இமாலயத் தவறுகளால் சரிந்த விஜய் மல்லையாவின் சாம்ராஜ்யம் !

இன்றைக்கு இந்தியாவே தேடும் ஒரு நபர் என்றால் அது விஜய் மல்லையா தான். ஏறக்குறைய ரூ.7,000 கோடி கடனை வாங்கி விட்டு, அதை திருப்பித் தராமலே பிரிட்டனுக்கு ஓடி விட்டார் மல்லையா.
இமாலயத் தவறுகளால் சரிந்த விஜய் மல்லையாவின் சாம்ராஜ்யம் !
மீண்டும் அவரை இந்தியாவு க்கு அழைத்து வந்து, கடன் தொகையை வசூலிக்க வேண்டும் என்று கதறுகின்றனர் அவருக்கு கடன் தந்த வங்கி அதிகாரிகள். யார் இந்த விஜய் மல்லையா?
மல்லையாவின் ஆரம்ப காலம் !

இவருக்கு அறிமுகம் தேவை யில்லை. கிங்ஃபிஷர் என்கிற ஒற்றை வார்த்தை போதும், இவரைப் பற்றி எடுத்துச் சொல்ல. 

ஒரு உத்தம தந்தை தனது தொழிலை ஆலமரமாக வளர்த்தெடுத்து தன் மகனுக்குத் தர, அதை தன்னுடைய பல இமாலயத் தவறுகளால் வெட்டி வீழ்த்திய ஊதாரியின் கதை தான் விஜய் மல்லையா வினுடையது. 

இந்த உத்தம வில்லனின் கதையைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். 

டிசம்பர் 18, 1955 அன்று கொல்கத்தாவில் விட்டல் மல்லையா, லலிதா ராமையா வுக்கு மகனாகப் பிறந்தார். சில்வர் ஸ்பூன் குழந்தையாகப் பிறந்த விஜய் மல்லையாவின் தந்தை விட்டல் மல்லையா, கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பட்டம் படித்தவர்.

வெளிநாடு களுக்குச் சென்று தொழில் அனுபவம் பெற்றவர். 1947-ல் யுனைடெட் ப்ரூவரீஸ் நிறுவனத்தின் முதல் இந்திய இயக்குநராக அவர் தேர்ந்தெடுக்கப் பட்ட போது அவருக்கு வயது 22. 

அடுத்த ஒரே வருடத்தில் அந்த நிறுவனத்தின் தலைவராகவும் ஆனார். திருமணமான பின் கொல்கத்தா விலிருந்து பெங்களூ ருவுக்கு வந்து குடியேறினார். 

உடல்நலக் குறைவு இருந்த போதிலும் யுனைடெட் ப்ரூவரீஸ் நிறுவனத்தை பிரமாண்ட நிறுவனமாக வளர்த்தெடுத்தார்.

1983-ல் அவர் இறந்ததும் யுனைடெட் ப்ருவரீஸ் நிறுவனத்தின் தலைவராக அவரது ஒரே மகனான விஜய் மல்லையா பொறுப்பேற்க வேண்டி யிருந்தது. அப்போது அவருக்கு வயது 28.

உலகின் இரண்டாவது பெரிய மதுபான நிறுவனம் !

யுனைடெட் ப்ரூவரீஸ் தன் கைக்கு வருவதற்கு முன்பே, தனது 18 வயதில் ஹோக்ஸ்ட் லைஃப் சயின்ஸ் நிறுவனத்தின் இயக்கு னரானார் விஜய் மல்லையா. 

காமர்ஸ் பட்டப் படிப்பு முடித்த இவர், தெற்கு கலிஃபோர் னியா பல்கலைக் கழகத்தில் பிசினஸ் மேலாண் மையில் டாக்டர் பட்டம் வாங்கியவர். 

அவர் பொறுப் பேற்ற பிறகு யுனைடெட் ப்ரூவரீஸ் பெயரை உலக அளவில் பிரபல மாக்க அயராது உழைத்தார்.
அப்போது இருந்த மல்லை யாவுக்கும் இப்போது நாம் பார்க்கும் மல்லை யாவுக்கும் மலையளவு வித்தியாசம் இருந்தது. அவருடைய கடின உழைப்பு அசாத்திய மானதாக இருந்தது. 
எதற்கும் தயங்கிய தில்லை, பயம் என்றால் என்ன வென்று அவருக்குத் தெரியாது. இவை தான் அந்த நிறுவனம் உலகளவில் இரண்டாவது பெரிய மதுபான நிறுவன மாக வளரக் காரணம்.

மஹாரா ஷ்டிரா அரசு ஸ்ட்ராங் பீருக்கான கலால் வரியை உயர்த்திய போது ஷா வாலஸ் உட்பட அனைத்து மதுபான நிறுவன ங்களும் செய்வ தறியாது தடுமாறின.

ஆனால், அந்தச் சூழ்நிலை யைச் சாமர்த்தி யமாக சமாளித்த தோடு, தன் நிறுவன த்தை விரிவுப் படுத்திய அதே நேரத்தில் தடுமாற் றத்தில் இருந்த பல நிறுவன ங்களைக் கைப்பற் றவும் செய்தார்.

இதனால் அவருடன் நட்புடன் இருந்த மனு மற்றும் கிஷோர் சாப்ரியா சகோதரர்க ளுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது. 

சாப்ரியா சகோதர ர்கள், மல்லை யாவின் தொழிலுக்கு பக்க பலமாக இருந் தார்கள். அவர்களின் பிரிவு மல்லை யாவுக்கு முதல் இழப்பு.

உறவு முறிந் ததுடன், கிஷோர் சாப்்ரியா மல்லை யாவுக்கு போட்டி யாக அலைட் ப்ரூவரீஸ் அண்ட் டிஸ்டில் லர்ஸ் என்ற மற்றொரு மதுபான நிறுவன த்தைத் தொடங்கி மிகப் பெரிய அளவில் வளர்ந்தார். 
ஆனால், விஜய் மல்லையாவும் சளைக்காமல் உழைத்து, இந்தியா வின் முதன்மை மது உற்பத்தி நிறுவனமாக தனது நிறுவனத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
ஷா வாலஸ், ஹெர்பர்ட் சன்ஸ் ஆகிய நிறுவன ங்களைக் கையகப் படுத்திய பிறகு உலக அளவில் டியாஜியோ நிறுவனத்துக்கு அடுத்த 

பெரிய மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு சொந்தக் காரராக ஜொலித்தார் மல்லையா. இந்தியச் சந்தையில் கிங்ஃபிஷர் பீரின் மார்க்கெட் ஷேர் 50%. ஏறக்கு றைய இந்தியா தவிர்த்து,

52 நாடுகளில் இதன் விற்பனை செமஜோர். மதுபான த்துக்கு பெயர் போன நகரமாக பெங்களூரு மாறியதற்கு இவரது தொழில் விரிவா க்கத் திட்டங்கள் மிக முக்கிய மானவை. 

இந்த நிறுவன த்தின் அமெரிக்க கிளை மென்டோசினோ புரூவிங் கோ என்ற பெயரில் இயங் குகிறது.

இவருடைய யுனைடெட் ப்ரூவரீஸ் குழுமம், மதுபான ங்கள் உற்பத்தி, விமானச் சேவை, ரியல் எஸ்டேட், பொறியியல் துறை, 

உர உற்பத்தி, உயிரியல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் என பல்வேறு துறைகளில் தனது தொழிலை ஆலமரமாக விஸ்த ரித்தது.

சனோஃபி இண்டியா மற்றும் பேயர் கிராப் சயின்ஸ் இண்டியா, மங்களூர் கெமிக் கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் ஆகியவை இவருடைய பிற நிறுவனங்கள்.
இதுபோன்ற அறுபது நிறுவனங்களை உள்ளடக்கிய பன்னாட்டு குழுமமாக யுனைடெட் ப்ரூவரீஸ் வளர்ந்தது. இதன் வருவாய் அவர் பொறுப் பேற்ற 15 ஆண்டுகளில் 64% உயர்ந்து, 1998 - 1999-களில் ரூ.74 ஆயிரம் கோடியாக இருந்தது.
(nextPage)
சரிவுக்கான மூன்று காரணங்கள் !
இமாலயத் தவறுகளால் சரிந்த விஜய் மல்லையாவின் சாம்ராஜ்யம் !
இந்த கணத்துக்காகத் தான் காத்திருந்தோம். நம் ஒட்டு மொத்த கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் குழுவும் ஏர்லைன்ஸ் கனவை சாத்தியப் படுத்த பாடு பட்டிருக்கிறது. 

