நடிகர்களின் சம்பளம் பாருங்கள்... தவறு செய்யாதீர்கள் !

நம்ம தமிழ் நடிகர்கள் வாங்குகிற சம்பள பட்டியல் எல்லோருக்கும் தெரியும் . தெரியாதவங்க கீழே உள்ள பட்டியலை அப்புறம் பாருங்க.
நடிகர்களின் சம்பளம் பாருங்கள்... தவறு செய்யாதீர்கள் !
சிவகார்த்திகேயன் சம்பளம் 7கோடி. ரஜினி சம்பளம் 40 கோடியாம்.நம்ம நடிகர்கள் ஒரு படம் நடிக்க ஆவெரேஜா சம்பளம் ஓரு 10 கோடி வாங்கறாங்கன்னு வச்சுக்குவோம். 

அந்த 10 கோடியை சம்பாதிக்க, நமக்கு எவ்வளவு நாள் ஆகும்? ஒரு விவசாயியாக நீங்க இருந்தா, சுமாரா 760 வருஷம் ஆகுமாம். 

நாளுக்கு 300 ரூபாய் சம்பாதிக்கிற கூலி தொழிலாளி, 1000 ஆண்டுகள் உழைக்கணுமாம்.25 ஆயிரம் சம்பளக்காரர் அதுவும் அரசு ஊழியர், 333 வருஷம் ஆகும். 

30 ஆயிரம் வாங்குகிற பிரைவேட் ஊழியர் 250 வருஷங்கள் உழைக்கணும். 70 ஆயிரம் வாங்குகிற IT ஊழியர் ஒருவர் 125 வருடங்கள் வேலை செஞ்சா 10 கோடி சம்பாதிக்கலாமாம்.

மூணு படங்களில் 50 கோடி சம்பாதித்து, 10 கோடிக்கும் மேல் வருமான வரி ஏய்ப்பு செஞ்சு, 5000 ரூபாய்க்கு நோட்டு புத்தகம் வாங்கி சேவை செய்யும் இவர்களின் சம்பளம், 
அந்த 300 ரூபாய் சம்பளம் வாங்கும் கூலி தொழிலாளியின் படம் பார்க்க கொடுக்கு பந்தில் இருந்து ஆரம்பிக்கிது. சம்பளம் இல்லாமல், அவர்கள் பார்ட்டி செலவு, ட்ரெஸ் செலவு, இவ்வளவு இருக்கு.

இப்படி ஒரு பதிவு வலைதளத்தில் ஓடுது. உங்க பார்வைக்கு இதோ வச்சிட்டோம்ல, 10 கோடி எப்ப சம்பாதிப்போம்?

சினிமாவில் ஒரு ஸ்டாராகி விட வேண்டும் என்று பலர் கனவு காண்பதற்கு காரணம் இருக்கிறது. ஒரே படம் நடித்து மக்களுக்கு பிடித்து விட்டாலும் சரி, 

ஒன்றிரண்டு படங்கள் நடித்து பிடித்து போய் விட்டால் போதும், நம் தமிழன் அவர்களை நல்லா வாழ வைத்து விடுவான். ஏன், எங்களை ஆட்சி செய்யுங்கள் என்று ஓட்டும் போட்டு விடுவான்.

இந்த தமிழனின் இரக்க குணம், தூக்கி கொண்டாடும் குணத்தினால் தான், ஒரு பில்லக்கா பையன் கூட நாலு படத்துக்கு அப்புறம் 4 கோடி சம்பளம் வாங்கு கிறார்.
சினிமா நடிகர்களின் சம்பளம் கற்பனைக்கும் எட்டாத அளவு கோடிகளில் புரளுகிறார்கள். வருமான வரிக்காக சைக்கிள் வாங்கி தருவதும், கல்விக்கு செலவு செய்வதும் என்று வள்ளல்கள் போல ஒரு இமேஜ் வேற. 

என்னைக்கு தமிழன் விழித்தெழ போகிறான்? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இவர்களின் சம்பளம் பாருங்க.

ரஜினிகாந்த்- ரூ 40 கோடியில் இருந்து 60 கோடி.

கமல்ஹாசன்- ரூ 30 கோடி

அஜித்- ரூ 25 கோடி

விஜய்- ரூ 25 கோடி வரை

சூர்யா-ரூ 20 கோடி

விக்ரம்-ரூ 12 கோடி

தனுஷ்- ரூ 10 கோடி

சிவகார்த்திகேயன்- ரூ 5-யிலிருந்து 7 கோடி

கார்த்தி- ரூ 6- யிலிருந்து 8 கோடி, விஷால்- ரூ 5 கோடி, சிம்பு- ரூ 4 கோடி, ஆர்யாவும், ஜெயம் ரவியும் ரூ 3 கோடி, ஜீவா வும், சித்தார்த்தும் ரூ 2.5 கோடி, விஜய் சேதுபதி- ரூ 2 கோடி.
இந்த சம்பளம் விவரங்கள் எல்லாம் கோலிவுட்டில் பரவி இருக்கும் தகவல்கள். உங்க தலைவர்கள் சம்பளம் எவ்வளவு என்று பாருங்கள். 

இது தெரியாமல் நாள் ஒன்றுக்கு ரூ.250 சம்பளம் வாங்கும் ரூ. 25 கோடி சம்பளம் வாங்கும் உங்கள் தலைவர் களுக்கு உங்கள் செலவில் லிட்டர் லிட்டராக பால் வாங்கி அவர்களின் கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்கிறீர்கள் . 

இதனால் பாலும் வீணாகிறது உங்கள் பணமும் வீணாகிறது. ஆனால் அவர்கள் உங்களிடம் பணம் வசூல் செய்து கோடியில் புரளகிறார்கள் நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?

இவர்கள் வாங்கும் சம்பளத்தை தயாரிப்பாளர் நம்முடைய தலையில் கட்டுகிறார் . நமக்காக இவர்கள் சம்பளத்தை குறைத்து கொண்டால் என்ன? இவர்களுக்கு இவர்களின் சுயநலம். நாம் மட்டும் நன்றாக இருந்தால் போதும்.

படத்தை பார்க்கும் நம்முடைய ரசிகன் எவ்வளவு பணம் கொடுத்தும் எப்படியாவது நம் படத்தை பார்ப்பான். 

அவன் எப்படியாவது தான் சம்பாதிக்கும் பணத்தை கொண்டு குடும்பம் நடத்துகிறானோ இல்லையோ நம்முடைய படத்தை பார்ப்பான். 

அதனால் நாம் வாங்கும் சம்பளத்தை மக்களிடம் வசூலிக்கலாம் என்று அவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். 
தமிழண்டா ! என்று சொல்லும் போதே ஏமாந்தவன் என்று நினைக்கும் இந்த நடிகர்களை நீங்கள் தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள். இந்த நடிகர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதை யோசித்து பாருங்கள் . 

இவர்கள் நன்மை செய்தால் பாராட்டுங்கள். அது மட்டும் போதும் தலையில் வைத்து கொண்டாடாதீர்கள். இனியும் தூங்காதீர்கள் விழித்து கொள்ளுங்கள் . 

இது நமக்கும் நம் நாட்டுக்கும் நல்லது சினிமா  மோகம் நம் மூளையை சலவை செய்து செயலிழக்க செய்யும் கருவியாக உள்ளது . இனியும் திருந்துங்கள் .
Tags: