உத்தரப்பிரதேச அரசியல் விபரீதம் - சந்நியாசி தலையில் கிரீடம் | Uttar political tragedy - The crown of the head nun !

அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டுவதை விட ஆபத்தான ஒரு விஷப் பரீட்சையில் இறங்கி யிருக்கிறது பி.ஜே.பி. உத்தரப் பிரதேச சட்ட மன்றத்தின் 403 எம்.எல்.ஏ-க் களில் பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்கள் 312 பேர். வரலாறு காணாத வெற்றி! 


ஆனால், இந்த 312 பேரில் யாருமே முதல்வராகவோ, துணை முதல்வர் களாகவோ பதவி வகிக்கத் தகுதி யற்றவர்கள் என பி.ஜே.பி தலைமை நினைக்கிறது. 

இந்தத் தேர்தலில் போட்டியிடவே செய்யாத எம்.பி கேசவ் மௌர் யாவையும், லக்னோ மேயர் தினேஷ் சர்மாவையும் துணை முதல்வர்கள் ஆக்கிய பி.ஜே.பி, அங்கு முதல்வராக நியமித் திருப்பது 

யோகி ஆதித்யநாத் என்பவரை! ‘மதச்சார் பின்மை மீது விழுந்த மிக மோசமான அடி’ என இதை வர்ணிக் கின்றன எதிர்க் கட்சிகள்.

‘வளர்ச்சி’ என்ற முகத்தைக் காட்டி பிரதமர் நரேந்திர மோடி நம்மை முன்னால் இழுக்க, மதவாதம் பேசி நம் காலைப் பின்னால் இழுக்கும் பல சர்ச்சை ஆசாமிகள் பி.ஜே.பி-யில் நீக்கமற நிறைந்திரு க்கிறார்கள். இவர்கள் எல்லோரு க்கும் தலைமை ஏற்கும் தகுதி வாய்ந்தவர், 

ஆதித்யநாத். 44 வயதாகும் இந்த சந்நியாசி, தொடர்ச் சியாக ஐந்து முறை கோரக்பூரில் ஜெயித்து எம்.பி-யாக இருந்தவர். கோரக்பூர் மடத்தின் தலைவர், யோகி ஆதித்யநாத். ஆர்.எஸ்.எஸ் தலைவ ர்களுக்கு செல்லப் பிள்ளை. 

ஆனால், பி.ஜே.பி- யோடு இவருக்கு எப்போதும் இணக்கமான உறவு இருந்த தில்லை. நாடு முழுக்க பி.ஜே.பி தேசியத் தலைவர்கள் வைப்பது சட்டம் என்றால், கோரக்பூர் தொகுதியில் யோகி வைத்தது தான் சட்டம். 

கட்சிப் பொறுப்பில் யார் இருக்க வேண்டும், சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் யார் போட்டியிட வேண்டும் என எல்லாவற்றையும் அவரே தீர்மானிப்பார். 

தலைமை மதிக்காத போது, கட்சியி லிருந்தே விலகுவதாக மிரட்டுவார். ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் இரண்டுமுறை தலையிட்டு சமாதானம் செய்து வைத்திரு க்கிறார்கள்.

தலைமை என்ன சொன்னாலும், தன் மனதுக்குப் படுவதையே செய்வார். 2010-ம் ஆண்டில், ‘நாடாளு மன்றம் மற்றும் சட்ட மன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு’ தரும் மசோதா நாடாளு மன்றத்தில் விவாதத்துக்கு வந்தது. 

இதை ஆதரிக்குமாறு எம்.பி-க் களுக்கு பிஜே.பி கொறடா உத்தர விட்டார். ஆனால், ‘‘எனக்கு இது பிடிக்க வில்லை. நான் எதிர்ப்பேன்’’ என்று சொன்னார் யோகி.

பி.ஜே.பி-யில் இருந்தாலும், ‘ஹிந்து யுவ வாஹினி’ என்ற அமைப்பைத் தனியாக வைத்தி ருக்கிறார் யோகி. பசுக்களைப் பாதுகாப்பது, ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் இந்து பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் காதலித்துத் திருமணம் செய்து கொள்வதைத் தடுப்பது... 

எனத் தடிகளை ஏந்தியபடி வீதிகளில் வலம் வந்து காரியம் முடிக்கும் இளைஞர்கள் நிறைய பேர் இந்தப் படையில் இருக்கி றார்கள். 

இந்த அமைப்பின் சார்பில் கடந்த 2005-ம் ஆண்டு, பிற மதங்களில் இருந்த ஐயாயிரம் பேரை இந்துக்களாக மதம் மாற்றி விட்டு, 

‘‘உத்தரப் பிரதேசத்தை யும் இந்தியா வையும் முழுமையான இந்து ராஜ்ஜியமாக மாற்றும் வரை நான் ஓய மாட்டேன்’’ என சபதம் எடுத்தார். 

இவரின் கைவண்ண த்தில் கோரக்பூரில் மியா பஜார் என்ற மார்க்கெட் ‘மாயா பஜார்’ ஆனது. 

உருது பஜார், ‘இந்தி பஜார்’ ஆனது. அலி நகர் பெயர் மாறி ‘ஆர்யா நகர்’ ஆனது. எதிர் காலத்தில் உத்தரப் பிரதேசத்தின் பல ஊர்கள் இப்படிப் பெயர் மாறக் கூடும்.

பிரதமரான திலிருந்து மோடி இரண்டு விஷயங் களைச் சாமர்த்திய மாகச் செய்து வருகிறார். பி.ஜே.பி ஜெயிக்கும் மாநிலங்களில், சொந்த செல்வாக்கு இல்லாத புதுமுகங் களையே முதல்வர் ஆக்குகிறார். 

தேர்தல் நேரத்தில் மட்டும் இந்துத்வா தலையெடுக்கும். தேர்தல் முடிந்ததும் ‘வளர்ச்சி’ என்ற முகமூடியை அணிந்து கொள்வார்கள். 

ஆனால், உ.பி-யில் தனிப்பட்ட செல்வாக்குக் கொண்ட, தலைமைக்குக் கட்டுப்படாத ஒருவரை ஏன் முதல்வராக்க வேண்டும்?

80 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்ட உ.பி-யில் 71 எம்.பி-க்களைப் பெற்றதே மோடி பிரதமரானதற்கு முக்கியக் காரணம். மதவாத பிரசாரமே இந்த வெற்றிக்கு உதவியது. 

இப்போதும் மோடி என்ற மந்திரத்தைத் தாண்டி, யோகி போன்றவர்களின் பிரசாரமே வெற்றிக்கு உதவியதாக மோடியும் அமித் ஷாவும் நினைக் கின்றனர். 

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் தான் இருக்கின்றன. 

மீண்டும் மோடி பிரதமராக, உ.பி முக்கியம். உ.பி-யில் வெற்றி கிடைக்க யோகி ஆதித்யநாத் போன்றவர்கள் தேவை. இவரால் தான் அடுத்த தேர்தல் வரை உ.பி- யை கொதி நிலையில் வைத்திருக்க முடியும்.

அதனால், பல அதிரடி நாடகங்களை உத்தரப் பிரதேசத்தில் பார்க்கலாம்.
Tags:
Privacy and cookie settings