அரிசியை மெசின்ல டவுன்லோடு பண்ணி சாப்பிடுவீங்களா? விவசாயி மகள் !

விவசாய கடன் களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து
அரிசியை மெசின்ல டவுன்லோடு பண்ணி சாப்பிடுவீங்களா? விவசாயி மகள் !
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக் கண்ணு தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் போராடி வருகின்றனர். 

18-வது நாளாகத் தொடரும் விவசாயிகள் போராட்டத்துக்கு நாடு முழுவதும், ஆதரவு பெருகுகிறது.

இந்த நிலையில் டெல்லியில் போராடும் திருச்சி விவசாயிகளில், ஒருவரான தாத்தையங்கார் பேட்டையை அடுத்த ஊருடையான் பட்டியைச் சேர்ந்த மகாதேவன் என்பவர் 

உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவர் மகளிடம் பேசினோம்...

விவசாயி மகள்

எங்களுக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் இருக்கு. வீட்டுல நாங்க மூணு பொண்ணுங்க. 
எங்க அப்பா தான் எங்களுக்கு எல்லாம். கல்யாணம் பண்ணி வேற ஊருக்கு போன நான் விவசாயத்தை விட்டுறக்கூடாதுனு அப்பா ஊருக்கே வந்துட்டோம்.. 

எங்க நிலத்தை நம்பி தான், நாங்க இருக்கிறோம். விவசாயம் பொய்த்துப் போச்சு, ஒரு ஏக்கர்ல நெல்லும், அடுத்து வெங்காயம், மிளகாய் பயிர் வைச்சி ருந்தோம். 

எல்லாம் தண்ணி யில்லாம காய்ஞ்சுப் போச்சு. கிணத்துலயும் சுத்தமாக தண்ணி யில்ல. இதுவரைக்கும் இப்படி ஒரு நெலமையை நான் பார்த்ததில்ல...

இந்த நெலத்துக் காக கடன் வாங்கியே அப்பா கடனாளி ஆகிட்டார். விவசாயம் பொய்ச்சதால கடன் கட்ட முடியல. இப்போ பேங்க் அதிகாரிங்க, கடன் கொடுத்தவங்க எல்லாம் வந்து மெரட்டுறாங்க. 

நெலத்துல வெளைஞ்சா தான் கடன கட்ட முடியும். கடன கட்ட நாங்க ரெடியா தான் இருக்கோம். ஆனா ஆத்துல ஆர்மபிச்சு கெணறு வரைக்கும் எல்லாம் வறண்டு போய் இருக்கே... 
எங்கனகூடி நாங்க வெவசாயம் பண்றது சொல்லுங்க. நாம தண்ணி குடிக்காம இருக்கலாம்... ஆனா நெலம் அப்படி இருந்து அரிசி தரணும்னு எதிர்பார்த்தா எப்படிங்க?

நாங்க வெளைவிச்சா தான் மக்க எல்லாரும் சாப்பிட முடியும்? கடன் கேக்குற அதிகாரிங்க எல்லாம் மனசாட்சியோட தான் எங்க வீடுகளுக்கு வர்றாங் களானு தெரியல. 

அவங்க கண்ணு முன்னாடி நெலம் வறண்டு கெடக்குது. ஆனா நாங்க காச பதுக்கி வைச்சுகிற மாதிரி மெரட்டுறாங்க. 

எங்களை மெரட்டினா நெலத்துல தண்ணி வந்திருமா? நாங்க வெளைவிச் சாதான இவங்க உக்காந்து சாப்பிட முடியும். நாங்க வெளைவிக் கலைனா அரிசியை டவுன்லோடு பண்ணியா சாப்பி டுவாங்க? 

விவசாயம் தான் முக்கியம். விவசாயம் தான் எங்களுக்கு எல்லாம். அதுவே பொய்த்துப் போச்சு. அதனால் தான் விவசாயக் கடன தள்ளுபடி செய்யனும்னு போராடுறோம்.
அப்பா, இதுக்கு முன்னாடி ஒருமுறை, இதே கோரிக்கையை வலியுறுத்தி டெல்லிக்கு போய் போராடினாரு. 

அப்போ போலீஸ் காரங்க அடிச்சதில், அப்பா கால்ல பயங்க அடி. நடக்க முடியாமல் சிரமப் பட்டார். மருத்துவ மனையில் காட்டி, குணப்படு த்தினோம். 

இப்போது, சொல்லாமல் டெல்லிக்கு போயி ட்டாங்க. அவரை காணலைனு ஊர்முழுக்க தேடி... கடைசியா டிவியைப் பாத்து தெரிஞ்சு கிட்டோம். அப்பாகிட்ட பேசினேன். 

ஆறு பாட்டில் குளூக்கோஸ் ஏத்தியி ருக்குமா. நான் விவசாயக் கடன் தள்ளுபடி பண்ற வரைக்கும் இந்த எடத்த உட்டு நகர மாட்டேன். செத்தாக்கூட கவலைப் படாதனு சொல்றாங்க அப்பா.
இத்தன பிரச்னை நடந்து கிட்டு இருக்கு... இந்த அரசு வேடிக்கைப் பார்த்துகிட்டு இருக்குது. இவங்க எல்லாம் சோறு இல்லாம வாடுறப்ப தான் எங்க அருமை தெரியும் என்றார் சோகமாக.
Tags:
Privacy and cookie settings