10 வயது சிறுவனின் உடல் பருமன் !

'மாயா பஜார்' படத்தில் வரும் 'கல்யாண சமையல் சாதம்...' பாடலை நினைத்துக் கொள்ளு ங்கள். 'ரங்கா ராவ்'க்குப் பதிலாக, இந்த 10 வயது சிறுவனை நினைத்துக் கொள்ளுங்கள்... 
10 வயது சிறுவனின் உடல் பருமன் !
ஆம் ரங்கா ராவை விட அதிக அளவு எடை கொண்ட குழந்தைதான் ஆர்யா பெர்மனா. இந்தச் சிறுவன் தான் உலகிலேயே அதிக அளவு உடல் எடையுடன் இருக்கும் சிறுவன். 

இந்தோனேசி யாவின், மேற்கு ஜாவா மாகாணத் திலுள்ள சாதாரண விவசாயக் குடும்பத்துப் பெற்றோரு க்குப் பிறந்த பத்து வயதே ஆகும் ஆர்யாவின் உடல் எடை 192 கிலோ கிராம்.

இச்சிறுவனால் சாதாரண மாக அணியும் எந்த உடை களையும் அணிய முடியாது. நாள் ஒன்றுக்கு, அரிசி சாதம், பீஃப் வகை உணவு களையும் சேர்த்து சுமார் ஐந்து வகையான உணவு வகைகளை சாப்பிடு கிறான். 

வயது வந்தோர் இரண்டு பேர் சாப்பிடக் கூடிய உணவை, ஒரே வேளையில் சாப்பிட்டு ஏப்பம் விடுகிறான். உடல் எடை அதிகரித் ததாலும், அதிகமாக உண்ப தாலும் அவனை பள்ளிக்கு அனுப்புவ தில்லை இவன் பெற்றோர். 

இவனை குளிப்பாட்டு வதற்கென தனியே வீட்டிற்கு முன்பு குளிக்கும் தொட்டியை கட்டி யுள்ளனர். 

மூச்சு விடுவதில் சிரமப்படும் ஆர்யா, எப்பொழுதும் தூங்கிக் கொண்டே இருப்பான். 

சாப்பிடுவது, தூங்குவது என்றே இவனுடைய நாட்கள் செல்லும். மற்றபடி அவன் விளையாடுவது அவனுடைய குளியல் தொட்டியில் தான். 
10 வயது சிறுவனின் உடல் பருமன் !
''என் மகனும் மற்றக் குழந்தைகள் போல ஓடி, ஆடி விளையாட வேண்டும். பள்ளிக்குச் சென்று நன்கு படிக்க வேண்டும் என்ற ஆசை எங்களு க்கும் இருக்கிறது. 

பிறக்கும் போது எல்லாக் குழந்தை களையும் போல 3.5 கிலோ கிராம் எடையுடன் நார்மல் டெலிவரியில் பிறந்தான். 

இரண்டு வருடம் ஆனதும், சற்றும் எதிர் பாராத வகையில் உடல் எடை கூடிக் கொண்டே போனது. உடனடியாக உள்ளூர் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றோம். 

மருத்துவர்கள் அவனை முழுவதுமாக பரிசோதித்துப் பார்த்த பிறகு, உடலில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று சொல்லி விட்டார்கள். வேறு ஏதாவது ஒரு பெரிய மருத்துவ மனையில் காட்டச் சொன்னார்கள்.

எங்களுடைய தகுதிக்கு ஏற்றவாறு கொஞ்சம் பெரிய மருத்துவ மனையில் காண்பித்தோம். 
அவர்களும் உடலில் எந்த பிரச்னையும் இல்லை என்று கூறி விட்டார்கள். எங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு அவனுக்கு தேவை யானதை செய்து கொண்டிரு க்கிறோம். 

ஏழை விவசாயி களான நாங்கள் சம்பாதிப்பதை எல்லாம் அவனுக்கு உணவாக கொடுத்துக் கொண்டிரு க்கிறோம். ஆர்யா எங்களுக்கு இரண்டாவது மகன். 

முதல் மகனை காட்டிலும் இவன் பல மடங்கு அதிக உடல் எடையுடன் இருக்கிறான். 

என்று கண்ணீருடன் கூறும் ஆர்யாவின் தாய் ருக்கயா, 'அவன் தினமும் சாப்பிடும் உணவை இப்போது குறைத்துக் கொடுத்துக் கொண்டிரு க்கிறோம். 

ஒரு மாதத்தில் 100 கிலோ எடை அளவுக்கு குறைத்து விட வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருக் கிறோம். 

இதற்காக சிகப்பு அரிசி உணவை மட்டுமே இப்போது தினமும் கொடுத்துக் கொண்டிருக் கிறோம்  என்கிறார்.

ஆர்யாவின் எடையை குறைக்கா விட்டால் அவன் விரைவில் இறக்க க்கூடிய வாய்ப்பிருப்ப தாக மருத்துவர்கள் எச்சரித் துள்ளனர். 

என்ன மருத்துவம் பார்ப்பது என்று மருத்துவர் களும், எங்கே அழைத்துச் செல்வது என்று பெற்றோரும் புரியாமல் திணறிக் கொண்டிருக் கிறார்கள். 
10 வயது சிறுவனின் உடல் பருமன் !
குழந்தையை இப்படி எல்லாம் வளர்க்க வேண்டுமென பல முன்னு தாரணங்களை வைத்துக் கொண்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை படுத்தி எடுத்துக் கொண்டிருக்க, 

சாதாரண குழந்தைகள் போல நம் குழந்தை இருக்காதா என ஏங்கிக் கொண்டிரு க்கிறார்கள் இந்த பெற்றோர்.
Tags: