ஓபிஎஸ் அணியில் ஒரு செய்தி வாசிப்பாளர் !

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது யார்? என்ற போட்டியின் காரணமாக சசிகலா அதிமுக, ஓபிஎஸ் அதிமுக என இரண்டு அணிகளாக பிரிந்தன. 
ஓபிஎஸ் அணியில் ஒரு செய்தி வாசிப்பாளர் !
இப்போதைக்கு சசிகலா அதிமுக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஓபிஎஸ் அணி தங்களுக்கு மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் செல்வாக்கு உள்ளதாக கூறுகிறது.

ஓபிஎஸ் அணியில் தற்போது 11 எம்.எல்.ஏ க்களும், 12 எம்பி க்களும் ஆதரவு தந்துள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் இந்த அணிக்கு ஆதரவு அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.

இந்நிலையில் ஜெயா டிவியில் செய்தி வாசிப்பவரும் நடிகையுமான பாத்திமா பாபு இன்று திடீரென ஓபிஎஸ் அணியில் இணைந்துள்ளார். 
ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளாராக இருந்த இவர் தற்போது ஓபிஎஸ் அணியில் தன்னை இணைத்து கொண்டதால் ஓபிஎஸ் அணிக்கு ஒரு பெண் பேச்சாளர் கிடைத்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings