விஜய் சேதுபதியுடன் நடிக்க மாட்டேன் நட்டி நட்ராஜ் !

இந்தி, தெலுங்கில் முன்னணி படங்களுக்கு ஒளிப்பதி வாளராக பணி யாற்றி வரும் ‘நட்டி’ நட்ராஜ், தமிழில் நாயகனாக வலம் வருகிறார். 
விஜய் சேதுபதியுடன் நடிக்க மாட்டேன் நட்டி நட்ராஜ் !
சதுரங்க வேட்டை திரைப்படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இவருக்கு பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அவருடன் உரையாடியதில் இருந்து..

போங்கு படத்தின் கதைக்களம் பற்றி...

வாழ்க்கை யில் ஒரு நல்ல பட்டம் கிடைத்தால், அதை தக்க வைத்துக் கொள்ள நிறைய போராட வேண்டும். ஒரு சின்ன தவறால் தவறான பட்டம் கிடைத்தால், அது ஒரு மனிதனின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விடும். 

இது தான் படத்தின் கதைக்களம். நாங்கள் கார் நிறுவனத்தில் பணியா ற்றுவோம். ஒரு எம்.பி. வந்து காரை ‘புக்’ செய்வார். 

நாங்கள் காரை ஒப் படைக்கும் போது, எங்கள் கண் முன்னால் காரை திருடிக் கொண்டு போய் விடுவார்கள். பழி எங்கள் மீது விழ, ஜெயிலுக்கு போவோம்.
ஒருவரது விஷயத்தில் தவறு நடந்தால் கார்ப்பரேட் நிறுவனங்கள் ப்ளாக் லிஸ்ட் பண்ணி விடும். அதனால் வாழ்க்கை எப்படி மாறுகிறது, காரை திருடியது யார், மறுபடியும் எப்படி வேலைக்கு சேர்ந்தோம் என்பது தான் திரைக் கதை.

வசனங் களைப் பார்த்தால் ‘சதுரங்க வேட்டை’ சாயல் தெரிகிறதே?

ஒரு வேளை, என் வசன உச்சரிப்பு அது போன்ற தோற்ற த்தைக் கொடுக் கிறதோ, என்னவோ. ‘சதுரங்க வேட்டை’ கதைக் களம் வேறு, இதன் கதைக் களம் வேறு. 

அதே நேரம், ‘சதுரங்க வேட்டை’ மாதிரியே நல்ல வேகமான திரைக் கதை இப்படத் திலும் அமைந்தி ருக்கிறது. 

மக்களி டையே ‘சதுரங்க வேட்டை’ நல்ல வரவேற்பை பெற்றதால், இந்த ஒப்பீடு வந்து விடுகிறது. ‘எங்கிட்ட மோதாதே’ படத்தின் போஸ்டர், டீஸர் பெரும் வர வேற்பை பெற்றி ருக்கிறதே...

இது ஒரு வாழ்வியல் படம். இப்போ தெல்லாம் ஒரு காட்சி, டிரெய்லர் உள்ளிட்ட வற்றை வைத்து ஒரு படத்தில் என்ன இருக் கிறது என்று ஊகிக்க முடிகிறது. அப்போது இதெல்லாம் கிடையாது. 
அந்த காலத்தில் ரசிகர்கள், நாய கர்கள், திரைப் படங்கள் இடையே பாலமாக இருந்தது விளம்பர பலகை. திரையரங் குகளில் 80 அடி உயரத்து க்கு கட்-அவுட் வைத் திருப் பார்கள். 

அது தான் ஒரு ரசிகனை தியேட்ட ருக்குள் இழுக் கும். படத்தில் என்ன இருக்கும் என்பதே தெரியாமல், ரசிகர்கள் படம் பார்க்கப் போவார்கள். 

1987-89ம் ஆண்டுகளில் நடக்கும் கதை தான் ‘எங்கிட்ட மோதாதே’. நாயகன் வரைந்த ஒரு விளம்பர பலகை, அவனது வாழ்க் கையை மாற்றுகிறது. 

அதற்குள் இருக்கும் அரசியலைத் தாண்டி எப்படி நாயகன் வெளியே வருகிறான் என்பது திரைக் கதை. சதுரங்க வேட்டை’யைத் தொடர்ந்து பல இயக்கு நர்கள் கதை சொல்ல வந்திருப் பார்களே...

இங்கு வெற்றி மட்டுமே அனைத் தையும் தீர்மானிக் கிறது. ‘சதுரங்க வேட்டை’ படத்தோடு பல படங்கள் வெளியானாலும், அந்த படத்தைப் பற்றி இன்றும் பலரும் பேசுகிறார்கள். 

நடிப்பு, ஒளிப்பதிவு எதுவாக இருந்தாலும் வெவ்வேறு களங்களில், புதிது புதிதாக பணியாற்ற விரும் புபவன் நான். 
விஜய் சேதுபதியுடன் நடிக்க மாட்டேன் நட்டி நட்ராஜ் !
வித்தியாசமான கதையைக் கேட்டால், உடனே ஒப்புக் கொள்வேன். நான் வித்தியாசமான கதைகளை முயற்சி செய்பவன் என்று தயாரிப்பா ளர்களும் நம்புகிறார்கள். 

சதுரங்க வேட்டைக்குப் பிறகு சுமார் 100 கதைகள் கேட் டிருப்பேன். நிறைய கதைகள் ஒரே மாதிரி சாயலில் இருந்தன. 

விஜய் சேதுபதி, சிவகார்த்தி கேயன் நடிக்கும் படங்களில் எல்லாம் என்னால் நடிக்க முடியாது. அது போன்ற கதைகள் வந்தால், ‘இது செட்டாகாது. நான் நடித் தால், நம் இரண்டு பேருக்குமே பாதிப்பு’ என்று சொல்லி தவிர்த்து விடுவேன்.

தமிழில் அவ்வளவாக ஒளிப்பதிவு செய்வ தில்லையே..

பெரிய படங்களே வந்தாலும், நல்ல படங்களை மட்டுமே ஒப்புக் கொள்கி றேன். நான் முழுக்க முழுக்க கதையை மட்டுமே நம்புகிறவன். 

தமிழ் திரையு லகில் நல்ல படங்களின் ஒளிப்பதிவுக்கு என்னை அணுகவில்லையே என்ற வருத்தம் இருப்பது உண்மை தான். இப்போது தமிழில் நடிகனாக மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். 
மற்ற திரையு லகில் ஒளிப்பதிவு செய்கிறேன். நான் ஒளிப்பதிவாளராக ஒரு விஷயத்தைச் சொல்வதை விட நடிகனாக சொல்வது தான் பெரிய அளவில் பேசப்படுகிறது. 

தமிழ் திரையு லகில் முதலில் என்னை ஒளிப்பதிவாளராக கூட யாரும் பார்க்க வில்லை. இந்தி பட ஒளிப்பதிவாளர் என்று நினைத் தார்கள். நான் நடிகனான பிறகு தான், ‘அட இவர் பெரிய ஒளிப்பதிவாளர்’ என்றார்கள். 

நான் கடந்து அடுத்த கட்டத்து க்குப் போன பிறகு தான், முந்தைய கட்டத் துக்கு அங்கீகாரம் கொடுக்கி றார்கள். அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வ தில்லை. எல்லாம் கலந்தது தான் திரையுலகம்.
Tags: