நீதிபதி அறிவித்தார். 

இந்த வழக்கில் சம்பந்தப் பட்ட திருமுல்லை வாயில் காவல் துறை ஆய்வா ளரையும் நாளை ஆஜராக நீதிபதி உத்தர விட்டுள்ளார்.
Tags:
Privacy and cookie settings