ஆஞ்சியோ பிளாஸ்டி என்றால் என்ன?

இதயத்திற்கு, ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்களில், அடைப்பு ஏற்படுவதால், ரத்த ஓட்டம் தடைபடும். இது, மாரடைப்புக்கு வழி வகுத்து விடுகிறது. 
ஆஞ்சியோ பிளாஸ்டி என்றால் என்ன?
ரத்த நாள அடைப்பை, அறுவைச் சிகிச்சை இன்றி சரி செய்ய, 'ஆஞ்சியோ பிளாஸ்டி' சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடையின் நரம்பு வழியாக, கதீட்டர் கம்பி வழியாக, 'ஸ்டென்ட்' என்ற விரியக் கூடிய உலோக வலை அனுப்பப் படும்.

அடைப்பு ஏற்பட்ட பகுதியில் வைத்து, 'ஸ்டென்ட்' விரி வடைய செய்யப்படும். இதனால், அடைப்பு நீங்கி, 👉ரத்த ஓட்டம் சீரடையும்.

'ஆஞ்சியோஜெட் திராம்பெக்டமி' சிகிச்சை

👉இதயத்திற்கு செல்லும் ரத்த நாள அடைப்பை நீக்க, 'ஸ்டென்ட்' பொருத்தும் வழி முறையை, சிறு மாற்றத் துடன் செய்வது, 'ஆஞ்சியோஜெட் திரம்பெக்டமி' எனப்படுகிறது. 

இதற்காக, தயாரிக்கப் பட்ட வளை கம்பியின் முனையில், இரண்டு பம்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இதை, நோயாளி யின் தொடை ரத்தக் குழாய் வழியாக, கணினி உதவியுடன், 👉இதயத்தின் அடைபட்ட ரத்தக் குழாய்க்கு அனுப்புவர்.

அங்கு சென்றதும், இதய ரத்தக் குழாயை அடைத்தி ருக்கிற ரத்தக் கட்டியின் மீது, 'சலைன்' எனும் திரவத்தை பல மடங்கு அழுத்தத்தில், ஒரு பம்ப் பீய்ச்சியடி க்கும். அப்போது அந்த இடத்தில், வெற்றிடம் உருவாகும்.

இதன் பலனால், ஒரு வெடிகுண்டு வெடித்து சிதறுவது போல, அந்த 💪ரத்தக் கட்டி சிதறி தூளாகும். இதைத் தொடர்ந்து, வளை கம்பி முனையில் உள்ள அடுத்த பம்ப் இத்துகள்களை ஒன்று விடாமல் உறிஞ்சிக் கொள்ளும். 
இதனால், ரத்தக் குழாயின் அடைப்பு, 100 சதவீதம் துப்புரவாகவும் துல்லியமாகவும் நீக்கப்படுகிறது. 

மாரடைப்பு எனும் அபாயம் முற்றிலும் விலகும். இந்த சிகிச்சைக்கு பின், 👉இதய ரத்தக் குழாயில், ஸ்டென்ட் பொருத்தப் படுவதில்லை. 

ஸ்டென்ட் சிகிச்சைக்குப் பின், மாரடைப்பு நோயாளிகள் வழக்கமாக சாப்பிடும் மாத்திரைகளைக் குறைத்துக் கொள்ளலாம். சிகிச்சை முடிந்த ஒரு வாரத்தில் வழக்கமான பணிகளை செய்யலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக இதயத்தில், எவ்வித 👉செயற்கைத் துணைப் பொருளும் பொருத்தப் படாமல் இயற்கை வழியில் இதயம் இயங்க இது வழி வகுக்கிறது; 

கடுமை யான மாரடைப்பு வந்தவரு க்கும் இந்த சிகிச்சை பலன் தரும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது. இது போன்ற 💨சிகிச்சை முதல்வர் ஜெயலலிதாவிற்கும் அளிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
Tags: