ஆன்லைனில் அளவில்லா சலுகைகள் !

அமேசானில் உறுப்பினராக பதிவு செய்ய திட்டமிடுகிறீர்களா. நீங்கள் ஆச்சரியமான பரிசுகளை வெல்ல தயாராக இருங்கள்.
ஆன்லைனில் அளவில்லா சலுகைகள் !
முதல் முறையாக பதிவு செய்பவர்களுக்கு அமேசான் பிரைம் சர்வீஸ் மூலம் சேவை செய்ய தயாராகி வருகிறது அந்த நிறுவனம். 

அமேசன் பிரைம் மூலம் பொருட்களை ஆர்டர் செய்த ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் டெலிவரி செய்ய திட்டமிட்டு வருகின்றனர். 

தவிர இதற்கு தள்ளுபடி மற்றும் இலவசமாக டெலிவரி செய்ய உள்ளது. ஆர்டர் மதிப்பு குறைவாக இருந்தாலும் டெலிவரி கட்டணம் இலவசம் என திட்ட மிட்டுள்ளது. 

இந்த சலுகை ஒருமுறை மட்டும் தான். முதல் முறைக்கு பிறகு இந்த சலுகையை தொடர ஆண்டு உறுப்பினர் கட்டணம் ரூ. 499 செலுத்த வேண்டும்.

முதல் முறை சலுகைகள்
அறிமுகச் சலுகைகளும் அதிக அளவில் உள்ளன. ஆன்லைன் மூலம் கிரெடிட் கார்டுக்கு விண்ணப் பிக்கும் புதிய வாடிக்கை யாளர்களுக்கு ரூ.1,000 கேஷ் பேக் சலுகையை அளிக்கிறது சிட்டி பேங்க். 

ஐசிஐசிஐ வங்கி முதல் முறையாக நெட்பேங்கிங், மொபைல் பேங்கிங் பயன் படுத்தும் வாடிக்கை யாளர்களுக்கு ‘புரொவோக் பேக்’ இலவசமாக அளிக்கிறது. 

ஓலா, உபெர் நிறுவனங்கள் புதிய வாடிக்கை யாளர்களுக்கு `ப்ரீ பர்ஸ்ட் ரைடு’ என இலவச சேவையை அளிக்கிறது. ஆன்லைன் நிறுவனங்கள் சலுகை களை அளிப்பதில் எந்த மர்மமு மில்லை.

பெருவாரி யான நிறுவனங்கள் தங்களது தளம் மற்றும் சேவைகள் குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள சொல்லி கேட்கின்றனர் என்பதும் முக்கிய மானது.

சலுகைகள், அதிகபட்ச தள்ளுபடிகள் அளிப்பதன் மூலம் ஆரம்ப கட்டத்தில் இந்த நிறுவனங்கள் நஷ்டங்களையே சந்திக்கின்றன. இது எதற்கு என்றால், இதன் மூலம் நீங்கள் திரும்ப திரும்ப அந்த தளத்துக்கு செல்வதற்கு தான். 

இதன் மூலம் அவர்கள் பிரேக் ஈவன் நிலையை அடைய உதவி செய்கிறீர்கள். அறிமுக சலுகைகளால் ஏற்படும் இழப்புகள் இதற்குத் தான் என்பதை உணருங்கள்.

அனைத்தும் ஒரே குடையில்
உங்களது தேடலில் பல சலுகைகள் விடுபட்டு போகலாம். ஆனால் Desidime.com, Coupondunia.in போன்ற சில இணைய தளங்கள் சலுகைகள், தள்ளுபடிகளை நமது கண்களுக்கு கொண்டு வந்து சேர்க்கின்றன. 

ஷாப்பிங் செய்ய வேண்டிய பிரிவுகள் வாரியாக எந்த எந்த ஆன்லைனில் சலுகைகள் கிடைக்கிறது என கொண்டு வந்து சேர்க்கின்றன. 

ஓலாவில் பயணம் செய்ய திட்டமிட்டால், ஓலா டீல்ஸ் அல்லது டிராவல் டீல்ஸ் என கிளிக் செய்து அங்கு தள்ளுபடி பயணங்களை பெறலாம்.

கூப்பன் துனியா தளம் நேரடி யாகவே அமேசான், ஜபாங், பிளிப் கார்ட், ஷாப்குளூஸ், மேக் மை டிரிப், உபெர், ஓலா போன்ற ஆன்லைன் நிறுவனங்களின் சலுகைக் கூப்பனைக் கொடுக்கிறது. 

ஒரு சில கூப்பன்கள் பயன்படாது என்றாலும் மற்றவை பயன்படுத்தும் அளவில்தான் இருக்கின் றன. ஆன்லைனில் பொருட்களை வாங்குவதற்கு முன் எதற்கும் இந்த தளங்களையும் ஒருமுறை பார்த்து விடலாம்.

பொறுமையாக வாங்குவது
சில நேரங்களில் பொருட்களை வாங்குவதற்கு காத்திருக்கலாம். பிக் பேஸ்கட் தளத்தில் `கிரீன் டியூஸ்டே‘ (செவ்வாய்க்கி ழமைகளில்) சலுகையில் 

ஐசிஐசிஐ பேங்க் டெபிட், கிரெடிட் கார்ட் வாடிக்கை யாளர்களுக்கு 25 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. ஒரு வாடிக்கை யாளருக்கு மாதம் ரூ.400 வரை சலுகை கிடைக்கிறது, 

வீட்டு மளிகை பொருட்களை இப்படி சலுகையிலும் வாங்கலாம். பண்டிகை காலத்தில் கேஷ் பேக் ஆபர்கள் உண்மையிலே பயன் தரும். 

ஏனென்றால் அந்த நாட்களில் போட்டி அதிகம் என்பதால் பல ஆன்லைன் நிறுவனங்கள் பல சலுகைகளை அளிக் கின்றன. சிறிய திட்டமிடல் இருந்தால் மிக சரியாக ஆன்லைன் ஆபர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆபர்களை படிக்கவும்
எல்லாவற்றிலும் முக்கியம் கிடைக்கும் ஆபர்களை படிக்கவும். சில மாதங்களுக்கு முன் பிக் பேஸ்கட் நிறுவனம் 

முதல் முறையாக குறைந்த பட்சம் 1000 ரூபாய்க்கு பொருட்களை வாங்கும் வாடிக்கை யாளர்களுக்கு 20 சதவீத சலுகை என அறிவித்தது. 

இதனால் தனது பெயரிலும், கணவரின் பெயரிலும் இரண்டு கணக்குகளை தொடங்கினார் ஒரு குடும்ப தலைவி. ஆனால் இது போல அனைத்து தளத்திலும் கிடைத்து விடாது.

ixigo.com போன்ற தளங்களில் விமான டிக்கெட் புக்கிங் செய்தால் ரூ.500 வரை நேரடியாகவே தள்ளுபடி கிடைக்கிறது, 

நான்கு பேர் கொண்ட குடும்பம் என்றால் 2000 ரூபாய் தள்ளுபடி கிடைக்குமே. முந்திக் கொண்டால் ஆன்லைன் வாடிக்கை யாளர்கள் இது போன்ற சலுகைகளை அனுபவி க்கலாம்.
Tags:
Privacy and cookie settings