அரசு விடுமுறையில் பெட்ரோல் பங்க்குகளை மூட திட்டம் !

பெட்ரோலிய பொருட்களுக்கு அறிவிக்கப்பட்ட விளிம்புத் தொகையை நிலுவையுடன் வழங்க வலியுறுத்தி அரசு விடுமுறை நாட்களில் பங்க்குகளை மூட திட்ட மிட்டுள்ளதாக தமிழ் நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்க மாநிலத் தலைவர் கே.பி.முரளி தெரிவித்தார்.
அரசு விடுமுறையில் பெட்ரோல் பங்க்குகளை மூட திட்டம் !
தமிழ்நாடு பெட்ரோலிய வணி கர்கள் சங்க சேலம் மண்டல வணிகர்கள் ஆலோ சனைக் கூட் டம் சேலத்தில் நேற்று நடந்தது. 

இதில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ண கிரி மற்றும் கரூர் ஆகிய மாவட்ட ங்களைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் பங்கேற்றனர். 

கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்க மாநிலத் தலைவர் கே.பி.முரளி கூறியதாவது:

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் கடந்த 2011-ம் ஆண்டு பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.1.20, டீசலுக்கு ரூ.1.52 கூடுதலாக வழங்க வேண்டும் என்று பெட்ரோலிய நிறுவனங் களுக்கு உத்தர விட்டது. 

ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக இந்த விளிம்புத் தொகை உயர்த்தப்பட வில்லை. கடந்த 3-ம் தேதி பெட்ரோலுக்கு லிட்டரு க்கு 9 பைசா வும், டீசலுக்கு 8 பைசாவும் மட்டுமே உயர்த்தப் பட்டது.
அரசு விடுமுறையில் பெட்ரோல் பங்க்குகளை மூட திட்டம் !
பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்த விளிம்புத் தொகை உயர்த்தப் படாததால் நாடு முழு வதும் உள்ள சுமார் 53,000 பெட்ரோல் பங்க்குகள் நஷ்டத்தில் செயல் படுகின்றன. 

எனவே, விளிம்புத் தொகையை உயர்த்தக் கோரி தொடர் போராட்ட ங்களில் ஈடுபட உள்ளோம்.

வரும் 26-ம் தேதி நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் இரவு 7 மணிக்கு தொடங்கி அரை மணி நேரம் வரை விளக்கு களை அணைத்து, விற்ப னையை நிறுத்தி எதிர்ப்பை வெளிப் படுத்துவோம்.

நவம்பர் மாதம் 3, 4-ம் தேதி களில் எண்ணெய் கொள் முதலை நிறுத்த உள்ளோம். 

அடுத்த கட்டமாக வரும் 5-ம் தேதி முதல் அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே விற்பனை நடைபெறும்.
இது தவிர அரசு விடுமுறை நாட்கள், 2-வது, 4-வது சனிக் கிழமைகள், ஞாயிற்றுக் கிழமைகளில் பங்க்குகளை மூடவும் திட்டமிட் டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Tags: