சென்னையில் விற்கப்படும் டொனால்ட் டிரம்ப் தோசை !

அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப் பெயரில் தோசை ஒன்று அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டொனால்ட் டிரம்ப்.
சென்னையில் விற்கப்படும் டொனால்ட் டிரம்ப் தோசை !
இவர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அதிபராக பதவியேற்க உள்ளார். இவரைப் பற்றிய செய்திகள், நம்நாட்டின் பட்டி தொட்டியங்கும் பரவி வருகிறது.

இதனை வியாபாரமாக மாற்றி யுள்ளது சென்னையை சேர்ந்த உணவகம் ஒன்று. வாடிக்கை யாளர்களை கவரும் வண்ணம் டொனால்ட் டிரம்ப் பெயரில் தோசை ஒன்று அறிமுகம் செய்துள்ளது.

இதில் அதிக அளவு நெய் சேர்க்கப்பட்டு, நன்கு மொருவலாக, சிறிது ஆரஞ்சு நிறம் வரும் வரை வேக வைக்கப் படுகிறது.

இதை யடுத்து தோசையின் மேற்புறம் கண்கள் போன்ற அமைப்பை காய் கறிகளால் ஏற்படுத்தி விற்கின்றனர். இந்த செய்தி தற்போது சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Tags:
Privacy and cookie settings