ஆதார் அட்டையின் முக்கிய தகவல் கசிந்தன | The main information of Aadhaar card was leaked !

சண்டிகர் மாவட்ட நிர்வாக வலை தளத்தில் ஆதார் அடையாள அட்டை தொடர்பான தரவு மீறல்கள் ஏற்பட்ட தாக சர்ச்சை எழுந்துள்ளது. 


யூஐடி எனப்படும் தனிப்பட்ட அடையாள எண்ணுடன் சம்பந்தப் பட்ட நபரின் உணவுப் பொருள் வழங்கல் அட்டை தகவல் களும் வலை தளத்தில் காணப் பட்டது.

பிரத்யேக தகவல்கள் கசிந்தது வெளிச் சத்திற்கு வந்தவுடன், இந்த வலைத்தள பக்கம் நீக்கப் பட்டது.

முன்பு, இது போன்ற தரவுகள் ஜார்கண்ட் மாநில வலைத் தளத்திலும் கசிந்தது குறிப்பிடத் தக்கது.

இந்நிலை யில், ஆதார் அடையாள அட்டை கட்டாய மாக்கப் படுவது தொடர்பாக பல்வேறு புகார்களும், விமர் சங்களும் எழுந்துள்ளன.

வெவ்வேறு அரசு திட்டங் களுடன் ஆதார் அடையாள அட்டையை இணை க்கும் லட்சிய திட்டத்தை தற்போது இந்திய அரசு செயல் படுத்திக் கொண்டி ருக்கிறது.

ஆதார் அடையாள அட்டை அறிமுகப் படுத்தப் பட்ட காலத்தில், ஆதார் அடையாள அட்டை கட்டாய மாக்கப் படாது என்று கூறப் பட்டது.

ஆனால், தற்போதைய நரேந்திர மோதி அரசில், அரசு சேவைகள் முதல் டிஜிட்டல் விண்ணப் பங்கள் வரை பல்வேறு திட்டங் களில் ஆதார் அடையாள அட்டை கட்டாய மாக்கப் படுவதாக குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

ஆதார் அடையாள அட்டையை அரசு எவ்வாறு கட்டாய மாக்குகிறது என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் வினவி இருந்தது குறிப்பிடத் தக்கது.

ஆதார் அடையாள அட்டை கட்டாய மாக்கப் படுவது தொடர்பாக தங்களுக்கு ஒப்புதல் இல்லை என்பதை தெரிவித்த உச்ச நீதிமன்றம் , 


'ஆதார் அடையாள அட்டைக்கு பதிலாக மாற்று சான்றிதழ் களை வழங்குவது தொடர்பாக நாங்கள் உத்தர விட்டுள்ள போது, 

ஆதார் அடையாள அட்டையை நீங்கள் எவ்வாறு கட்டாய மாக்கலாம்?'' என்று இந்திய அரசை வினவியது.

ஆதார் அடையாள அட்டை கட்டாய மாக்கப்படு வதற்கு எதிரான நிலைப் பாடு கொண்ட வர்கள், இந்த அட்டை கட்டாய மாக்கப் படுவது, 

ஆதார் அடையாள அட்டையில் இருந்த தகவல் களை திருடுவது மற்றும் அது தவறாக பயன் படுத்தபடுவது ஆகிய ஆபத்துக் களை அதிகரிக்கும் என்று வாதிடு கின்றனர்.
Tags:
Privacy and cookie settings