இறைச்சிக் கடை மூடப்பட்டதால் உயர்நீதிமன்றம் குட்டு !

உணவும் உணவு முறைகளும் ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் வாழ்வாதார உரிமை என, இறைச்சிக் கடை மூடல் குறித்த உ.பி அரசின் உத்தரவுகளுக்குத் தெளிவுரை வழங்கி யுள்ளது, அலகாபாத் உயர் நீதிமன்றம்.
இறைச்சிக் கடை மூடப்பட்டதால் உயர்நீதிமன்றம் குட்டு !
இறைச்சிக் கடைகள் மூடல், தடை என உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து வரும் உத்தரவுகளால், பல சர்ச்சைக் கேள்விகள் எழுந்தன. 

இதற்குத் தெளிவுரை யாக அலகாபாத் நீதிமன்றம், ‘உணவும் உணவு முறையும் தனிப்பட்ட நபரின் வாழ்வாதார உரிமை’ என அதிரடியாக உத்தர விட்டுள்ளது.

இந்திய அரசிய லமைப்புச் சட்டம் விதி 21-ன் படி, 'உணவும் உணவுமுறைகளும் வாழ்க்கை உரிமை களாகும்' எனத் தெரிவித்த உயர் நீதிமன்றம், தனிப்பட்ட ஒரு மனிதனை இந்த உணவு சாப்பிடக் கூடாது எனத் தடை விதிக்க எந்த அரசுக்கும் உரிமை யில்லை. 

 தனி நபரின் உரிமை களைப் பாதிக்காத வாறு அரசின் சட்ட நலத் திட்டங்கள் இருக்க வேண்டும் என அறிவுறு த்தியுள்ளது.
உயர் நீதிமன்ற த்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, பதிலளித் துள்ள உத்தரப் பிரதேச அரசு, இறைச்சிக் கடை தடை உத்தரவு, உணவு முறைக் கான தடை யல்ல. 

சட்ட விரோதமாக நடத்தப்படும் இறைச்சிக் கடைகளுக்கு எதிரான நடவடிக்கை மட்டுமே எனத் தெரிவித்துள்ளது.
Tags:
Privacy and cookie settings