அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு !

அமைச்சர் காமராஜ் மீது, மன்னார்குடி போலீஸ் ஸ்டேஷனில், பண மோசடி வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. 
அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு !
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தைச் சேர்ந்த, எஸ்.வி.எஸ்.குமார் என்பவர் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தன்னிடம் ரூ.30 லட்சம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக மன்னார்குடி போலீசில் புகார் அளித்தி ருந்தார். 

இந்த புகார் தொடர் பாக எந்த நடவடிக்கை யும் எடுக்கப் படாததால் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஐகோர்ட் உத்தர விட்ட பிறகும் எந்த நடவடிக் கையும் எடுக்க வில்லை என சுப்ரீம் கோர்ட்டை அணுகினார்.

மே 02 ம் தேதி இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 'தமிழக உணவுத் துறை அமைச்சரும், அ.தி.மு.க., அம்மா அணியைச் சேர்ந்த வருமான, காமராஜ் மீதான, 
30 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் நடவடிக்கை எடுக்காதது ஏன்' என, கண்டனம் தெரிவித் துள்ளது. 'அமைச்சர் என்றால், சட்ட விதிகளுக்கு மேலானவரா' என, கேள்வியும் எழுப்பி இருந்தது.

இந்நிலை யில் குமார் அளித்த ரூ.30 லட்சம் மோசடி புகாரில் அமைச்சர் காமராஜ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings