பாக்கெட் பால் விஷம் என்று தெரியுமா? உங்களுக்கு !

வெளுத்ததெல்லாம் பால் அல்ல.. கள்ளம் கபடம் அறியாத மனிதர்கள் யாரையும் சுலபமாக நம்பி ஏமாந்து விடுவார்கள். அவர்களுக்கு சொல்லப்பட்ட பழமொழி தான் இது. 
பாக்கெட் பால் விஷம் என்று தெரியுமா? உங்களுக்கு !
இப்போது பால் விஷயம் இதற்கு ஒருபடி மேலே போய் விட்டது. நம்பிக்கை தளர்ந்து போய் விட்டது. 

நாம் அருந்தும் பால் வெள்ளையாக இருந்தாலும் கூட நிஜமான பால் எவ்வளவு? கலப்படம் எவ்வளவு? என்ற கேள்வி பிறந்து விட்டது.

அப்போதைக்கு அப்போது கறந்து சைக்கிள் அல்லது டூ வீலரில் கொண்டு வந்து விநியோகிக்கப்படும் பாலையும் கூட நம்ப முடியவில்லை. சில விதமான பாக்கெட் பாலையும் நம்ப முடியவில்லை.

முன்பெல்லாம் லேக்டோ மீட்டர் போட்டுப் பாலில் எவ்வளவு தண்ணீர் என்று சோதிப்பார்கள். 
தண்ணீர்ப் பாலில் யூரியா, ஸ்டார்ச், மைதா மாவு, குளுக்கோஸ் கலந்து சோதித்தால் தண்ணீர் கலந்ததைக் கண்டுபிடிக்க முடியாது. 

சாதாரணமாக சைக்கிள், டூவீலரில் கறந்த பால் என்று விற்பவர்கள் மேற்கொள்ளும் கலப்படம் இது. பசும்பாலை மருந்து என்று ஆயுர்வேதம் கூறுகிறது. 

பாலுக்கு வைரஸ் எதிர்ப்பு சக்தி உண்டு என்றும் கூறப்படுகிறது. சிறார்களுக்கு நல்ல ஊட்ட உணவு. ஆனால் மருந்தே விஷமானால் மனித உடல் படும்பாடு என்ன?
பாக்கெட் பால் விஷம் என்று தெரியுமா? உங்களுக்கு !
யூரியா போன்ற ரசாயனம் சேர்த்த பாலை அருந்தினால் வயிற்றுப் போக்கு, ரத்த சோகை ஏற்படும்.

தொடர்ந்து கலப்படப் பாலைப் பயன்படுத்தினால் சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் உண்டு.

ஆகவே, வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணிக் கண்ட கண்ட பாக்கெட் பாலை வாங்க வேண்டாம்.

பாலில் உள்ள கலப்படத்தை நாமே வீடுகளில் சிறிய சோதனைகள் மூலம் கண்டறியலாம். பாக்கெட் பாலில் என்ன இருக்கு என்று தெரியுமா உங்களுக்கு...
பால் திக்காக இருக்க : .

ஸ்டார்ச்சு,

மைதா மாவு,

டிடர்ஜண்ட்,

யூரியா,

சர்க்கரை,

குளுகோஸ்,

பால் பவுடர் போன்றவை சேர்க்கப்படுகின்றது

பாலை அப்படி கெட்டியாகக் காட்டிக் கெடாமல் இருக்கக் கெட்ட வழியில் பாதுகாப்பு செய்யப்படுகிறது

அதற்கு

அமோனியா யூரியா,

சோடியம் ஹைட்ராக்ûஸடு,

கார்பன் ட்ரை ஆக்சைடு,

பொட்டாசியம் ஹைட்ராக்சைடு சேர்க்கப் படுகின்றது.

