கேரளாவில் பார்க்க வேண்டிய இடங்கள் !

கடவுளின் சொந்த நாடு என அழைக்கப் படும் கேரளாவின் மீது அண்டை மாநிலத்தி னரான நமக்கும் ஈர்ப்பு உள்ளது. அதிக செலவின்றி இந்த கடவுளின் நாட்டை சுற்றிப் பார்க்க விரும்பு பவர்களுக்கு இந்த கட்டுரை துணைபுரியும்.

கேரளாவில் பார்க்க வேண்டிய  இடங்கள்


இதில் காட்டப் பட்டுள்ள இடங்கள் இயற்கையின் அருள் நிறைந்த வனப்புடனும், செழுமை யுடனும் திகழும் இடங்களாகும். வாருங்கள் ஒரு சுற்று சுற்றலாம்…

நீலிமலை சிகரம்:

வட கேரளத்தின் தென்கிழக்குப் பகுதியில், கல்பேட்டா விற்கு அருகில் அமைந்தி ருக்கிறது நீலிமலை.

மலைச் சிகரங்களை அடைய பல்வேறு கிளை வழிப் பாதைகள் அமைந்து ள்ளதால் மலையேற்றம் செல்பவர் களுக்கு ஆர்வத்தையும்,

உற்சாக த்தையும் கொடுக்கும். சிகரங்களில் நின்று மீன்முட்டி அருவி களையும், பள்ளத் தாக்கு களையும் தரிசிப்பது என்பது சிலிர்ப் பூட்டும் அனுப வமாக இருக்கும்.

மீன்முட்டி அருவி:

கேரளாவின் இரண்டாவது மிகப்பெரிய அருவியாக திகழும் மீன்முட்டி அருவியில் மீன்களுக்கு தடை விதிக்கப்படுள்ளது. எப்படி என கேட்கிறீர்களா? இந்த அருவியின் நீரோட்டத்தில் மீன்களால் இயற்கையாகவே நீந்த முடியாது. 

நீலிமலை சிகரம்

நீரின் வேகத் தாலும், திசைகளற்ற நீரோட்டத் தாலும் மீன்களால் இந்த  அருவியின் நீரோட்டத் தில் நீந்த முடியாது. எனவே இதற்கு மீன்முட்டி அருவி என பெயர் வைத் துள்ளனர்.

கொலுக்கு மலை:

தேயிலை தோட்டங்கள் நிறைந்தது கொலுக்கு மலை. எங்கெங்கு காணினும் பச்சம் பசேலென உங்கள் கண் களுக்கும், மனதிற்கும் உற்சாக விருந்த ளிக்கும். இடுக்கி, 

மீன்முட்டி அருவி


மூனாறு தளங்களைப் போல இந்த கொலுக்கு மலையில் அதிக கூட்டம் இருக்காது. சாலைகளில் வாகனத்தை நிறுத்தி, நின்று நிதானமாக இயற்கை அன்னையின் கொடையை படிப்படியாக ரசித்துச் செல்லலாம்.

செம்பரா சிகரம்:

கல்பெட்டா நகரத்திலேயே மிக உயரமான சிகரமாக வீற்றிருக்கிறது செம்பரா சிகரம். கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது இச்சிகரம். 

செம்பரா சிகரம்

மலையேற்ற சாகசக் காரர்களுக்கு இந்த சிகரம் மிக விருப்பமான இடமாக இருக்கிறது. இந்த சிகரத்தின் உச்சியில் எண்ணற்ற ட்ரெக்கிங் முகாம்களை நீங்கள் பார்க்கலாம்.

ஃபாண்டம் ராக்:

வயநாட்டின் பரப்பில் அமைந்துள்ள இந்த தளத்தை தவறாமல் பார்த்து ரசித்திட வேண்டும். இயற்கையாகவே மனித மண்டையோடு நம்மை உற்றுப் பார்ப்பது போல அமைந்தி ருக்கிறது 

ஃபாண்டம் ராக்


இந்த பாறையின் அமைப்பு. உள்ளூர் மக்கள் இதனை சிங்கேரி மலா அல்லது தலைப்பாறை என்று அழைக்கின்றனர்.

ராமக்கால்மேடு:

இடுக்கி மாவட்டத்தில் அமைந் திருக்கும் இந்த மலையி லிருந்து ஒரு புறம் கேரள பூமியின் வனப்பையும், 

ராமக்கால்மேடு

இன்னொரு புறம் தமிழ் நாட்டின் எழிலையும் ஒருசேர ரசிக்க முடியும் என்பதை இதன் சிறப்பம் சமாக சொல்லலாம்.

பீர்மேடு:

தேவதாரு மரங்கள் அடர்ந்த காடுகளைக் கொண்டுள்ளது பீர்மேடு மலை. அழகிய அருவிகள் புடைசூழ்ந்த இந்த மலை, காதலர்களுக்கு மிகவும் பிடித்த இடமாகும். 

பீர்மேடு

தேயிலை, ஏலம், ரப்பர், காப்பி தோட்டங்கள் பிரமாண்டமாக பரந்து விரிந்தி ருக்கும். பெரியார் புலிகள் பாதுகாப்பு காடுகளும் இங்கு அமைந் துள்ளன.

வாகமண்:

கோட்டயத் திலிருந்து 65கி.மீ. தூரத்தில் இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்ட ங்களின் எல்லையில் அமைந்தி ருக்கிறது வாகமண். 

வாகமண்


ஆசியாவின் ஸ்காட்லாந்து என நேஷனல் ஜாக்ரஃபியே குறிப்பி டுகிறது என்றால் அதன் இயற்கை அழகு எப்படி இருக்கும் என கற்பனை செய்து கொள்ளுங்கள்.

ஆலப்புழா:

கிழக்கு வெனிஸ் என அழைக்கப்படும் ஆலப்புழா கேரளா வரலாற்றில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. படகுப்போட்டிகள், படகு இல்லங்க ளுக்கு பேர் போன இந்த நகரத்தில், 

ஆலப்புழா

கடல் உற்பத்திப் பொருட்கள், தேங்காய்நார் தொழிற் சாலைகள் அமைந் துள்ளன. இயற்கை வாணிபக் கழகமாக வீற்றிருக்கிறது ஆலப்புழா.
Tags: