சமந்தா ஒரு விஷயத் துக்கு மட்டும் அடிக்ட். அவரால் உடற்பயிற்சி இல்லாமல் இருக்கவே முடியாதாம். என்ன கஷ்டம் வந்தாலும், என்ன வேலைகள் இருந்தாலும் உடற் பயிற்சி தான் முக்கியம் என்று இருப்பாராம்.


கண்ட உணவுகளை சாப்பிட மாட்டாராம். உடலை பேணிக் காப்பதில் அவ்வளவு இஷ்டமாம். போன வருஷம் சூப்பரா இருந்தாலும், இந்த வருஷம் நாலைந்து படங்களில் நடிக்க விருப்பமாம்.

சும்மா ஹீரோக்களோட டூயட் பாட பிடிக்கலையாம். ஹீரோயின் ஓரியண்டட் படம் பண்ண ஆசையாம். போன வருஷத்தில் ரொம்ப முக்கிய விஷயம். அவரது காதலை, அவரது குடும்பம் ஏற்றுக்கொண்டது தானாம்.

வெற்றி தோல்வியை நம்பாமல், உழைப்பை நம்புகிறவள் என்று சொல்லி இருக்கும் சமந்தா, இப்போது தான் மாலத்தீவில் புத்தாண்டு கொண்டாடி ஊருக்கு வந்திரு க்கிறார்.