மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதியுதவி... முதல்வர் !

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பங்களுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதியுதவி... முதல்வர் !
இது தொடர்பாக அவர் இன்று வெளி யிட்டுள்ள அறிக்கையில், "திருவள்ளூர் மாவட்டம், கசவநல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி சரசு; திருநெல்வேலி மாவட்டம், 

சங்கரன்கோவில் வட்டம், வடக்குபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் பெருமாள்; சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த மன்னார்நாயுடு என்பவரின் மகன் செல்வம்;

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், அரியாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் தாயார் செல்லம்மாள் 

மற்றும் வந்தவாசி வட்டம், வெடால் கிராமத்தைச் சேர்ந்த எல்லப்பன் என்பவரின் மகன் சுப்பிரமணி; திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், 

கல்லகம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் சங்கர்; பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், ஜமீன் பேரையூர் கிராமத்தைச் சேர்ந்த செங்கமுத்து என்பவரின் மகன் தங்கராசு;
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம், கோணச முத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் ஜெய்சங்கர்; வேலூர் மாவட்டம், 

காட்பாடி வட்டம், முடினாம்பட்டு காலனியைச் சேர்ந்த துரை என்பவரின் மனைவி மாரிமுத்து; காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக் குன்றம் வட்டம், 

ஆரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாலு என்பவரின் மகன் குமரவேல் மற்றும் உத்திரமேரூர் வட்டம், பெருநகர் கிராமத்தைச் சேர்ந்த கரியன் என்பவரின் மகன் அண்ணாமலை இவருடைய மனைவி சோழியம்மாள் ஆகியோர் 

மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த மேற்கண்ட 12 பேரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாப த்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், 

அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தர விட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings