வண்ணதாசனுக்கு தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது !

2016- ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது வண்ணதாச னுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது. அவரது ஒரு சிறு இசை நூலுக்கு இந்த விருது வழங்கப் படுகிறது.
வண்ணதாசனுக்கு தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது !
வண்ணதாசன் என்ற பெயரில் கதைகளையும் கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதை களையும் எழுதி வரும் இவரது இயற்பெயர் சி.  கல்யாண சுந்தரம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த இவர், 1962-லிருந்து எழுதி வருகிறார். கலைக்க முடியாத ஒப்பனைகள், ஒளியிலே தெரிவது, உயரப் பறத்தல் கனிவு ஆகியவை இவரது சில சிறுகதைத் தொகுப்புகள்.

தற்போது விருதை வென்றிருக்கும் ஒரு சிறு இசை நூலை, சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 

சின்னு முதல் சின்னு வரை என்ற நாவலையும் புலரி, முன்பின், ஆதி உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளையும் வண்ணதாசன் கடிதங்கள் என்ற கடிதத் தொகுப்புகளையும் இவர் எழுதியுள்ளார்.
இலக்கியச் சிந்தனை, விஷ்ணுபுரம் விருது உள்ளிட்ட விருதுகளை இவர் பெற்றிருக்கிறார். 

இவரது தந்தையான தி.க. சிவசங்கரன், தமிழின் குறிப்பிடத் தகுந்த விமர்சகர்களில் ஒருவர். 2000-வது ஆண்டில் சாகித்ய அகாதெமி பரிசை வென்றவர்.
Tags:
Privacy and cookie settings