மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்யலாமா?

# மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் " நம்பக மானது" அதில் திரிசமன் செய்யவே முடியாது என்கிறார்கள், ஆனால் மிக எளிதாக செய்யலாம் என நினைக் கிறேன்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்யலாமா?
கீழ்கண்ட முறை எனது அவதானிப்பே, பிழை இருக்கலாம். ஒரு சுவிட்ச் போர்டில் அருகே மின் விளக்கு, மின் விசிறி என இரு சுவிட்சுகள் உள்ளது, 

ஒன்றினை இயக்கினால் விளக்கு எரியும், இன்னொன்று மின் விசிறி என இருக்கு நாமும் அப்படியே இயக்கி பழகி விடுகிறோம். 

ஆனால் அதன் உள் இருக்கும் இணைப்புகளை மாற்றினாலே , மின் விளக்கு சுவிட்சை போட்டால் மின் விசிறி இயங்கும் படி செய்யலாமே?

காண்க படம்.

இதே போல மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திலும், வாக்களர்கள் பெயர்கள் அகரவரிசையில் இருக்கும் எனவே ஒருவரின் பித்தானின் இணைப் பினை, 

மின்னணு வாக்கு எந்திரத்தின் ஐசி உடன் இணைக்கும் சர்க்கி யுட்டில் மட்டும் சால்டரிங் செய்து மாற்றி விடலாமே. 

நமது மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் ஐ.சி தான் "கை வைக்க முடியாத "read only" வகை, எனவே அதற்குள் செல்லும் இணைப்பில் எந்த பட்டனை மாற்றி இணைத் தாலும் கண்டுக் கொள்ளாது அவ்வ்!

"schematic diagram for EVM"

(சரியான இணைப்புடன் வாக்குப்பதிவு இயந்திரம்.)

(குறுக்காக இணைக்கப் பட்ட நிலையில் வாக்குப்பதிவு எந்திரம்)

தேர்தல் ஆணையம் வடிவமைத் துள்ள EVM இல் ஐசி மற்றும் நினைவகம் மட்டுமே ஒரு முறை புரோகிராம் செய்த பின் "மாற்றம் செய்ய இயலாத வகையில் , "READ ONLY" ஆக உள்ளது, 
எனவே ஐ.சிக்கு உள்ளிடு செலுத்தும் ,பித்தான் களினை இரண்டாவது படத்தில் போல மாற்றி இணைத்து விடலாம், ஆனால் அகர வரிசைப்படி வேட்பாளர்கள் பெயர் ஒன்றிலிருந்து துவங்கும், 

இதனால் முதல் பித்தானுக்கு நேராக உள்ள வேட்பாளரு க்கு அழுத்தினால், அதன் எண்ணிக்கை "ஐசி" இல் இரண்டாவது "நினைவக ஒதுக்கீட்டில்" சேமிப்பாகும். 

இதனை வாக்களிப் பவர் உணர இயலாது, அவர் அழுத்திய பித்தானுக்கு நேராக "விளக்கு எரிவதை கண்டு வாக்குப் பதிவானது என "திருப்திப் பட்டுக் கொள்ள" மட்டுமே முடியும்.

வாக்கு பதிவு எந்திரத்தில் ,வேட்பாளர் பெயருடன் இணைந்த பித்தான்கள், அதற்கு அருகில் விளக்கு என இருக்கும் அமைப்பு "பேலட் யூனிட்" ஆகும் , 

அதில் எந்த வரிசை பித்தானை அழுத்தினோம் என காட்டாது, பித்தானை அழுத்தியதும் விளக்கு மட்டுமே எரியும்.

(பேலட் யூனிட் -வரிசை எண் காட்டாது)

கண்ட்ரோல் யூனிட் என ஒன்று தேர்தல் அலுவலரின் மேசையில் இருக்கும் அதில் தான் வரிசை எண் ,மற்றும் அதற்கு பதிவான வாக்குகளை காட்டும், 

எனவே பேலட் யூனிட்டில், இரண்டு பித்தான் களை மாற்றி இணைப்புக் கொடுத்தாலும், அதற்கான விளக்கு எரியும் என்பதால், அச்சின்னத்திற்கு வாக்கு அளித்ததாக தெரியும், 
ஆனால் வாக்குகள் பதிவாவது வரிசை எண்ப்படி என்பதால், அதனை சரிப்பார்க்க வாக்களரால் முடியாது.

(கண்ட்ரோல் யூனிட்- வரிசை எண் , பதிவான வாக்கினைக் காட்டும்)
 
தேர்தல் அலுவலரும் ஏதோ ஒரு வரிசை எண்ணில் வாக்குப்பதிவானதை மட்டுமே உறுதி செய்துக் கொள்வார், வரிசைப்படி இந்த சின்னம் இருக்கு அதில் தான் பதிவானது என்பது அவருக்கு மட்டுமே தெரியும், 

ஆனால் பித்தான்கள் மாற்றி இணைக்கப் பட்டு ஒன்றை அழுத்தி அது மற்றொன்றில் வாக்குப் பதிவு செய்து ள்ளதை அவரும் அறிய இயலாது.

எனவே ஒரு தொகுதியில் "A" கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது எனில் அங்கு வலுவிழந்த இன்னொரு கட்சி "B" க்கு வாக்கு விழுமாறு செய்ய இரண்டையும் மாற்றி இணைத் தாலே போதும், 

B இன் வாக்குகள் "A" க்கு போகும் , "A" வாக்குகள் B க்கு போகும் , ஏதேனும் ஒரு கட்சிக்கு வாக்குகளே விழாமல் போனால் தான் சந்தேகம் வரும் 

ஆனால் ஒரு குறைந்த பட்ச வாக்குகள் பதிவாகும் போது சந்தேகமே உருவாகாது. இப்படி மாற்றி இணைக்க , பேலட் யூனிட்டை மட்டுமே திறந்தால் போதும் ,ஐ.சி யூனிட்டில் கையே வைக்க வேண்டாம், 
இதனை சாதாரண மாக " செல் போன்" பழுதுப் பார்ப்பவர் களை வைத்து சால்டரிங் அயர்ன் மூலம் , பித்தான்களின் சர்க்கியூட் போர்டில் எளிதில் செய்ய இயலும்

வாக்கு எண்ணும் போதும் கண்ட்ரோலில் யூனிட்டில் பதிவான வாக்குகள் வரிசைப் படியே பிரித்து எண்ணப் படும், அப்பொழுது மாற்றிப் பதிவானதை யும் கண்டுப் பிடிக்க இயலாது.

இது எனது சந்தேகம் மட்டுமே, இப்படி செய்ய ஒரு சாத்தியக் கூறுள்ளதாக கருதுகிறேன், 

இதற்கு "தேர்தல் அலுவலர் களின்" ஒத்துழைப்பும் தேவை, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங் களை பாதுகாப்பாக தான் காவலுடன் வைத்துள் ளார்கள், 

ஆனால் அவர்களும் அரசு ஊழியர்களே எனும் நிலையில் ஆளும் அதிகாரம் படைத் தவர்கள் நினைத்தால் 'தில்லு முல்லு" செய்யலாம் என்பதை மறுக்க இயலாது!

EVM= Electronically Void Machine!

பின் குறிப்பு:

# தகவல் மற்றும் படங்கள் உதவி, - கூகிள், தேர்தல் ஆணைய இணைய தளம், தி இந்து மற்றும் விக்கி , நன்றி!
Tags:
Privacy and cookie settings