ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் !

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் இன்று (05) ஆரம்பமாகிறது. 10 ஆவது முறையாக இடம் பெறும் ஐபிஎல் தொடரில் மொத்தமாக 60 போட்டிகள் இடம் பெறவுள்ள தோடு, தொடரின் முதல் சுற்றில் 14 போட்டிகள் இடம் பெறும்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் !
இன்று (05) இரவு 8.00 மணிக்கு இடம் பெறும் முதல் போட்டியில், கடந்த தொடரில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் ஹைதரபாத் மற்றும் பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் மோது கின்றன.

இந்தியா வில் இடம் பெறும் குறித்த போட்டித் தொடரில் 08 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கு கொள்வதோடு, இலங்கை யிலிருந்து, 

அஞ்சலோ மெதிவ்ஸ் (டெல்லி டெயார் டெவில்ஸ்) லசித் மாலிங்க (மும்பாய் இந்தியன்ஸ்), அசேல குணவர்தன (மும்பாய் இந்தியன்ஸ்) ஆகியோர் பங்குபற்று கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
குறித்த போட்டிகள் மேய் மாதம் 21 ஆம் திகதி நிறை வடையும் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings