ரேஷன் கார்டு குறுந்தகவலை அழிக்க வேண்டாம்... மதுரை ஆட்சியர் !

மதுரை மாவட்ட மக்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கல் முறை குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் எடுத்து ரைத்தார்.
ரேஷன் கார்டு குறுந்தகவலை அழிக்க வேண்டாம்... மதுரை ஆட்சியர் !

அது பற்றி பேசிய அவர், '2வது கட்டமாக மதுரை வடக்கு தாலுகாவிற்கு 27,248, மத்திக்கு 16,821, மேற்கிற்கு 24,969, கிழக்கிற்கு 19,438, மேலூருக்கு 14,448, வாடிப்பட்டிக்கு 15,531, 


உசிலம்பட்டிக்கு 13,116, திருமங்கல த்திற்கு 17,740, பேரையூருக்கு 11,538 என ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 849 ஸ்மார்ட் கார்டுகள் வந்துள்ளன. 

அலை பேசியில் ஓ.டி.பி., எண் வந்த நுகர்வோர் ரேஷன்கார்டு, ஆதார் அட்டை, குறுந்தகவல் வந்த அலை பேசியுடன் சென்று ஒப்புதல் பட்டியலில் கையெழுத் திட்டு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை பெறலாம்' என்றார்.

மேலும், 'குறுந்தகவல் வந்த ஏழு நாட்களு க்குள் ஸ்மார்ட் கார்டு பெற்று விட வேண்டும். இதற்காக தனிப்பட்ட கட்டணம் ஏதும் செலுத்தத் தேவை யில்லை. 


ஸ்மார்ட் ரேஷன் கார்டு தொடர்பாக அலைபேசிக்கு வரும் குறுந்தகவலை ரேஷன் கார்டு தாரர்கள் அழிக்க வேண்டாம்' என கூறி யுள்ளார்.
Tags:
Privacy and cookie settings