இறுதியாக இந்த விண்ணை ஆள நாம் தயாராகி இருக்கிறோம். வாருங்கள் பறக்கலாம். 

இதுவே உங்கள் வாழ்க்கை யின் பொன்னான தருணங்களாக அமையட்டும் என்று கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் அறிமுகப் படுத்தப்பட்ட அன்று மல்லையா செய்த இந்த முழக்கத்தை யாரும் மறந்திருக்க மாட்டா ர்கள்.
மாநிலங் களவை உறுப்பினராக அரசியல் களத்திலும் இருந் ததால், அரசியல் பிரமு கர்கள், சினிமா பிரபல ங்கள் என அங்கிருந்த அனைவரும் அந்த முழக்க த்தை கேட்டு ஆர்ப்பரி த்தனர். 

குலுக்கப் பட்ட பீர் பாட்டில்கள் பொங்கி வழிந்தன. ஆனால், அந்த கிங்ஃ பிஷர் ஏர்லை ன்ஸே தன் பிசினஸ் வாழ்வுக்கு சாவுமணி அடிக்கப் போவதை அப்போது அவர் உணரவே இல்லை.

கிங்ஃபி ஷரைத் தொடங்கிய போது, விமானங்களை விட வாடிக்கை யாளர் சேவை தான் நம் நோக்கம் என்ற மல்லையா, விமானப் பணியா ளர்கள் 5,500 பேரை அவரே நேர்காணல் செய்து தேர்வு செய்தார்.

அழகான, அருமை யான வசதி யான விமானம், நல்ல உணவு, நல்ல, அழகான பணிப் பெண்கள் மற்றும் பொழுது போக்கு எனப் பெயர் பெற்றது. 

முதல் வகுப்பு பயணி களுக்கு இலவச மதுவும் தரப்பட்டது. இந்தியாவில் கிங்ஃபிஷருக்கு மவுசு கூடியது. ஆனால், இது மட்டும் போதாது; 

உலகின் அத்தனை மூலை க்கும் தன் விமானம் செல்ல வேண்டும் என்று விரும் பினார். ஆனால், குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் கழிந்த பிறகே ஒரு விமான நிறுவனம், 
இமாலயத் தவறுகளால் சரிந்த விஜய் மல்லையாவின் சாம்ராஜ்யம் !
சர்வதேச சேவையைத் தொடங்க முடியும் என்ற சட்டம் அப்போது இருந்த தால், நொடிந்து கிடந்த ஏர் டெக்கான் நிறு வனத்தை வாங்கினார். அங்குதான் அவருடைய வீழ்ச்சி ஆரம்பம் ஆனது.
பறக்க நினைத்தார்; பாதாளத்தில் விழுந்தார் !

இந்தியா வில் மிகப் பெரிய நெட்வொர் க்காக இருந்த, கேப்டன் ஜிஆர் கோபிநாத் துக்குச் சொந்தமான ஏர் டெக்கானை 2007-ல் வாங்கி, அதனை பின்னர் கிங்ஃபிஷர் ரெட் என்று பெயர் மாற்றம் செய்தார். 

செப்டம்பர் 2008-ல் கிங்ஃபிஷர் தனது முதல் சர்வதேச விமான சேவையை பெங்களூரு விலிருந்து லண்டனுக்கு தொடங் கியது.

சரியாக 2008, உலகப் பொருளா தாரம் நெருக்கடிக்கு உள்ளாகி பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்தது. அதன்பிறகு சில ஆண்டுகள் தான் கிங்ஃபிஷர் ஏர் லைன்ஸ் தாக்குப் பிடித்தது. 

ஆனால், போகப் போக நஷ்ட மடைந்து நிதி நெருக் கடியைச் சமாளிக்க முடியாமல் திணறியது. பின்னர் அதன் வீழ்ச்சி தீவிரமானது. 

கிங்ஃபிஷர் ஏர்லை ன்ஸ் அதன் மொத்த 66 விமான சேவைகளில் 28 விமான சேவை களை நிறுத்தியது. 

மேலும், பண நெருக்கடி அதிகமாகி, வாடிக்கை யாளர்களு க்கும், ஊழியர் களுக்கும் தர வேண்டிய பாக்கி அதிகமானது. வங்கி களில் தொடர்ந்து கடன் வாங்கி வந்தார் மல்லையா. 

அவர் ஒரு வங்கி யையும் விட்டு வைக்க வில்லை. அவர் வாங்கிய மொத்தக் கடன் ரூ.7,000 கோடி. வாங்கிய கடனில் பெரும்பா லானவை யுனைடெட் ப்ரூவரீஸ் பெயரில் வாங்கப் பட்டிருந் தன. 

அதில் வந்த லாபத் தையும், வாங்கிய கடனையும் கிங்ஃபிஷர் ஏர்லை ன்ஸில் முதலீடு செய்தார். அதில் லாபம் பெயருக் குக்கூட இல்லை. போகப் போக மதுபான நிறுவனத் திலும் நஷ்டம் ஏற்பட தொடங் கியது.
(nextPage)
ஆட்டம், பாட்டம், கொண்டா ட்டம் !
இமாலயத் தவறுகளால் சரிந்த விஜய் மல்லையாவின் சாம்ராஜ்யம் !
கிங்ஃபிஷர் ஏர் லைன்ஸ் இனி இல்லை. விரைவில் தன்னுடைய யுனைடெட் ஸ்பிரிட்ஸ் மீதான உரிமையும் கை விட்டு போக இருக்கிறது என்ற நிலையிலும் விஜய் மல்லையாவின் கொண்டாட்டம் ஒரு போதும் குறைய வில்லை. 
அவரது அழகு மாடல் பெண்களைக் கொண்ட காலண்டர்களோ, ஐபிஎல் கிரிக்கெட் ஏலங்களோ நிற்க வில்லை. 2003-லிருந்து கிங்ஃபிஷர் காலண்டரை வெளியிட்டு வருகிறார். 

ஒவ்வொரு வருடமும் ஒரு நாடு, பல நூறு அழகிகளில் இருந்து தேர்வு செய்யப் பட்ட அழகிகளுடன் ஆட்டம், பாட்டம், கொண்டா ட்டம் என ஒரே திருவிழா தான் மல்லை யாவுக்கு.

ஏர்லைன் ஸின் உரிமம் ரத்து செய்யப் பட்டது. பணி யாளர்கள் அனை வரும் 15 மாதங்கள் ஊதியம் தராததால், போராட்டம் செய்யும் முடிவுக்கு வந்தனர். 

பணியாளர் ஒருவரின் மனைவி பணப் பிரச்னை யால் தற் கொலையும் செய்து கொண்டார். இதற் கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய விஜய் மல்லையா, ஏதோ ஒரு குட்டித் தீவில் உல்லா சமாக இருந்தார்.
அவரது மகன் அந்த வருட கிங்ஃபிஷர் காலண்டருக்காக அழகான பெண்களை நேர் காணல் செய்து கொண்டும், அவர்களோடு கடற்கரையில் வாலிபால் ஆடிக்கொண்டும் அதனை அவ்வப் போது ட்விட்டரில் பதிவு செய்து கொண்டும் இருந்தார்.

இவருக்கு கடன் தந்த வங்கிகளும், வேலை இழந்த ஊழியர்களும் இவரை கண்டபடி ஏசிக் கொண்டிருக்க, அதை எல்லாம் கொஞ்சம் கூட பொருட் படுத்தாமல், 

இரு மாதங்களுக்கு முன்பு இந்த வருடத்துக்கான காலண்டரை வெளியிட்டார் மல்லையா. அதன் முதல் காப்பியை உலக பிரபல பாப் பாடகர் என்ரிக் எலியாஸ்க்கு வழங்கி அதனை ட்விட்டரில் பதி விட்டார். 

இந்த காலண் டரை வெளி யிடும் நிகழ்ச்சி யில் உலக அழகிகள் முதல் பாலிவுட், ஹாலிவுட் நடிகைகள் வரை அனைவரும் பல கோடி கொடுத்து அழைத்து வரப்பட் டார்கள்.

இந்திய வங்கிக ளிடம் இருந்து வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத ஜாம்ப வான்கள் பலர் இருந்தாலும், விஜய் மல்லையாவின் இந்த ஆடம்பரக் கொண்டாட்டங்களே 

அவருக்கு எதிரான நடவடிக்கைகளை வங்கிகள் தீவிரப்படுத்த காரணமாகின. இது தான் அவரது வீழ்ச்சிக் கான மூன்றாவது காரணம்.

அடுத்து என்ன?
மல்லையா வின் யுனைடெட் ப்ரூவரீஸின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் தற்போது 5 சதவிகித த்துக்கும் குறைவாக வருவாய் ஈட்டி வருகிறது. மல்லையா யுனைடெட் ஸ்பிரீட்ஸ் நிறுவனத்தில் தனக்கிருந்த பங்குகளில் 25% டியாஜியோ விடம் விற்று விட்டார். 

இப்போது 10 சதவிகிதத்துக்கும் குறைவாகவே பங்கு வைத்திருக்கிறார். வங்கிகளுக்குத் தர வேண்டிய ரூ.7,000 கோடி கடன் இப்போது அவரது கழுத்தை நெறிக்கிறது. 

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கடன் வசூலிப்பு முகமை யிடம் மல்லையா மீது புகார் பதிவு செய்து அவரது அனைத்து சொத்துக் களையும் முடக்கி விட்டது. டியாஜியோ தருவதாக இருந்த ரூ.515 கோடி பணத்தையும் தற்காலிகமாக முடக்கியது.

இதனை அடுத்து எப்போது வேண்டு மானாலும் மல்லையா கைது செய்யப் படலாம். அவரது பாஸ்போர்ட் முடக்கப் படலாம் என்கிற பேச்சு பலமாக எழுந்தது. 
இமாலயத் தவறுகளால் சரிந்த விஜய் மல்லையாவின் சாம்ராஜ்யம் !
ஆனால் மல்லை யாவோ, ‘நான் ஒரே செட்டில் மென்டில் கடனை அடைப் பேன். நான் மோசடிக் காரன் அல்ல, ஓடி ஒளிய மாட்டேன்’ என்று உதார் விட்டார். 

அவரது வழக்கின் அடுத்த வாய்தா மார்ச் 28-ம் தேதி அன்று நடக்கிறது. அதே சமயம், மல்லையா மீது அமலாக்கப் பிரிவு கறுப்புப் பண மோசடி வழக்கும் பதிவு செய்துள்ளது. 
இனிமேல் இங்கிருந்தால் ஆபத்து என்றுணர்ந்த மல்லையா, ரகசியமாக பிரிட்டனுக்கு சென்று விட்டார்.

இனி அவர் மீண்டும் இந்தியா வுக்கு திரும்ப வருவாரா, வாங்கிய கடனை திரும்பத் தருவாரா என்பதை எல்லாம் பொறுத் திருந்து தான் பார்க்க வேண்டும்!

பங்குச் சந்தையில் மல்லை யாவின் நிறுவன ங்கள் !

யுனைடெட் ப்ரூவரீஸ் - 2002-ல் ரூ.11-க்கு தொடங்கிய இதன் பங்குகள், தற்போது ரூ.800-க்கு வர்த்த கமானது. இது அதிக பட்சமாக ரூ.1,100 வரை விலை உயர்ந்தி ருக்கிறது.
யுனைடெட் ஸ்பிரிட்ஸ் ஜனவரி 2000-ல் ரூ.295க்கு வர்த்தக மாகத் தொடங்கிய இதன் பங்கு வர்த்தகம் இன்று ரூ.2,400-ல் வர்த்தக மாகிறது. இது அதிக பட்சமாக ரூ.4,000 வரை விலை உயர்ந்தி ருக்கிறது.

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் 2006-ல் ரூ.86-க்கு வர்த்த கமாகத் தொடங் கியது. இன்று இந்தப் பங்கு வர்த்த கமாக வில்லை. இது அதிக பட்சமாக ரூ.316 வரை விலை உயர்ந்தி ருக்கிறது.
Tags:
Privacy and cookie settings