நீங்களும் கலெக்டர் ஆகலாம் | You may Become Collector !

ஆட்சியர் என்பதன் ஆங்கிலச் சொல்லே கலெக்டர் என்பது ஆகும். ஆட்சியர் (கலெக்டர்) ஆக வேண்டும் என்பது பெரும்பாலா னோரின் கனவு.
கூடுதல் ஆர்வம், விடா முயற்சி, கடின உழைப்பு இருந்தால் கலெக்டர் ஆகலாம்.


இந்தியளவில் நடத்தப் படும் சிவில் சர்வீஸ் தேர்வு, ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப் படுகிறது.

இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்திய ஆட்சிப் பணி, இந்திய அயல் நாட்டுப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வருவாய் பணி உள்ளிட்ட 24 உயர் பதவிகளில் பொறுப்பு வகிக்க முடியும்.

பிரிலிமினரி, மெயின், பர்சானலிட்டி அண்டு இன்டர்வியூ என யு.பி.எஸ்.சி.,. தேர்வு 3 கட்டமாக நடத்தப் படுகிறது.

இத்தேர்வு எழுத பட்டப்படிப்பு முடித் திருக்க வேண்டும்.

பொதுப் பிரிவினர் 21முதல் 30 வயது வரையும், ஓ.பி.சி. பிரிவினர் 33 வயது வரையும்,

எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத் தினர் 35வயது வரையும் தேர்வு எழுதலாம்.

மாற்றுத் திறனாளி களுக்கு 10 ஆண்டுகள் வரை வயதில் தளர்வு அளிக்கப் படுகிறது. ஒருவர் நான்கு முறை தேர்வு எழுதலாம்.


O.B.C., S.C., ST பிரிவினர் ஏழுமுறை எழுதலாம். பிரிலிமினரி தேர்வு இரண்டு தாள்களை கொண்டது.

முதல்தாள் பொதுஅறிவு , இரண்டாம் தாள் திறன் அறிவு. தலா 200 மதிப் பெண்கள்.

இரண்டாம் கட்டமாக நடத்தப் படும் மெயின் தேர்வு எட்டு தாள்கள் கொண்டது. கடந்த 2013-ம் ஆண்டு மெயின் தாளில் சில மாற்ற ங்கள் செய்யப் பட்டுள்ளன.

அதன்படி, முதல் பிரிவு தகுதித் தேர்வாக நடத்தப் படுகிறது. இரண்டாம் பிரிவு ஏழு தாள்கள் கொண்டது.

தகுதித் தேர்வு பகுதி – ஏ, பகுதி – பி என இரு பிரிவாக நடத்தப் படுகிறது .பகுதி-ஏ தேர்வு

இந்திய அரசிய லமைப்பு சட்டப் பிரிவு 8-ன் படி அங்கீகரிக்கப் பட்ட மொழிகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து எழுதலாம். பகுதி-பி ஆங்கிலத் தில் எழுத வேண்டும்.

இவ்விரு தேர்வுக்கும் மதிப் பெண்கள் தலா 300. தகுதித் தேர்வின் மதிப் பெண்கள், சிவில் சர்வீஸ் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் களுடன் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாது.

மெயின் தேர்வு இரு பிரிவுகளை கொண்டது. ஒன்று தகுதித் தேர்வு. மற்றொன் றில் ஏழு தாள்களை எழுத வேண்டும்.


தகுதித்தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே ஏழு தாள்களை யும் திருத்து வார்கள். தேர்வுக்கு தயாராக விரும்பு வோர் மொழிப் பாடத்தில் புலமை பெற்றி ருப்பது அவசியம்.

21 வயதில் தேர்வை எழுத ஆரம்பிப் பவர்கள் பலரும் தேர்ச்சி அடைய வில்லை என்றால் சோர் வடைந்து விடுகி ன்றனர்.

68% பேர் இரண்டு, மூன்றாவது தேர்விலே தேர்ச்சி பெறுகி றார்கள்.

முதல் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் 10%க்கும் குறைவே. எனவே, பொறுமை, விடா முயற்சி, கடின உழைப்பு இருந்தால் கலெக்டர் கனவு கைகூடும்!
Tags:

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !