ஆர்.கே.நகர் மக்களுக்கு அடி உதை !

தமிழகத்தில் எத்தனைப் பிரச்னைகள் இருந்தாலும், தற்போது அனைவரின் முக்கிய எதிர்பார்ப்பாக இருப்பது ஆர்.கே நகர் தேர்தல் தான். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யார் ஜெயிப்பார்கள்?
ஆர்.கே.நகர் மக்களுக்கு அடி உதை !

யார், யாரெல்லாம் மண்ணைக் கவ்வப் போகிறார்கள் என்ற பரபரப்பு இப்போதே அனைவரையும் தொற்றிக் கொண்டுள்ளது. 


தமிழகத்தின் மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களே மிகவும் எதிர்பார்க்கும் நிலையில், ஆர்.கே நகரைப்பற்றிச் சொல்லவா வேண்டும்? 

எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சிகளின் தோரணங்கள், வீதிகள்தோறும் கட்சியினரின் பிரசாரம், கரை வேட்டிகளின் அணிவகுப்பு என ஆர்.கே நகர்த் தொகுதி முழுவதுமே படுபிஸியாகக் காணப்படுகிறது. 

அது மட்டுமா? அரசியல் கட்சியினர், வாக்காளர் களுக்குப் பணப் பட்டுவாடா செய்வதும் கனஜரூராகவும், அடிதடிக ளுடனும் நடந்து வருகிறது. 

ஆர்.கே நகர்த் தொகுதிக்குட் பட்ட தண்டையார் பேட்டை அன்னை கருமாரியம்மன் கோயில் பகுதியில், அ.தி.மு.க. அம்மா அணி வேட்பாளர் டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் சிலர், வாக்காளர் களுக்குப் பணப் பட்டு வாடா செய்தனர். 

அப்போது அங்கு வந்த ஓ.பன்னீர் செல்வம் தலைமை யிலான அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணியைச் சேர்ந்தவர்கள், பணப் பட்டுவாடா வைத் தடுத்தனர். 

இதனால் இருதரப்பி னருக்கும் இடையே பயங்கர அடிதடி, சண்டை ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள சாலையில் இரு அணியின் ஆதரவா ளர்களும் கட்டிப் புரண்டு சண்டை போட்ட காட்சியை ஏராளமானோர் பார்த்துச் சென்றனர். 


இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் நம்மிடம் போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தனர். நாமும் சம்பவ இடத்துக்கு விரைந்தோம்...

டி.டி.வி தினகரன் ஆட்களால் தாக்கப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த சுமதி சங்கர் பணப்பட்டுவாடா பற்றி விவரித்தார்... 

"இன்னைக்கு அதிகாலை யில இருந்து எல்லா கட்சிக் காரங்களும் ஒவ்வொரு வீடா வந்து துண்டு நோட்டீஸ் கொடுத்தும், வீதி பிரசாரம் செஞ்சும் வந்தாங்க. 

அப்போ தினகரனோட ஆட்கள் இருபது, முப்பது பேரு வந்தாங்க. ஆனா, அவங்க எல்லோர் வீட்டுக் குள்ளயும் போயிட்டு கொஞ்ச நேரம் கழிச்சி தான் வெளியே வந்தாங்க. 

ஏன், தேவை இல்லாம எல்லாருடைய வீட்டுக் குள்ளேயும் போயிட்டு வர்றாங் கன்னு பாத்தா, தினகரனுக்கு தொப்பி சின்னத்துல ஓட்டுப் போடுங்கன்னு சொல்லி, ஓட்டு ஒன்றுக்கு நாலாயிரம் ரூபாய் கொடுத்துட்டு வந்தாங்க. 

உடனே, நான் எங்க ஏரியாவுல எல்லார் கிட்டயும் சொன்னேன். அதுக்குள்ள பிரசாரம் செஞ்சிகிட்டு இருந்த ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் இங்கே வந்துட்டாங்க. 


பணம் கொடுத்த வங்கள கையும், களவுமா பிடிச்சி திட்டினாங்க. தினகரனோட ஆட்களோ, உனக்கு எங்க வலிக்குதுனு கேட்டு முதல்ல ஒருத்தரோட சட்டைய புடிச்சு தள்ளி விட்டாங்க. 

அப்பறம் பன்னீர் செல்வம் தரப்பினரும் அடிக்க ஆரம் பிச்சாங்க. ரெண்டு தரப்புக்கும் சண்டை அதிகமா யிடுச்சி. அப்போ ஒருத்தர் உன்னால தான், இவ்ளோ பிரச்னைன்னு சொல்லி என் கையப் புடிச்சு முறுக்கி அடிச்சிட்டாங்க. 

அதுக்கப்பறம் போலீஸு க்குத் தகவல் சொல்ல... போலீஸ் காரங்க வந்து பணம் வச்சிருந்த தினகரனோட ஆட்களைப் புடிச்சிட்டுப் போய்ட்டாங்க.." என்றார்.

"இதை விட பெரியகூத்து, கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று நடந்துச்சு, தினகரன் எங்க ஏரியாவுக்கு வர்றதா, இருந்தாரு. 

அவருக்கு வரவேற்பு கொடுக்கறது க்காக, இந்த ஏரியாவுல இருக்குற வங்களுக்கு எல்லாம் ரகசிய அறிவிப்பு கொடுத்தாங்க. வீட்டுக்கு முன்னாடி தொப்பி சின்னத்துடன் கோலம் போட்டிருந்தா, 

ஆர்.கே.நகர் மக்களுக்கு அடி உதை !

அவங்களுக்கு 100 ரூபாய், ஆரத்தி எடுத்தா 200 ரூபாய், அதிலும் பட்டுப் புடவை கட்டி ஆரத்தி எடுத்தா 300 ரூபாய், தினகரன் கூட பிரசாரத்து க்காக சென்றால், 


400 ரூபாய், தினகரன் வரும் போது வீட்டு மாடியி லிருந்து மல்லிகைப்பூ தூவினா அதுக்கு 400 ரூபாயும் தர்றதா சொல்லிட்டுப் போனாங்க. 

இதனால, இந்தப் பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தோம். நாங்களும் தினகரன் இங்க வரக்கூடாதுன்னு எதிர்ப்பு தெரிவிச்சோம். அதனால அவர் இங்க வரல. 

ஆனா, அவர் ஆட்கள் மட்டும் இங்க சுத்திக்கிட்டு இருக்காங்க. வாக்காளர் களுக்குப் பணம் கொடுக்கிறது தப்புன்னு சொன்னா, மக்களையும் அடிக்க வர்றாங்க. 

இன்னைக்கு காலைல கூட ஒரு சின்னப் பையன் தினகரன் சார்பா ஒட்டியிருந்த போஸ்டர், பலூன்கள கிழிச்சிருக்கான். அதற்காக அந்த பையனைப் போட்டு அடிச்சிருக்காங்க. 

இந்த ஏரியா வுக்குனு அவங்க சார்புல ஒரு பூத் வச்சிருக்காங்க. அதுல ஒட்டுமொத்த பணமும் இருக்கு. இந்த சண்டையில அந்த வீட்டப் பூட்டிட்டு ஓடிட்டாங்க. 

அந்த வீட்டைத் திறந்து பார்த்தா நிறையப் பணம் இருக்கும். இப்பக்கூட இருபது லட்சத்து க்கும் மேல பணம் மாட்டி இருக்கு என்றனர் அப்பகுதி மக்கள்.

பிடிபட்டவர்கள் யார்? எவ்வளவு பணம் சிக்கிய துன்னு தெரிந்து கொள்வ தற்காக, H-6 காவல் நிலையத் துக்குச் சென்றோம். அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய போலீஸார் பாது காப்புக்காக நின்று கொண்டி ருந்தனர். 


அதை யெல்லாம் சொல்ல முடியாது. கேஸ் போட்டிரு க்கோம். அப்புறமா வந்து தெரிஞ்சுக்கங்க என பத்திரிகை மற்றும் மீடியாக் காரர்களை போலீஸார் விரட்டியடித்தனர். விவரம் தெரியாம எங்களால் போக முடியாது. 

நாங்க போய் விசாரிச்சுக்கிறோம் என நாம் சொன்ன போது, யாரா இருந்தாலும் உள்ளே விட முடியாது என்று உறுதியுடன் தெரிவித்து விட்டனர். கடும் வாக்கு வாதத்துக்குப் பிறகு, காவல் நிலையத்து க்குள் படம் பிடிக்க அனுமதியில்லை; 

அப்படி என்றால் அனுமதிக்கிறோம் என்றனர். காவல் நிலையத்துக்குள், சுமார் இருபதுக்கும் மேற்பட்டோர் காவலில் வைக்கப் பட்டிருந்தனர். 

எவ்வளவு பணம் பறிமுதல் செய்தார்கள் என்பதை இறுதி வரை போலீஸார் தெரிவிக்க மறுத்து விட்டனர். எது எப்படியோ ஆர்.கே நகர் தொகுதியில் தினகரனின் பணம் தாறு மாறாய் பாய்கிறது என்பது மட்டும் உண்மை!
Tags:
Privacy and cookie settings