வாழ பிடிக்கவில்லை.. நண்பனை திருமணம் செய்கிறேன் மிரட்டல் கடிதம் !

0
விவாகரத்து பெற்று நண்பரை மணக்கவுள்ளேன் என மனைவி தன்னுடைய கணவருக்கு எழுதிய கடிதம் அவருக்கு எமனாக மாறியது. டெல்லியை சேர்ந்த தம்பதிக்கு கடந்த 1980-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. 
அதன்பின் 1987ம் ஆண்டு அமெரிக்காவுக்கு வேலை நிமித்தமாக கணவர் செல்கிறார், இவர்களுக்கு மகள் ஒருவர் இருக்கிறார். இச்சூழலில் 1990ம் ஆண்டு கணவனுக்கு மனைவி கடிதம் ஒன்றை அனுப்புகிறார். அதில், இதற்கு மேலும் சேர்ந்து வாழ முடியாது; விவாகரத்து செய்து கொள்ளலாம்; 

என்னையும், மகளையும் கவனித்துக் கொள்வதாக கூறியுள்ள நண்பரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன் என்று கூறப்பட்டிருந்தது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்த கணவர், விவாகரத்து கேட்டு டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். 

இதை விசாரித்த நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மனைவி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

அத்துடன், தான் கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கடிதம் எழுதியதாகவும், கடிதத்தில் எழுதியிருந்த தகவல்கள் உண்மையில்லை எனவும் தெரிவித்தார். மேலும் தனக்கு யாரும் நண்பர் கிடையாது என்றும், கணவர் இந்தியா வர வேண்டும் என்பதற்காக அப்படி செய்ததாகவும் விளக்கமளித்தார். 

இதனை ஏற்றுக் கொள்ள எதிர்தரப்பு வக்கீல், மனைவி கடிதம் எழுதி ஐந்து ஆண்டுகள் கழித்தே அதாவது 1995ம் ஆண்டில் தான் வழக்கு விசாரணைக்கு வந்தது. 

அந்த இடைப்பட்ட காலத்தில் கணவரை சமாதானப்படுத்த எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை, கடிதம் பற்றி கூட கணவருக்கு விளக்கம் அளிக்கவில்லை என வாதம் செய்தார். 

இதனையடுத்து கடிதத்தை சாட்சியாக எடுத்துக் கொண்ட நீதிபதி கூறுகையில், வெளிநாட்டில் இருக்கும் கணவருக்கு மனைவி எழுதிய கடிதம் மிகவும் கொடூரமானது. 

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலை எண்ணிப் பார்க்க வேண்டும், எனவே விவாகரத்து வழங்கி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியே என உத்தரவிட்டுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings