அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், அதிக டேட்டா.. ஏர்டெல் !

ஜியோவை எதிர் கொள்ள பல்வேறு போட்டி நிறுவனங்களும் புதிய சலுகைகளை அறிவித்து வரும் நிலையில் ஏர்டெலும் தன் பங்கிற்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.

அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் : ஏர்டெல்
ஜியோ கட்டண சலுகைகள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் துவங்குகிறது. ஜியோ கட்டண திட்டங்களின் விலை பட்டியல் வெளியானதை தொடர்ந்து போட்டி நிறுவனங்கள் பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன. 

ஐடியா, வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், அதிக டேட்டா உள்ளிட்டவற்றை வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து ஏர்டெல் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.

அதன்படி ஏர்டெல் இரண்டு புதிய திட்டங்களை வாடிக்கை யாளர்களுக்கு அறிவித்துள்ளது. 

ரூ.345 (சில வட்டாரங்களில் மட்டும் ரூ.349) செலுத்தி ரீசார்ஜ் செய்யும் போது 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லமிட்டெட் வாய்ஸ் கால் அனைத்து நெட்வொர்க் களுக்கும் வழங்கப் படுகிறது. 

இதன் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். இந்த திட்டம் ஒரு வருடத்திற்கு செல்லு படியாகும், எனினும் ஒவ்வொரு மாதமும் இதே தொகை செலுத்தி ரீசார்ஜ் செய்ய வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதே போல் ரூ.145 திட்டத்தில் (சில வட்டாரங்களில் மட்டும் ரூ.149) ஒரு மாத காலத்திற்கு 2ஜிபி டேட்டா, ஏர்டெல் டூ ஏர்டெல் எண்களுக்கு மட்டும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப் படுகிறது. 

இந்த திட்டங்கள் 4ஜி ஸ்மார்ட்போன் வைத்திருப்போருக்கு மட்டுமே வழங்கப் படுகிறது.

இந்த சலுகை தற்சமயம் பிரீபெயிட் வாடிக்கை யாளர்களுக்கு மட்டுமே வழங்கப் படுகிறது. இதே போன்ற சலுகை ஏர்டெல் போஸ்ட்பெயிட் வாடிக்கையா ளர்களுக்கு அறிவிக்கப் படவில்லை.
Tags:
Privacy and cookie settings