QR கோடும், செயல்படும் விதமும் !

QR கோட் எனப்படும் குயிக் ரெஸ்பான்ஸ் கோட்-ஐ நம்மில் பலரும் பயன் படுத்தியி ருப்போம். விளம்பரங்கள், செய்திகள், வங்கி ஆப்ஸ்கள், இ- வாலட்கள் என


இதன் பயன்பாடு தற்போது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதுவும் டிஜிட்டல் பணப் பரிவர்த் தனைகள் அதிகமான பின்பு, இவற்றின் மவுசு மீண்டும் அதிகரித்து விட்டது எனலாம். 

நாம் சில நொடிகளில் ஸ்கேன் செய்து, தகவல் களைப் பெற உதவும் இந்த QR கோட் எப்படி வேலை செய்கிறது எனப் பார்ப்போமா?

நாம் ஷாப்பிங் மால்களில் வாங்கும் பொருட்களின் மீது இருக்கும் பார்கோடின், 2D வெர்ஷன் தான் இந்த QR கோட். ஸ்மார்ட் போன்களால் பிரபலம் அடைந்த 

டெக்னாலஜி யில் இதுவும் ஒன்று. எழுத்துக்கள், எண்கள், குறியீடுகள் போன்ற வற்றை QR கோட்களாக மாற்றி பகிர்ந்து கொள்ளலாம். இதற்கு உதாரண ங்கள் தான், இணைய முகவரி களின் QR கோட்கள்.


QR கோடின் வடிவமைப்பு:

இந்த கோட் களைப் பார்த்தால், ஏராளமான புள்ளிகள் கறுப்பு மற்றும் வெள்ளை யாக கலந்தி ருக்கிறது என மட்டும் தான் தெரியும். 

ஆனால் இந்த கோட் களுக்கு துல்லிய மான வடிவமைப்பு இருக்கிறது. நீங்கள் சில QR கோட்களை கவனித் தாலே இது தெரியும்.

1. QR கோடில் இருக்கும் இந்த மூன்று புள்ளிகள், கோட் அச்சிடப் பட்டிருக் கும் திசை யினைக் குறிக்கும். இதன் மூலம் தான் ஸ்கேன் செய்யும் போது, டேட்டா படிக்கப் படும்.


2. QR கோடை சுற்றியி ருக்கும் இந்த வெற்றிடம், ஸ்கேனர் எளிதாக ஸ்கேன் செய்ய உதவுகிறது.

சுற்றியி ருக்கும் பரப்பில் இருந்து, QR கோட் அச்சிடப் பட்டிருக் கும் பரப்பை தனித்துக் காட்டவே இந்த வெற்றிடம்.


3. அதேபோல இந்த கோடை உற்றுப்பார்த்தால், சில புள்ளிகள் மட்டும் தனியாக, பெரிதாக மற்றவை களிடம் இருந்து வித்தியாச மாகத் தெரியும். 


குறைவான டேட்டா உள்ள கோடில் ஒரு புள்ளியும், மிக அதிக டேட்டா உள்ள கோடில் அதிக மாகவும் இருக்கும். இதன் பயனும், ஸ்கேனர் சரியான வரிசையில் தகவல் களைப் படிக்க செய்வது தான். 


நீங்கள் QR கோடில் கொடுக்கும் தகவல்கள் கீழிருந்து மேலாக அடுத் தடுத்த வரிசை களில் பதிந்து வைக்கப் படும்.

நீங்கள் அந்த கோடை ஸ்கேன் செய்யும் போது, அதே வரிசையில் ஸ்கேனர் உங்கள் கோடினைப் படிக்கும். 

நீங்கள் ஸ்கேன் செய்யும் டிவைசை எந்தக் கோணத் திலும் நீங்கள் வைத்தி ருக்கலாம். ஆனாலும் டேட்டா சரியான வரிசையில் படிக்கப்பட வேண்டும்; 

அதற்கு உதவி செய்பவைதான் இந்த சிறப்பு புள்ளிகள். இவை அந்த தகவல் களின் சரியான வடிவத்தை ஸ்கேனர் களுக்கு உணர்த்தும்.

4. இது தவிர QR கோடில் இருக்கும் தகவலின் தன்மை, வெர்ஷன் மற்றும் மொத்த தகவல்கள் அனைத்தும் ஒரு QR கோடில் அடங்கி யிருக்கும். 


இப்படி அனைத்து தகவல் களையும் கொண்டு தான், QR கோட் ஸ்கேனர்கள், கோட்-ஐ ஸ்கேன் ஸ்கேன் செய்யும். பிறகு அதில் இருக்கும் தகவல் களை உங்களு க்குக் காட்டும்.


QR கோடும், செயல்படும் முறையும்

5. ஒரு QR கோடில் சிறிய அளவில் சேதம் ஏற்பாட்டால் கூட, உங்கள் ஸ்கேனர்களால் தகவல்களை முழுமையாகப் பெற முடியும்.

அதே போல கோடிற்குள் பதியப்படும் தகவல் களின் அளவைப் பொறுத்தே, 


அவற்றின் வடிவமை ப்பும் இருக்கும். உதாரண மாக நான்கு எழுத்துக்கள் மட்டுமே உள்ள QR கோட் பார்க்க எளிமை யாக இருக்கும்.

ஆனால் 20 எழுத்து க்கள் கொண்ட QR கோட் பார்க்க சிக்கல் நிறைந்ததாக இருக்கும்.

எப்படி QR கிரியேட் செய்வது?

இதுக்கு உரிய தகவல்கள் ஏராளமான இணைய தளங்களில் கிடை க்கின்றன.

அவற்றில் நீங்கள் இலவச மாகவே QR கோட்களை கிரியேட் செய்து கொள்ளவும், டவுன்லோட் செய்து கொள்ளவும் முடியும். 

சில தளங்களில் நீங்கள் பணம் செலுத்து வதன் மூலமாக, உங்கள் நிறுவனங் களின் லோகோக் களை கூட QR கோடில் சேர்க்க முடியும். 
நம்மாழ் வாரின் நல்மொழிகள் அடங்கிய சில QR கோட்கள் கீழே, கொடுக்கப் பட்டிருக் கின்றன. அவற்றை ஸ்கேன் செய்து பாருங்களேன்!
Tags:
Privacy and cookie settings