இரட்டை இலையை பயன்படுத்துவதால் தினகரனுக்கு நோட்டீஸ் !

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தும் பிரச்சினை தொடர்பாக டி.டி.வி. தினகரனுக்கு தேர்தல் கமி‌ஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தினகரனுக்கு தேர்தல் கமி‌ஷன் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறப்பட்டு இருப்பதாவது:
இரட்டை இலையை பயன்படுத்துவதால் தினகரனுக்கு நோட்டீஸ் !
நடைபெற இருக்கும் ஆர்.கே. நகர் சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தலில் உங்கள் அணிக்கு தேர்தல் கமி‌ஷன் அ.தி.மு.க. (அம்மா) என்ற பெயரையும், 

தொப்பி சின்னத் தையும் வழங்கி யுள்ள நிலையில் உங்கள் அணியின் அதிகார பூர்வமான வலைத்தளம், 

முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் இரட்டை இலை சின்னத்தை நீங்கள் பயன் படுத்துவது பற்றி எங்கள் கவனத்துக்கு வந்து உள்ளது.

கடந்த மார்ச் 22–ந் திகதி தேர்தல் கமி‌ஷன் வெளியிட்ட உத்தரவின் படி இரட்டை இலை சின்னம் முடக்கப் பட்டு உள்ளது. தேர்தல் கமி‌ஷன் இந்த வி‌ஷய த்தில் 

இறுதி முடிவு எடுக்கும் வரை அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இந்த சின்னத்தை தங்களின் வலைத் தளம், முகநூல், டுவிட்டர் பக்கங் களில் பயன் படுத்துவது தேர்தல் கமி‌ஷன் பிறப்பித் துள்ள உத்தரவை மீறும் செயலாக கருதப்படும்.
தேர்தலில் போட்டி யிடும் அனைத்து கட்சிகளும் ஊழல் தொடர்பான செயல்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் ஆகும். 

மக்கள் பிரதி நிதித்துவ சட்டம் 1951–ன் அடிப்படை யில் வாக்காளர் களுக்கு தவறான தகவல் களை தருதல் அல்லது வாக்காளர் களை குழப்பும் வகையில் தகவல் களை அளித்தல் ஊழல் தொடர்பான செயலாக கருதப் படுகிறது.

எனவே, உங்கள் அணியின் பிரசாரங் களிலோ அல்லது உங்கள் வலைத்தளம், முகநூல், 

டுவிட்டர் பக்கங் களிலோ இரட்டை இலை சின்னத்தை பயன் படுத்துவதை உடனடியாக நிறுத்திக் கொள்ளு மாறு தேர்தல் கமி‌ஷன் உத்தர விடுகிறது.

இந்த அத்துமீறல் தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் மேலும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, சின்னங்கள் பற்றிய தேர்தல் கமி‌ஷனின் உத்தரவு 
மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைக ளை மீறியது தொடர்பாக உங்கள் தரப்பு விளக்க த்தை கேட்க ஒரு வாய்ப்பு வழங்கப் படுகிறது. 

இது குறித்து உங்களுடைய பதிலை நாளை 6–ந் திகதி (வியாழக் கிழமை) காலை 11 மணிக்குள் தேர்தல் கமி‌ஷனுக்கு அனுப்பி வைக்குமாறு உத்தர விடப்படு கிறது. இவ்வாறு கூறப் பட்டு உள்ளது.
Tags:
Privacy and cookie settings