நரம்பு முடிச்சு நோய் !





நரம்பு முடிச்சு நோய் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
வெரிகோஸ் நரம்பு முடிச்சி நோய் என்றால் என்ன? பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப் பகுதியிலோ, 
முட்டிக் காலுக்கு பின் புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப் பார்த்திரு ப்பீர்கள். முட்டிக்கால் களுக்கு கீழேயும் இத்தகைய நரம்பு முடிச்சுகள் இருக்கும். உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள் இருக்கும். 


இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில் வலியும், வேதனையும், குடைச்சல் போன்ற உணர்வும் ஏற்படும். கால் பகுதியின் இரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கும்.

கால்கள் செயல் இழப்பது, வீங்குவது போன்ற பல தொல்லைகள் ஏற்படக்கூடும். நாள்பட்ட நோயின் தாக்கத்தால் புண்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.

அட இது தான் வெரிகோஸ் வெயின் நோயா? இது நிறைய பேருக்கு இருப்பதை நாம் பார்த்திருக்கிறோமோ என்று நினைக்கத் தோன்றுகிறதா? உண்மைதான். 

இது பரவலாக பலருக்கும் உள்ள நோய்தான். கடுமையான வலியோ, வேதனையோ இல்லாததால் இதனை யாரும் பெரிதுபடுத்துவது இல்லை.

ஆனாலும், இது அலட்சியப் படுத்தக்கூடிய நோய் அல்ல. நோய்களில் எதுவுமே அலட்சியத்துக்குரி யது அல்ல என்பது தான் உண்மை. 

தலைவலி கூட தலை போகும் பிரச்சினையாக மாறலாம். நோய் என்றால் நோய்தான். அவற்றால் ஏற்படும் விளைவுகளிலும், வேதனைகளிலும் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம். 

எப்படி இருந்தாலும், எந்த நோயாக இருந் தாலும் அதனைக் குணப்படுத்த முயல வேண்டும் என்பதே மருத்துவத்தின் அடிப்ப டைக் கோட்பாடாகும். அது ஒருபுறம் இருக்கட்டும்.

இப்போது வெரிகோஸ் வெயின் நோய் குறித்தும், அதற்கான சிகிச்சைகள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

கை, கால்கள் உட்பட உடலின் அனைத்து பாகங்களில் இருந்தும் இதயத்துக்கு அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் களுக்கு வெயின் என்று பெயர். 

வெரிகோஸ் என்றால் இரத்த நாளங்கள் புடைத்துப் போதல் அல்லது வீங்குதல் என்று பொருள். இதயத்திற்கு அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் நாளங்கள் சுருண்டு கொள்ளுதல், வீங்குதல் போன்ற நோய்களே, வெரிகோஸ் வெயின் என்று அழைக்கிறோம்.

வெரிகோஸ் வெயின் நோய் எதனால் வருகிறது ? 

மனிதனின் பெருங்குடல், விலங்குகளுக்கு இருப்பதைப் போல் கீழ்நோக்கித் தொங்கிய படி இல்லை. ஒரு கூட்டுக்குள் இருப்பதைப் போல மனிதனின் பெருங்குடல் அடைக்கப் பட்டுள்ளது.

மலச்சிக்கல் ஏற்படும் போது, இரத்த நாளங்கள் அனைத்தும் அழுத்தப்படு கின்றன. 

நாளங்கள் புடைத்தல் அல்லது வீங்குதல் போன்ற இயல்புக்கு மாறான நிலைக்கு தள்ளப் படுகின்றன. ஆக, மலச்சிக்கல் தான் இந்த நோய்க்கான மூல காரணமாக கருதப் படுகிறது. 


அடுத்த படியாக ஒரே இடத்தில் நீண்ட நேரம் அசைவற்று நின்றபடியே வேலை செய்வது, ஒரே இடத்தில் கால்களை தொங்க விட்ட படியே அசைவற்று உட்கார்ந்திருப்பது போன்ற வற்றாலும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இந்நோய் வருவதற் கான காரணமாகும்.
Varicose-Veins.png
இரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் பலவீனமாக இருந்தால் இந்த நோய் ஏற்படு வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

பாதங்களில் இருந்து இரத்தத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லும் போது, புவியீர்ப்பு விசைக்கு எதிராக, அதிக விசையுடன் வால்வு கள் இயங்க வேண்டி உள்ளது. 

அது இயலாமல் போகும் போது, இரத்தம் மீண்டும் கீழ்நோக் கியே செல்லத் தொடங்கும். இதனால், இரத்த நாளங்களின் சுவர்கள் பாதிக்கப்பட்டு, புடைத் தும் வீங்கியும் காணப்படும். 


ஆக, இவை எல்லாமே, உடலுக்கு அதிக அசைவில்லாத வாழ்க்கை முறையினால் வரும்கேடுகள் என்பது புரிகிறது. உடலுக்கு குறைந்தபட்ச உழைப்பும், அசைவும் தேவை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

நரம்பு முடிச்சு நோய் வர காரணம் !
கால் நரம்பு முடிச்சு என்றால் என்ன?
Tags: