இறந்தவர்களுக்கு மேக்கப் போட்டு பண்டிகை !





இறந்தவர்களுக்கு மேக்கப் போட்டு பண்டிகை !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
இறந்தவர்களை தோண்டி யெடுத்து அந்த சடலத்துடன் தங்கள் அன்பை பரிமாறிக் கொள்ளும் விநோத பண்டிகை இந்தோனேஷியாவில் நடை பெறுகிறது.
இறந்தவர்களுக்கு மேக்கப் போட்டு பண்டிகை !
இந்தோனேஷி யாவின் சுலவேசி தீவுப்பகுதியில் வசித்து வரும் தோஜாரன்ஸ் இன மக்கள், உலகத்துக்கு மட்டுமல்ல, இந்தோனேஷிய நாட்டுக்கே பரீட்சியப் படாதவர்கள்.
இவர்களை பற்றிய முழு விவரம் அந்நாட்டு மக்களுக்கே முழுமையாக தெரியாது. இந்த மக்கள், தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தங்களது உறவினர்கள் யாரும் இறந்து விட்டால், 

அவர்களது உடலை தோண்டி எடுத்து, அதற்கு புதிய ஆடை உடுத்து, அழகு ஒப்பனைகள் செய்து தங்களது அன்பினை பகிர்ந்து கொள்கின்றனர்.
இறந்தவர்களுக்கு மேக்கப் போட்டு பண்டிகை !
அதாவது, ஒரு நபர் இறந்து 3 வருடங் களுக்கு பின்னர் இந்த பண்டிகை கொண்டாடப் படுகிறது. இந்த மக்களுக்கு இறப்பு என்ற ஒன்று கிடையாது. 
நாங்கள் அனைவரும் எப்போது ஒற்றுமை யுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம் என்பதற்காகவே இந்த பண்டிகை கொண்டாடப் படுகிறது.
இறந்தவர்களுக்கு மேக்கப் போட்டு பண்டிகை !
மேலும், இந்த பண்டிகை மிக முக்கியமான பண்டிகை என்பதால், இந்த மக்கள் தங்கள் உறவினர்களுக் குள்ளேயே திருமணம் செய்து கொள்கின்றனர். 

வேற்று இனத்தவர் களுடன் எவ்வித தொடர்பையும் வைத்துக் கொள்ள இவர்கள் விரும்புவ தில்லை.
Tags: