சேகர் ரெட்டியை கைது செய்தது சிபிஐ !

தொழிலதிபரும், திருப்பதி தேவஸ் தானத்தின் முன்னாள் உறுப்பின ருமான சேகர் ரெட்டியை, சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுத் துறை இன்று (புதன்கிழமை) கைது செய்துள்ளது.
சேகர் ரெட்டியை கைது செய்தது சிபிஐ !
தொழிலதிபர் சேகர் ரெட்டியை கைது செய்த மத்தியப் புலனாய்வுத் துறை கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி, சேகர் ரெட்டி, 

அவரது சகோதரர் ஸ்ரீநிவாசலு மற்றும் அவர்களது கூட்டாளி பிரேம் ஆகியோரது வீடுகள், அலுவல கங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

இந்தச் சோதனைகள் சில நாட்கள் தொடர்ந்து நடைபெற்றன. சோதனையின் முடிவில் ஒட்டு மொத்தமாக 136 கோடி ரூபாய் அளவுக்குப் பணம் கைப்பற்றப் பட்டது. அதில் 34 கோடி ரூபாய் புதிய 2,000 ரூபாய் நோட்டாக கிடைத்தது.

மேலும், 177 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளும் கிடைத்தன. இந்நிலையில், சேகர் ரெட்டியும் அவரது சகோதர் ஸ்ரீநிவா சலுவும் இன்று கைது செய்யப் பட்டனர். 
அவர்கள் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜனவரி 3-ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப் பட்டனர்.

சேகர் ரெட்டி விசாரணையில் தந்த தகவலை யடுத்தே தமிழக தலைமைச் செயலர் ராம மோகன ராவின் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருவதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
Tags:
Privacy and cookie settings