கேவியட் மனு அல்லது முன்னெச்சரிக்கை மனு (Caveat Petition) என்பது தாக்கல் செய்யும் வாதிக்கு எதிராக, முன் அறிவிப்பு இன்றி, ஒரு குறிப்பிட்ட காரியத்தில், 
கேவியட் மனு என்றால் என்ன...?
பிரதிவாதிக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு அளிப்பதை தடுக்க, வாதி சார்பில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுவானது கேவியட் மனு எனப்படும். 
முன்னெச்சரிக்கையாக கேவியட் மனு தாக்கல் செய்தவரின் கருத்தை அறிந்த பின்பே, வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கும்.

நீதிமன்றத்தில் ஒருவர் அல்லது ஒரு நிறுவனம் ஒரு விடயம் குறித்து வழக்கு தாக்கல் செய்யும் போது, அவ்வழக்கு தம்மை பாதிக்கும் எனக் கருதும் ஒருவர் அல்லது ஒரு நிறுவனம், 

தன்னை அல்லது நிறுவனத்தை கலந்து ஆலோசிக்காமல் வழக்கின் தீர்ப்பு கூறக்கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கையாக நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்வர். 

கேவியட் மனு தாக்கல் செய்பவரின் விளக்கத்தைப் பெற்றுத் தான் நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை வழங்குவதால், தனி மனித அல்லது நிறுவனத்தின் உரிமை காக்கப்படுகிறது.
நீதிமன்ற நடவடிக்கைகளில் கேவியட் மனுத்தாக்கல் என்பது உரிமையியல் வழக்கில் மட்டுமே பின்பற்றப்படுகிறது.
கைநடுக்கம் ஏன் ஏற்படுகிறது?
உரிமையியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 148- A ன் கீழ் அதன் விளக்கம் விவரிக்கப் பட்டுள்ளது.

தனக்கெதிராக ஒரு நபரால் ஒரு உரிமையியல் வழக்கு (civil case) தாக்கல் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக நம்பும் ஒருவர்,

அந்த வழக்கின் மூலம் தனக்கெதிராக அந்த வழக்கினைப் பொறுத்து இடைக்கால உத்தரவு அல்லது தடை உத்தரவு பிறப்பிக்கப்படக் கூடிய வாய்ப்பிருக்கிறது என்று நம்பும் பட்சத்தில், 

அப்படியொரு வழக்கு தாக்கல் செய்யப்படும் போது அதில் தன்னையும் ஒரு தரப்பினராக சேர்க்க வேண்டும் எனவும், 

அதன் பின் வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் எனவும் கோரப்படும் மனுவை தான் கேவியட் மனு (முன்னெச்சரிக்கை மனு) என்று மேற்படி சட்டம் விளக்குகிறது...
யாருக்கெதிராக கேவியட் மனு தாக்கல் செய்யப்படுகிறதோ, அவருக்கு மனு தாக்கல் செய்யும் நபர், கேவியட் மனுவை பதிவுத் தபாலில் அனுப்பி, 

அந்த ரசீதை வைத்து சம்பந்தப்பட்ட நீதிமன்ற அலுவலகத்தில், அதை காண்பித்து அந்த கேவியட் மனுவிற்கான எண்ணை பெற்றுக் கொள்ள வேண்டும். 
எலும்புகள் பலமாக இருக்க என்ன செய்ய வேண்டும் !
மாவட்ட நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள், DMC மற்றும் உயர் நீதிமன்றத்தில் இதற்கான நடைமுறையை செய்யலாம். இந்த முன்னெச்சரிக்கை மனுவிற்கு 90 நாட்கள் மட்டுமே காலக்கெடு உண்டு... 

இந்த 90 நாட்களுக்குள் கேவியட் மனு செய்தவருக்கு எதிராக, அவர் மனுவில் குறிப்பிட்ட நபரின் மூலமாக வழக்கு தொடுக்கப்பட்டால், அதைப் பற்றிய அறிவிப்பானது,
மனு செய்த நபருக்கும் அவருடைய வழக்கறிஞருக்கும் தெரியப் படுத்தப்படும். அதன் பின்னர் இரு தரப்பினரையும் விசாரித்து நீதிமன்றமானது உத்தரவுகளை பிறப்பிக்கும்.

கேவியட் மனுத்தாக்கலின் நன்மை என்னவெனில், சம்பந்தப்பட்ட ஒரே தரப்பினர்களால் பல வழக்குகள் எழுவது தடுக்கப் படுகிறது.

ஒரே வழக்கின் கீழ் விசாரனைகள் செய்யப் படுகிறது. நீதிமன்றத்தின் கால விரையம் குறைக்கப் படுகிறது...