தண்ணீர் கலந்த பாலை கண்டறிய
பாக்கெட் பால் விஷம் என்று தெரியுமா? உங்களுக்கு !
ஒரு வழுவழுப்பான சாய்வான ஓட்டின்(டைல்ஸ்) மீது ஒரு துளி பாலை விடும் போது பால் மெதுவாக கீழ்நோக்கி ஓடும். 

அப்போது தான் ஓடிய பாதையில் தனது வெண்மை நிறத்தை கோடாக விட்டுச் சென்றால் அந்த பால் சுத்தமான தண்ணீர் கலக்காத பாலாகும். 

அவ்வாறில்லாமல் தனது பாதையில் வேகமாக ஓடி வெண்மை கோட்டை விட்டுச் செல்லாத பால் தண்ணீர் கலந்த கலப்படப் பாலாகும்.
மாவு கலந்த பாலை கண்டறிய

சிறிதளவுப் பாலில் சில துளிகள் டின்ச்சா; அயோடின் அல்லது அயோடினைச் சேர்க்கும் போது பாலின் நிறம் நீலநிறமாக மாறினால் அது ஸ்டார்ச் (மாவுப்பொருள்) சேர்க்கப்பட்ட கலப்படமான பாலாகும்.

யூரியா கலந்த பாலை கண்டறிய

1) ஒரு சோதனைக் குழாயில் ஒரு தேக்கரண்டி பாலில் அரை தேக்கரண்டி சோயாபீன் தூளைச் சேர்த்து நன்கு குலுக்கி 5 நிமிடங்கள் கழித்து 

அதில் சிவப்பு லிட்மஸ் தாளை அரை நிமிடம் வைக்கும் போது சிவப்பு லிட்மஸ் தாள் நீலநிறத்திற்கு மாறினால் அந்தப் பால் யூரியா சேர்க்கப்பட்ட கலப்படப்பாலாகும். 

(SNF – மதிப்பை அதிகரிக்கச் செய்ய பாலில் யூரியா கலப்படம் செய்யப்படுகிறது)

2) ஒரு சோதனைக் குழாயில் 5 மிலி பாலில் 5 மிலி Paradimethyl amino benzaldehyde (16 percent) ஐச் சேர்த்தால் மஞ்சள் நிறம் தோன்றினால் அந்தப்பால் யூரியா சேர்க்கப்பட்ட கலப்படப்பாலாகும்.

யூரியா, சோடா, டிடர்ஜென்ட் உள்ளிட்ட மனிதர்களுக்கு தீங்கிழைக்கும் பல ரசாயனப் பொருள்கள் பாலில் கலப்படம் செய்தால் அதை பருகும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுவர்.
இது போல் பாக்கெட் பால் தொடர்ந்து குடிப்பதால்

வயிற்றுப்போக்கு, 

பிரசர்,

சர்க்கரை நோய்,

ஹார்மோன் சீர்கேடு,

பாலியல் கோளாறுகள்,

சிறு வயதிலே பருவமடைதல்

ரத்த சோகை ஏற்படும்.

சிறுநீரகப் பாதிப்பு,  ஏற்படும் வாய்ப்பும் உண்டு. என்று மருத்துவ ஆராய்ச்சி சொல்கின்றது.
பாக்கெட் பால் விஷம் என்று தெரியுமா? உங்களுக்கு !
தண்ணீர் பால் தான் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின் றார்கள். ஆதாரம் கிளிக் செய்து பாருங்கள். பாக்கெட்பால் விஷம் என்று சன் டிவியில் கூறுகின்றார்கள் இந்த வீடியோ பாருங்கள்
எனவே  முடிந்த அளவு பாக்கெட் பாலை தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பகுதியில் பசும்பால் கிடைத்தால் வாங்கி உபயோகியுங்கள். அதில் தண்ணீர் தான் கலப்பார்கள்  கெமிக்கல் கலக்க மாட்டார்கள்.

மறந்து விடுவது மக்கள் இயல்பு

நினைவு படுத்துவது நம் கடமை

👉🏻சமூக மாற்றத்தை உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள்......
Tags: