இணையத்தில் உள்ள தளங்களின் எண்ணிக்கை !

உலக அளவில் பிரபலமாக உள்ள இணையதள செர்வர்களில் 314 மில்லியன் இணையதள முகவரிகள் இயங்கு கின்றன. 
இணையத்தில் உள்ள தளங்களின் எண்ணிக்கை !
இணையதள செயல் பாடுகளைக் கண் காணித்து வரும் வெரிசைன் (VeriSign) நிறுவனம் இணைய தளங்களின் தரவுகள் குறித்த விரிவான அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.

அதில், கடந்த 2015 ஆம் ஆண்டின் கடைசி நான்கு மாதங்களில் மட்டும் 15 மில்லியன் (1.5 கோடி) புதிய இணையதள முகவரிகள் பதிவு செய்யப் பட்டுள்ள தாகக் கூறப் பட்டுள்ளது.
உலகின் பிரபல செர்வர்களில் மட்டும் இதுவரை 314 மில்லியன் இணையதள முகவரிகள் பதிவு செய்யப்பட்டு, இயங்கி வருவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

அதேபோல, புதிய இணைய தளங்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் 25.9 மில்லியன் அல்லது 9 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அடைந்து வருவ தாகவும் கூறப்பட் டுள்ளது.
Tags:
Privacy and cookie settings