பிறப்பு, இறப்புச் சான்றிதழில் மாற்றம் | Birth, Death Certificate Change !

ஒருவர் உயிருடன் இருக்கும் காலம் வரை அவருக்கு பிறப்புச் சான்றிதழ் எங்காவது ஓரிடத்தில் தேவைபட்டுக் கொண்டி ருக்கும். அதேபோல், ஒருவர் இறந்த பின்பு, அவரது குடும்பத்துக்கு இறப்புச் சான்றிதழ் பயன் படுகிறது.


எனவே, பிறப்பு அல்லது இறப்பினை 21 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். தாமதக் கட்டணம் செலுத்தி 30 தினங்க ளுக்குள் பதிவு செய்ய வேண்டும்.

தவறினால் ஓராண்டுக்குள் பிறப்பு, இறப்பு அலுவலர் உரிய உத்தரவு பெற்று கால தாமதத்து க்கான காரணத்தைக் கேட்டறிந்து பதிவு செய்து கொள்ளலாம்.


ஆனால், ஓராண்டு கடந்த பின்பு பிறப்பு – இறப்பு பதிவாளருக்கு, பதிவு செய்ய அதிகாரம் இல்லை. அதன் பிறகு, நீதிமன்ற உத்தரவு மூலம் மட்டுமே பதிவு செய்ய முடியும்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெறும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன் படி, வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவு பெற்றாலே, தாமதமான, பிறப்பு- இறப்புகளை பதிவு செய்யலாம் என உள்ளாட்சிகள் மற்றும் பிறப்பு- இறப்பு பதிவு அதிகாரிகளுக்கு சுகாதார துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்மூலம் நீதிமன்ற த்துக்கு செல்லாமலேயே, பிறப்பு, இறப்பு சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.
Tags:
Privacy and cookie settings