சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர் என்பது அனைவரும் அறிந்ததே. இமயமலை உள்பட பல ஆன்மீக தலங்களுக்கு அவர் சென்று வழிபாடு நடத்தியுள்ளார்.
மேலும் பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டு உரையாற்றி யுள்ளார். இந்நிலையில் நேற்று நடந்த 'தெய்வீக காதல்' என்ற ஆன்மீக புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு அந்த புத்தகத்தை வெளியிட்டார்.
பின்னர் அவர் இந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய போது, 'நான் ஆன்மீகத்தை மிக அதிகமாக நேசிக்கின்றேன். பணம் உள்பட மற்ற அனைத்தையும் விட ஆன்மீகத்தை நான் அதிகமாக விரும்புகிறேன்.
ஆன்மீகம் பணத்தைவிட எனக்கு அதிக சக்தி கொடுத்துள்ளது. நான் ஒரு ஆன்மீகவாதி என்று கூறிக் கொள்வதை நான் பெருமையுடன் நினைக் கின்றேன்.
இமயமலையில் அளவிட முடியாத ரகசியங்கள் பொதிந்து உள்ளன. அந்த ரகசியங்களை அறிய நான் அங்கு சென்றுள்ளேன் என்று கூறினார்.
மேலும் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச யோகாந்தரால் கடந்த 1917ஆம் ஆண்டு நிறுவப்பட்ட 'யோகதா சத்சங்க சொசைடி ஆஃப் இந்தியா' அமைப்பின் நூறாவது ஆண்டு விழாவாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்தது என்பது குறிப்பிடத் தக்கது.