ஆண்களின் ஆரோக்கியத்துக்கு சில விதிகள் !

டூ வீலர் டயர் இரண்டு முறை பஞ்சர். ரொம்ப தேய்ஞ்சு போச்சு சார்... டயரை மாத்தணும் - மெக்கானிக் அறிவுறுத்தி யிருப்பார் அலுவலகம் விரைகிற அவசரம், பரபரப்பான வாழ்க்கை, வேலைப்பளு... 
ஆண்களின் ஆரோக்கியத்துக்கு சில விதிகள் !
என என்னென்னவோ காரணங்களால் அப்புறம் பார்த்துக்கலாம் என அசட்டையாக இருந்திருப்போம். 

அந்தச் சின்ன அலட்சியம், ரிம் பழுதாகி, துருப்பிடித்து முழு வீலையே மாற்ற வேண்டிய நிலைக்குக் கொண்டு வந்திருக்கும். உண்மையில், பல ஆண்கள் அந்த தேய்ந்து போன டயர் மாதிரி தான். 

குடும்பம், எதிர்காலத் திட்டம், ஒவ்வொரு மாதமும் முடித்தே தீர வேண்டிய டார்கெட், துரத்திப் பிடித்து சம்பாதிக்க வேண்டிய கட்டாயம்... 

என உடல் குறித்த அக்கறை யின்மைக்கு ஆண்களுக்குப் பல காரணிகள். இதய நோய், நெஞ்சு எரிச்சலாக வந்து சிம்ப்டம்ஸ் காட்டி யிருக்கும்; `காஸ் ட்ரபுளா இருக்கும்’ என்று சோடா குடித்து சமாளிப் பார்கள்.

சிறுநீரகத்தில் கல் வந்திருப் பதன் அறிகுறியாக சிறுநீர் அடர் மஞ்சளாகப் பிரியும், உடல் உஷ்ணமா இருக்கும். வாழைத் தண்டு கூட்டு சாப்பிட்டா சரியாப் போயிடும்’ என்று வேலையைப் பார்க்கக் கிளம்பி விடுவார்கள். 

இப்படி சின்னச் சின்ன விஷயங்களில் உடல் நலத்தின் மீதான அக்கறை யின்மை, அந்த டூ வீலருக்கு நடந்தது போல பெரிய பிரச்னையாக பிற்காலத்தில் வெடிக்கும்; 

ஆரோக்கிய த்தை பெரிய அளவில் பாதிக்கும் நோய் கூட நன்கொடை யாகக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. 

எனவே ஆண்கள் உடல்நலம் காப்பது மிக அவசியம்! ஆண்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய 10 ஆரோக்கிய விதிகள்....
ஆண்களின் ஆரோக்கியத்துக்கு சில விதிகள் !
உங்களுக்காக ஒரு டாக்டர்!

இந்தியாவில் ஆங்கில மருத்துவம் வேரூன்றி, விருட்ச மாக வளர்ந்து நிற்கிறது. ஆனால், ஆங்கிலே யர்கள் கறாராகச் செய்யும் ஒரு பழக்கத்தை நாம் கடைப் பிடிப்பதில்லை. 

அது, ரெகுலர் செக்கப். நாம் வயிற்று வலி, ஜுரம் போல உடல் நலக் கோளாறுகள் வந்தால் தான் மருத்துவரிடம் போகிறோம். 

மேற்கத்திய நாடுகளில் உடல்நிலை நன்றாக இருந்தால் கூட மருத்து வரைப் பார்த்து ஒரு `ஹாய்’ சொல்லி, செக்கப் செய்து கொள்வது பெரும்பாலானோரின் பழக்கம். 

`பிரஷர், சுகர் இருக்கானு பரிசோதிக்கற தெல்லாம் நாப்பது வயசுக்கு அப்புறம் செய்யவேண்டிய வேலை’ என்கிற எண்ணமே தவறு. 

ஆண்கள் தங்கள் இடுப்புக்கு மேலேயும் கீழேயும் இருக்கும் அத்தனை உறுப்புகள் மீதும் கருணை காட்டினால் தான், எதிர்காலம் பிரச்னை இல்லாமல் நகரும் என்பதைப் புரிந்து கொள்வது நல்லது. 

எனவே, ஒவ்வொரு மாதமும் டாக்டரைப் பார்க்க வேண்டும் என்பதை வழக்கமாக்கி க்கொள்ளுங்கள். 

வீட்டுக்குப் பக்கத்தில் அல்லது வேறோர் இடத்தில் உங்களுக்கு உதவி செய்வார் என நம்புகிற, பொருத்தமான டாக்டர் ஒருவரைக் கண்டு பிடியுங்கள். 

அவரிடம் மனநலம், பாலியல் செயல்பாடு உள்பட உங்கள் உடலின் அத்தனை அம்சங் களையும் வெளிப் படையாகப் பேசுங்கள்.டாக்டர் தருகிற ஆலோ சனை களையும் சிகிச்சை களையும் தவறாமல் கடைப் பிடியுங்கள்.
(nextPage)
கவனித்தல் நன்று!
ஆண்களின் ஆரோக்கியத்துக்கு சில விதிகள் !
உடலில் ஏற்படும் சின்னச் சின்ன மாற்றமோ, வலியோ அலட்சியம் வேண்டாம். மலச்சிக்கல், கண் பார்வை மங்குதல், நெஞ்சுப் பகுதியில் வலி... எது வாகவும் இருக்கட்டும். 

உடனே மருத்து வரிடம் போய் ஆலோசனை பெறுவது நல்லது. ஆண்களில் பலர் உடல் உணர்த்தும் அறிகுறி களைக் கவனிக்காமல் விடுவதே பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படு வதற்குக் காரணம். கவனித்தல் நன்று.

சுய வைத்தியம் வேண்டாமே!

உடம்பெல்லாம் ரொம்ப வலியா இருக்கு. பெயின் கில்லர் ஏதாவது கொடுங்களேன் என மருந்துக் கடைகளில் 10 ரூபாய்க்கு மாத்திரை வாங்கிச் சாப்பிடும் ஆண்கள் கவனிக்க..! 

வலி நிவாரணி மாத்திரை நிச்சயமாக பக்க விளைவுகளை ஏற்படுத்தும். கொடுத்த 10 ரூபாயின் பலனாக, நமக்கு இல்லாத பல வியாதி களையும் உடலுக்குக் கொண்டு வந்து சேர்க்கும். 

அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ டாக்டரைப் பார்த்து சிகிச்சை பெறுவதே நல்லது. தலை வலியோ, வயிற்றுப் போக்கோ, முழங்கால் வலியோ.... அது வந்திருப்பது உங்கள் உடம்புக்குத் தானே! எனவே, சுய வைத்தியம் வேண்டாம்!
(nextPage)
எக்சர்சைஸ்... மாற்றுங்கள் மக்களே!
ஆண்களின் ஆரோக்கியத்துக்கு சில விதிகள் !
ஆண்களில் சிலருக்கு இருக்கும் நல்ல பழக்கம் உடற் பயிற்சி. ஜிம்மில் ரெகுலராகப் போய் ஒரே விதமான பயிற்சிகளைச் செய்வது தவறில்லை. அது உடலைக் கச்சிதமாக வைத்திருக்கும் தான். 

ஆனால், ஸ்ட்ரெட்சிங்க், ஏரோபிக்ஸ், தசைகளுக்கான பயிற்சிகள்... என அவ்வப் போது உடற் பயிற்சிகளை மாற்றி மாற்றிச் செய்வது, வயதாகும் காலத்தில் உடற்பயிற்சிகளை மாற்றிக் கொள்ளவும், எளிய பயிற்சி களைச் செய்யவும் உதவும்.

உணவு செழிப்பானதாக இருக்கட்டும்!

உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துகளை அன்றாடம் கொடுக்க வேண்டியது மிக முக்கியம். அதிக கலோரிகள் கொண்ட உணவு களைத் தவிர்க்கலாம். 

வித விதமான ஆரோக்கிய உணவுகளைத் தேடித் தேடி சாப்பிடலாம். வாழைப் பழம், மீன் உணவுகள், புராக்கோலி, முந்திரி- பாதாம் போன்ற நட்ஸ் வகைகள், சிறு தானியங்கள், கீரைகள், சோயா, பழ வகைகள்... 

என ஆண்களை அரவணைத்து ஆரோக்கியம் காக்கக்கூடிய பல உணவுகள் இருக்கின்றன. அவற்றைச் சாப்பிடலாம்.  அதே நேரத்தில் நம் உடல் நலத்து க்கும் அவை பொருத்தமானதாக இருக்க வேண்டும் இல்லையா? 

ஒரு வார்த்தை உங்கள் டாக்டரிடம் கேட்டு விட்டு, இந்த உணவு வகைகளைச் சாப்பிடுவது நல்லது. சாப்பிடும் உணவு, நம் உடலுக்கு செழிப்பு தருவதாக இருக்கட்டும்.

உறக்கத்துக்கு முன்னுரிமை!
ஆண்களின் ஆரோக்கியத்துக்கு சில விதிகள் !
நான் கடுமையா எக்சர்சைஸ் செய்யறேன்ல... என் உடம்புக்கு ஒண்ணும் ஆகாது. நாலு, அஞ்சு மணி நேர தூக்கம் போதாதா?’ எனப் பல ஆண்கள் நினைக்கிறார்கள். 

இது தவறு. நாள் முழுக்க ஓடியாடி வேலை பார்க்கும் உடலுக்கு ஓய்வு தருவது தூக்கம் மட்டும் தான். உடலின் உள் உறுப்புகள் தங்கள் இயக்கத்தைப் புதுப்பித்துக் கொள்வதும் தூக்கத்தின் போது தான். 

உடல் உழைப்பு செய்பவரோ, செய்யாத வரோ அத்தனை பேருக்குமே ஆறில் இருந்து எட்டு மணி நேர ஆழ்ந்த தூக்கம் அவசியம். தூக்க த்தைத் தவிர்க்காதீர்கள் பாஸ்!
(nextPage)
மனதைக் கவனிக்க மனது வையுங்கள்!

சில ஆண்கள் உடல் நலத்தைக் கூட பராமரித்து விடுவார்கள்; ஆனால், மனப் பிரச்னை களில் அலட்சியம் காட்டு வார்கள். மனநலம், உடல் நலத்தை விட முக்கிய மானது என்பதை அவர்கள் அறிந்திருப்ப தில்லை. 

பதற்றம், அதிக உற்சாகம் அல்லது சோர்வு (Bipolar disorder) போன்ற பிரச்னைகள் அடிக்கடி ஏற்படுகிறதா? வெவ்வேறு பிரச்னைகள் காரணமாக மது அருந்துவதும், புகை பிடிப்பதும் அதிகமாகி விட்டதா? உடனே கவனியுங்கள். மனநல மருத்து வரிடம் ஆலோசனை பெறுங்கள். 

இவை, பின்னாளில் மன அழுத்தம் போன்ற பெரிய பிரச்னை களை ஏற்படுத்தி, மனதை மட்டு மல்லாமல், உடலையும் சேர்த்துப் பாழ்படுத்தி விடும்.  

அதே போல வீட்டில் யாருக்காவது மனநல பாதிப்பு இருந்தி ருந்தாலோ, தற்கொலை நிகழ்வுகள் நடந்திருந்தாலோ, உடல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டி ருந்தாலோ... 

மனநல மருத்துவரை நாடி, தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு ஆண்கள் தகுந்த கவுன்சலிங் பெற வேண்டியது மிக மிக அவசியம்.

ஆரோக்யத்தின் அளவுகோல் பாலியல் ஈர்ப்பு!
ஆண்களின் ஆரோக்கியத்துக்கு சில விதிகள் !
சரியான தூக்கம் இல்லாத, மன அழுத்தம் உள்ள, அதிகமாகக் குடிப் பழக்கம் உள்ள ஆண் களால் செக்ஸில் நிறைவாக ஈடுபட முடியாது. 

ஆண்மை எழுச்சி தான் (Erection) உடலின் மொத்த ஆரோக்கியத்துக் கான அளவு கோல்’ என்கிறார்கள் மருத்துவர்கள். அது குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது. 

ஆரோக்கிய மான உணவு, ஆழ்ந்த உறக்கம், முறையான உடற் பயிற்சி ஆகியவை பாலியல் ஈர்ப்பையும் எழுச்சி யையும் தக்க வைத்துக் கொள்ள ஆண்களு க்கு உதவும்.
(nextPage)
புராஸ்டேட் வருமுன் காக்க!
ஆண்களின் ஆரோக்கியத்துக்கு சில விதிகள் !
முதுமை நெருங்கும் காலத்தில் ஆண்களை அதிகம் பாதிக்கும் பிரச்னை புராஸ்டேட் (Prostate) கேன்சர். இதைப் பொறுத்த வரை நமக்கு வராது என்கிற அலட்சியம் வேண்டாம். 

இடுப்புவலி, முதுகுவலி, சிறுநீரகம் கழிப்பதில் பிரச்னை ஆகியவை இருந்தால் அலட்சியம் கூடாது. உடனே மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். 

புராஸ்டேட் புற்று நோய் வராமல் தடுக்க ஆரோக்கிய மான வாழ்வியல் முறை, உணவுப் பழக்கம் போன்றவை புராஸ்டேட் உண்டாகும் வாய்ப்பை வெகுவாகக் குறைக்கும்.

மகிழ்ச்சியை மீதம் வைக்காதீர்கள்!
ஆண்களின் ஆரோக்கியத்துக்கு சில விதிகள் !
வார இறுதி நாள், விடுமுறை தினங்களில் பார்த்துக் கொள்ளலாம் என்று மகிழ்வான தருணங்களை, மகிழ்வூட்டும் விஷயங்களை தள்ளிப் போடாதீர்கள். 

ஒவ்வொரு நாளையும் உற்சாகமாக வரவேற்கத் தயாராகுங்கள். ஒவ்வொரு நாளிலும், உங்களுக்காக, உங்கள் சந்தோஷத்துக்காக தனியாக நேரத்தை ஒதுக்குங்கள்! பிடித்த விஷயம் ஏதாவது ஒன்றைச் செய்யுங்கள். 

அது, ஓடுவதாக, ஆடுவதாக, புத்தகம் படிப்பதாக, பிடித்த இசையைக் கேட்பதாக, தியானம் செய்வதாக, யோகாவில் ஈடுபடுவதாக... எதுவாக வேண்டு மானாலும் இருக்கலாம். 

நண்பர்களுடன் அரட்டைய டிப்பது கூட உங்களை உற்சாக மூட்டும் என்றால் அதற்காக நேரம் ஒதுக்குவதில் தவறில்லை. ஏனென்றால், ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியான நாளாக இருப்பவர்களை விட்டு ஆரோக்கியம் என்றும் விலகுவ தில்லை!
Tags: